♥PCOS என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு ஹார்மோன் பிரச்சனையாகும். இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் என்பதன் சுருக்கமாகும்.
♥பல பெண்கள் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை, உடல் பருமன் கொண்டவர்களாக இருப்பார்கள், இதனால் இதய, நீரிழிவு, மற்றும் கருப்பைப் புற்றுநோய் போன்றவை வரும் அபாயம் இவர்களுக்கு அதிகம்.
♥உடல் எடைக்கும் PCOS பிரச்சனைக்கும் இடையேயான தொடர்பு சிக்கலானது, இன்சுலின் அதிகமாக இருப்பது ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண் ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாக வழிவகுக்கலாம். .
♥ இதனால் இடுப்புப் பகுதியில் எடை அதிகரிக்கிறது, இந்த ஹார்மோன்களால் பொதுவாக ஆண்களுக்கு இடுப்புப் பகுதியில் தான் எடை அதிகரிக்கும். கொழுப்பிலேயே, அடிவயிற்றுக் கொழுப்பு மிகவும் ஆபத்தான வகைக் கொழுப்பாகக் கருதப்படுகிறது, இது பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயத்தை ஒருவருக்கு உண்டாக்குகிறது
♥PCOS இருப்பவர்கள் உடல் எடையைக் குறைக்க உதவக்கூடிய சில வழிமுறைகள்:
♥உடல் எடையைக் குறைப்பதற்கு என்று மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் எடையைக் குறைக்க உதவக்கூடும். ஆண்ட்ரோஜன் எதிர்ப்பு மருந்துகள், நீரிழிவுநோய் வராமல் தடுக்க உதவுகின்ற மெட்ஃபார்மின் ஆகியவை பரிந்துரைக்கப்படும் சில மருந்துகளாகும்.
♥உணவில் மாவுச்சத்தைவிட புரதங்கள் அதிகம் சேர்த்துக்கொண்டால், விரைவில் எடை குறைய உதவும்.
♥நார்ச்சத்துள்ள உணவுகள்: பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
♥ குறைந்த சர்க்கரை மற்றும் குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளும் மிகவும் உதவக்கூடும்.
♥உங்கள் கலோரிகளைக் கண்காணியுங்கள்: PCOS உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க, நாளொன்றுக்கு 1200-1500 கிலோகலோரி என்ற வரையறை கொண்ட உணவுத்திட்டம் உதவும்
♥உடற்பயிற்சி உடலின் ஒட்டுமொத்த நன்மைக்கும் உதவும், அத்துடன் திட்டவட்டமான கலோரி உணவுக் கட்டுப்பாட்டையும் பின்பற்றினால் மிகுந்த பலன்கள் கிடைக்கும்.
♥PCOS உள்ளவர்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களைப் புகுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைப்பதே சிறந்த வழி, ஆனால் பிரச்சனை தீவிரமாக இருந்தால் அதற்கேற்ப தீவிரமான நிவாரணம் தேவைப்படும், அந்நிலையில் மருந்துகளே சிறப்பாக உதவக்கூடும். PCOS இருக்கும்போது எடையைக் குறைப்பது கடினம்தான.

0 Comments
YOUR COMMENT THANKYOU