Subscribe Us

header ads

பெண்களின் #சுய_இன்ப பழக்கம் ஒரு பார்வை :

பெண்களின் #சுய_இன்ப பழக்கம் ஒரு பார்வை :

சில ஆபத்தும் உண்டாகும் பெண்களின் சுய இன்ப பழக்கத்தால் கட்டாயம் முழுவதுமாக படிக்கவும்..

அதிகமாக ஆண்களின் சுய இன்ப பழக்கம் பற்றித்தான் எல்லோரும் கேள்விப் பட்டிருப்போம் படித்திருப்போம் .பெண்கள் இதை பற்றி தெரிந்துகொள்ள அவ்வளவு வாய்ப்பு குறைவு அதைப் போக்கவே இந்த பதிவு .

விளையாட்டாக ஏற்பட்ட பழக்கம்தான் நாளடைவில் மன உளைச்சலை ஏற்படுத்திவிடும் .

என்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண் 35 மதிக்கதக்கவர். அவரின் திருமணம் ஆன நாள் முதல் உடலுறவில் இன்பம் அடைந்ததே இல்லையாம்.பல சிகிச்சை எடுத்தும் பயனில்லாத நிலையில் என்னிடம் வந்தார்..4 வது நாள் சந்திப்பில்தான் அவரது பிரச்சனையை கண்டுபிடிக்க முடிந்தது..காரணம் அவர் சிறு வயதில் #விரல்கள் மற்றும் கேரட் #வெள்ளரிக்காயை பயன்படுத்தியுள்ளார் இதன் காரணமாக பெண் உறுப்பில் உள்ள மிக மெள்ளிய உணர்வு நரம்புகள் சேதமடைந்ததால் இன்பமே கிடைக்காத நிலையை அடைந்துவிட்டார்..தற்போது கணவருக்கும் அவருக்கும் இதன் காரணமாக சண்டைகள் வருகிறதாம். துளி இன்பத்திற்காக பெரும் சுகத்தை இழந்து தவிக்கிறார்..

#பெண் உறுப்பு மிக மெல்லிய உறுப்பு அதில் கடினமான பொருட்கள் காய்கறிகளை வேறு பொருட்கள் விடுவதை #தவிர்க்கவும்.

சுய இன்பம் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள :

பொதுவாக பெண்களுக்கு, 13-14 வயதில், உடலில், சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். குரல் உடைவது, கை இடுக்கு மற்றும் பிறப்பு உறுப்பின் அருகில் முடி வளர்வது, மார்பகம் பெரிதாவது, இடுப்பு எலும்பு சற்று விரிவடைவது, முகத்தில் அங்கங்கு பருக்கள் வருவது... என்று, இயற்கை, அவள், 'பெரிய பெண்ணாக' மாறிக் கொண்டிருப்பதை உணர்த்தும்.
பிறப்பு உறுப்பில் ஏதோ இனம் தெரியாத உணர்வு... தொட்டால் சந்தோஷம் தருகிற மாதிரி உணர்வு வரும். சில பெண்களுக்கு பூப்படைவதற்கு முன்னரே இம்மாதிரியான உணர்வுகள் வரலாம். இவைகள் அனைத்தும், உடலில் ஏற்படக் கூடிய மிகச் சாதாரண விஷயங்கள்.
பொதுவாக, பருவம் அடைந்த பெண்களில், 15-20 சதவீதம், ஏதாவது ஒரு வழியில், 'இப்பழக்கத்தை'தினந்தோறும் கடைபிடிக்கின்றனர் என்கிறது மருத்துவ ஆய்வு. இந்த ஆய்வு, திருமணம் ஆகி, குழந்தை பெற்ற பெண்களையும் விட்டு வைப்பதில்லை என்றும் கூறுகிறது. இதை, 'செக்ஸ் பேன்டசி' என்று அழைப்பர். பெண்கள் மத்தியில், இது, மிக மிகச் சாதாரணமான செயல். எனவே, குற்ற உணர்வு தேவையில்லாதது.
ஆனாலும்... ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் . எந்த வழிமுறைகளைக் கையாள்கிறோம் என்பதை பொறுத்துத்தான் பிற்காலத்தில் திருமணமாகி, கணவருடன், தாம்பத்ய உறவில் ஈடுபடுவது மற்றும் நல்ல முறையில் குழந்தையைப் பெற்றுக் கொள்வது எல்லாம் இருக்கிறது.

நகரங்களில் வாழும் ஒரு சில இளம் பெண்களும், குறிப்பாக கல்வி பயிலும் மாணவிகள், குடும்ப பளு காரணமாக பணிக்குச் செல்லும் பெண்கள் என, இப்படி பலர், 'பலான' பத்திரிகைகளைப் படித்தோ அல்லது பலான திரைப்படங்களை பார்த்தோ, மிகத் தவறான விவரங்களை, எண்ணங்களை வைத்துள்ளனர்.
இன்னும் சில பெண்கள், உடன் இருக்கும், தோழிகளின் வற்புறுத்தலின் பேரில், சில தேவையற்ற காரியங்களை செய்யும்போது, பெண்களின் பிறப்பு உறுப்பு சேதம் அடைய வாய்ப்புகள் அதிகம்.
இவைகள் தான், பிற்காலத்தில், உடல்ரீதியான பிரச்னைகளை உருவாக்கும். #பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து கர்ப்பப்பையும், 'பெலோப்பியன் டியூப்' மற்றும் 'ஓவரி' எல்லாம் சற்று தள்ளியே உள்ளே அமைந்திருப்பதால், சுய இன்பப் பழக்கத்திற்கும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, கவலை கொள்ள வேண்டாம்.
திருமணத்திற்கு பின், ஆண்-பெண் செக்ஸ் உறவு கிடைத்த பிறகு, இந்த சுய இன்பப் பழக்கத்தை விட்டு விடும் வாய்ப்புகள் அதிகம்.
பல்வேறு குடும்ப பிரச்னையால், சரியான வயதில் திருமணமாகாத பெண்கள், இளம் வயதிலேயே கணவனை இழந்து, மறுமணம் செய்யாமல் விதவையாக வாழும் பெண்கள், கணவன் இருந்தும், அவர் ஏதோ காரணத்தால் உடல் உறவிற்கு வாய்ப்புகளே இல்லாமல் போகும் சூழல்... இது போன்ற நிலைகளில் பெண்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வடிகால்தான், சுய இன்பம்!
இனி, எந்த, ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும், நமக்கு, 'செக்ஸ்' கிடைக்கப் போவது கிடையாது என்ற நிலை வரும் போது, உடலிலும், மனதிலும் அதிகமாக பாதிப்பு ஏற்படும். அதை சமாளிக்க, இயற்கை கொடுத்த வழிமுறையே சுயஇன்ப முறைகள்.

சுய இன்பத்தால் ஏற்படும் சில பாதிப்புகள் :

1. பிறப்பு உறுப்பு சேதம் அடைதல். #கற்பபை பாதிப்பு
2. விரல்களில் நகத்தோடு பயன்படுத்துவதால் ஏற்படும் கீறல்களின் வழியாக சில ( Urinary Infections ) நோய் #தொற்று கிருமிகள் பரவலாம் .புண்கள் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது .
3. ஒன்றுக்கு மேற்பட்ட விரல்களை விடுதல் , பெரிய அளவிலான பொருட்கள் காய்கறிகளை பயன்படுத்துவதால் #பெண்ணுறுப்பு பகுதி விரிவடைவதால் திருமண வாழ்வில் இன்பத்தை குறைக்கும் .
4. மிக முக்கியமாக கன்னித்திரை கிழிந்துவிடும் .
5. இந்த சுய இன்ப பழக்கத்தினால் மனக் குழப்பங்கள் ,பயம் ஏற்பட்டு படிப்பில் பணிகளில் கவனக்குறைவு வரலாம் .

தவறான கதைகள் படிப்பது ,படங்கள் பார்ப்பது தவறான அரட்டைகள் தோழிகளின் தவறான அனுபவ பகிர்வினால் இது போன்ற பழக்கங்கள் ஏற்படுகின்றன .
மற்றும்
தனிமையில் இருந்தால் இந்த நினைப்பு வருகிறது. எனவே தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை தவிர்க்கலாம் ஆன்மீகத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது.
திருமணம் ஆவதற்கு முன் பெண்களின் உடல் பாதுகாப்பு ,கர்ப்ப காலத்தில் எப்படி இருப்பது உணவுமுறை ,உடற்பயிற்சி , குழந்தை வளர்ப்பது, மற்றவர்களிடம் சுமூகமான உறவை வளர்த்து கொள்வது போன்ற புத்தகங்களை படிக்கலாம் ..

Post a Comment

0 Comments