Subscribe Us

header ads

உங்கள் உடல் நலம் இயற்க்கையில்.. மூலாம் பழம்.



உங்கள் உடல் நலம் இயற்க்கையில்..
மூலாம் பழம்.
மூலாம் பழத்தை ஆங்கிலத்தில் மஸ்க்மெலன் (Muskmelon) என்று அழைப்பர். இதில் கிட்டத்தட்ட 40 வகைகள் உள்ளன. அவற்றில் 7 வகைகள் இந்தியாவில் பயிரிடப்டுகிறது. கிர்னிபழம், முள்வெள்ளரி போன்றவைகள் முலாம் பழத்தின் வகைகள் ஆகும்.
யுனானி மருத்துவத்தில் பழம் மற்றும் இதில் காணப்படும் விதைகள் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.
முலாம் பழத்தில் விட்டமின் சி மற்றும் ஏ அதிகளவில் காணப்படுகிறது.
மருத்துவ பயன்கள்:
1. சிறுநீரக கற்களுக்கு:
சிறுநீர் பாதையில் கற்களை உடைத்து வெளியேற்றம் தன்மைக் கொண்டது. பழம் மற்றும் விதைகள் இரண்டும் இதற்க்கு சிறந்த நிவாரணியாகும்.
2. சிறுநீரகத்தை சீராக வைப்பதற்க்கு:
முலாம் பழமும், அதன் விதைகளும் சிறுநீர் பெருக்கிகளாகும். ஆகவே சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கிறது. சிறுநீரகத்தை சீராக செயல்பட உதவுகிறது.
3. சிறுநீர் பாதையில் எரிச்சல், கடுப்பு உள்ளவர்கள் இதனை உண்டால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
4. உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.
5. முலாம் பழம் மலச்சிக்கலை நீக்குகிறது.
6. மகளிர் நோய்களுக்கு:
முலாம் பழம் விதைகள் மாத விடாயை சீர் செய்கிறது. ஆகவே மாத விடாய் கோளாறுகளை சரி செய்ய தினமும் 10 கிராம் காலையும் மாலையும் உண்பதால் மாத விடாய் சீராகும். மேலும் வெள்ளைபடுதல் போன்றவற்றை போக்கும்.
7. உடல் பருமனை தடுக்கிறது. இதில் அதிக புரத சத்து மற்றும் கொழுப்பு சத்து இல்லாததாலும் அதிகமாக நார் சத்து உள்ளதால் உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
8. ஆண்மை குறைவிற்க்கு நிவாரணி. முலாம் பழ விதைகள் விந்தில் உயிரணுக்களை அதிகரிக்கிறது மற்றும் அதன்
தன்மையை வலுப்படுத்துகிறது.
9. தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த பின் தாய் பால் சுரப்பை அதிகரிக்கிறது. ஆகவே முலாம் பழ விதைகளை குழந்தை பிறந்த பின் உண்பது நல்லது.
10. கல்லீரல் நோய்களுக்கு, வயிற்று மற்றும் குடல் புண்களுக்கு, குடல் புழுக்களுக்கு மூலாம் பழ விதைகள் மிகச் சிறந்தது.
11. முலாம் பழ விதைகளில் cucurbitacin B எனப்படும் வேதிப் பொருள் புற்று நோய் நிவாரணியாக உள்ளது என்று ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பு:
முலாம் பழம் 200 கிராம் வரை உண்ணலாம். விதைகள் 2-6 கிராம் காலையும் மாலையும் மருந்தாகவோ சிற்றுண்டியாகவோ உண்ணலாம்.
ஆஸ்துமா உள்ளவர்கள் முலாம் பழத்தை தவிர்ப்பது நல்லது.





#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69


Post a Comment

0 Comments