விவேகானந்தர் காமத்தை அடக்கி கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.
ஓஷோ காமத்தின் வழியாக இறைவனை அடைய வேண்டும் என்கிறார்.
எதைப் பின்பற்றுவது என்று இளைஞர்களுக்கு, (குறிப்பாக ஆன்மீகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு), மிகவும் குழப்பமாக இருக்கும்.
.
ஒன்று சொல்கிறேன் பெருமக்களே...!
.
நீங்கள் குழந்தையாக இருந்த போது மிட்டாயின் மீது அளவு கடந்த ஆசை இருந்தது. அது நீங்கள் வளர்ந்த பின் நீர்த்துப் போய் விட்டது.
.
நீங்கள் சிறுவனாக இருந்த போது, அலங்காரம் மீதும் ஆடை ஆபரணங்கள் மீதும் அளவு கடந்த ஆசை இருந்தது. அது கூட நீங்கள் சற்று முதிர்ச்சி பெற்ற பின் நீர்த்து போயிருக்கும்.
.
நீங்கள் இளைஞனாக இருந்த போது, கல்வியின் மீதும், வேலையின் மீதும், குறிக்கோளின் மீதும் மிகப் பெரிய தீவிர ஆசை இருந்திருக்கும். ஒரு கட்டத்தில் அதுவும் நீர்த்துப் போயிருக்கும்.
.
ஆனால், பருவம் வந்த காலம் தொட்டு, பல்லக்கில் ஏறும் காலம் வரை ஒவ்வொரு நொடியும் ஒரு சராசரி மனிதனின் மூளையை அக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய ஆசை தான் - காமம்.
.
அது எப்போது நீர்த்துப் போகப் போகிறது?
.
யோசித்தீர்களா?
.
"காமம் தவறில்லை...
காமம் தவறில்லை...
அதன் மூலம் தான் இறைவனைக் காண வேண்டும்",
- என்று நிறைய பேர் இதே முகநூலில் பதிவிடுகிறார்கள். (எனக்கும் இன்பாக்ஸ் செய்கிறார்கள்).
.
அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, அவர்கள் அந்த வாதத்தில் விடாப்பிடியான தர்க்கம் செய்து வெற்றி பெற்றாலும் சரி, அவர்கள் இன்னும் காமம் என்கிற ஆசையில் நீர்த்துப் போகாத மனிதர்களாக இருக்கிறார்கள் என்பது திண்ணம்.
.
அப்படியென்றால், காமம் தவறா?
.
நிச்சயமாக இல்லை.
.
மிட்டாய் தவறா?
ஆடை ஆபரணங்கள் தவறா?
வாழ்க்கையின் குறிக்கோள் தவறா?
பணம் சம்பாதித்தல் தவறா?
.
அல்ல.
.
இவை எல்லாம் சின்ன சின்ன எக்ஸெர்சைஸஸ் (exercises).
.
நீ உன் 60 வயதில் இருக்கும் போது மிட்டாய் கொடுத்தால், உனக்கு அதன் மீது துளி கூட பற்று இல்லாமல், தந்ததற்காக வாங்கி உண்பாய். அந்த நிலை, காமத்தின் மீது எப்போது வரப்போகிறது என்பது தான் ஆன்மிகம் உனக்கு வைக்கும் செக் பாய்ண்ட் .
.
ஒரு வேளை இந்தப் பிறவி முழுவதும் உன் காம ஆசை நீர்த்துப் போகாமலேயே இருக்கலாம். அப்படி இருந்தால், (பெருமக்களே, புரிந்து கொள்ளுங்கள்), அப்படி இருந்தால், அதற்காகவே நீங்கள் மறுபிறப்பு எடுப்பீர்கள்.
.
ஆக, விவேகானந்தர் சொன்னதும், ஓஷோ சொன்னதும் - இரண்டுமே சரி தான்.
விவேகானந்தர் - மிகவும் கண்டிப்பான பள்ளிக்கூட ஆசிரியர் போல் சொல்லி இருக்கிறார்.
ஓஷோ நம் மாமன் மச்சான் சொல்வது போல் சுலபமாக சொல்லி இருக்கிறார்.
.
காமத்தை நீர்த்துப் போக நாம் நிச்சயமாக மனதளவில் ஒர்க் அவுட் செய்தே ஆக வேண்டும். எப்படிச் செய்யப் போகிறோம்?
.
இதைப் பற்றிய என்னுடைய சிறு ஆராய்ச்சியையும், அனுபவத்தையும் நான் அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
வாசித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி...
ARUPATHU ONBATHU
TAMIL69COM
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
TAMIL69COM
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69

0 Comments
YOUR COMMENT THANKYOU