♥#மாதவிலக்கு சார்ந்த பிரச்சனைகள்
( முழுமையான பார்வை )
#குறைந்தளவு_உதிரப்போக்கு :
♥குறைந்த அளவு உதிரப்போக்கு ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக மன அழுத்தம். இதன் காரணமாக மூளையின் ஒரு பகுதியான ஹைபோதலாமஸ் பாதிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதாவது அதிக மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருக்கும்போது, உடல் எடை தடாலென்று குறையும்போது, உடல் கொழுப்பு பெரிதும் குறையும்போது எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரந்து விடுவதால் ஹைபோதலாமஸின் செயல்பாட்டை தடுக்கலாம். தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு இருந்தாலும், ரத்த சோகை, சிறுநீரக வியாதி, இதய வியாதி போன்றவற்றினாலும் உதிரப்போக்கு குறையலாம். உங்கள் இரத்தப்போக்கு மூன்று நாட்களுக்கு குறைவாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
#அதிகப்படியான_உதிரப்போக்கு :
♥அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கு ஒரு பொதுவான கவலையாக இருந்தாலும், பெரும்பாலான பெண்களுக்கு மெனோரோகியாக வரையறுக்கப்பட வேண்டிய அளவுக்கு கடுமையான இரத்த இழப்பு ஏற்படாது. உதிரப்போக்கு பொதுவாக 7 நாட்கள் என்பது சாதாரணமான ஒன்று. ஆனால், இதற்கு மேல் தொடருமேயானால் அதனை கடுமையான உதிரப்போக்கு என்பார்கள். கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கு பலவிதமான உடல் பிரச்சனைகள் காரணமாக ஏற்படலாம். உங்களுக்கு அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்கு இருந்தால் உங்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும். வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவை அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கிற்கு முதன்மைக் காரணங்களாக உள்ளது. கர்ப்பபை அதிக சதை வளர்ச்சி, கர்ப்பபை கட்டிகள், சினைப்பை கட்டிகள், தசைநார்க் கட்டிகள் கூட காரணமாக இருக்கலாம். பெண்கள் தங்களின் அன்றாட உணவில் அதிக இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அதிகப்படியான உதிரப்போக்கு நீண்ட நாட்கள் தொடர்ந்தால், கருப்பை சோதனை ஸ்கேன் செய்து தெரிந்து கொண்டு இதன் மூலமாக வரும் அனீமியா (ரத்த சோகை) குணப்படுத்தி அவற்றிலிருந்து முழுமையான விடுதலை பெறலாம்.
#வெள்ளைப்படுதல் :
♥சிறுவயதில் மாதவிடாய் துவக்கத்தின் முதல் அறிகுறி வெள்ளைப்படுதல். பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். இது மிகவும் இயற்கையான ஒன்று. ஆனால் வெள்ளைப்படுதல் மிகவும் துர்நாற்றத்துடனோ, அரிப்புடனோ, மாறுபட்ட நிறத்துடனோ கூடிய நிலை வந்தால் மருத்துவரை நாடி ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்.
♥எந்தவொரு அறிகுறிகளோ அல்லது பிரச்சனையோ இல்லாமல் சில பெண்களுக்கு வெண்மையான அறிகுறிகளைக் கொடுக்கின்றன. ஆனால் மலச்சிக்கல், சிவத்தல், வயிற்று வலி, இடுப்பு வலி, அரிப்பு போன்ற பல அறிகுறிகளுடன் வெள்ளை வெளிப்பாடு கொண்டிருக்கும் பல நபர்கள் உள்ளனர். இந்த எல்லா பிரச்சனைகளிலிருந்தும் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், மருத்துவருக்கு முன் சில வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.
#வெள்ளைப்படுதல்_காரணங்கள் ♥உணவுப் பழக்கங்கள். மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல்.அதிக கோபம், வெறுப்பு.மன உளைச்சல்.ரத்த சோகை.தூக்கமின்மை.மனக்கவலை.வீட்டு வைத்தியம்
♥அன்னாசிப்பழம், நெல்லிக்காய், வெந்தயம், பப்பாளி, வாழைப்பழம், வெண்டைக்காய், கொத்தமல்லி போன்றவையை உணவுடன் தினமும் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும்.
#ஒழுங்கற்ற_மாதவிடாய் :
♥பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது 28 முதல் 32 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும். மாதவிடாய் சீராக இல்லாமல் அதிக நாட்கள் கழித்தோ அல்லது குறைவான நாட்களிலோ அடிக்கடி மாதவிடாய் வந்தால் மருத்துவரை அணுகி, அதனுடைய காரணத்தை தெரிந்து கொள்ளுதல் அவசியமான ஒன்றாகும்.
♥இன்றைய காலகட்டத்தில் நிறைய பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருக்கிறது. நூற்றில் 80 பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியானது சற்று தாமதமாக ஏற்படும். சிலருக்கு 2 மாதங்கள் முதல் 6 மாதங்கள் கூட தள்ளி போகும். இந்த பிரச்சனையால், பிற்காலத்தில், அவர்களுக்கு குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி உடல் எடையும் அதிகரிக்கும்.
#மாதவிடாய்_வருவதற்கு_முன் #வரும்_பிரச்சனைகள் :
♥மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரம் முன்பே சில பெண்களுக்கு பல பிரச்சனைகள் தொடர்ச்சியாக வரும். தலைவலி, முகப்பருக்கள், மன அழுத்தம், கை, கால் குடைச்சல், மார்பக வலி மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இதற்கு ஹார்மோன் மாற்றங்களே காரணமாகும். மாதவிடாய் கால்த்தில் தேவையற்ற கோபங்கள் அதிகம் ஏற்படும். இதனை சமாளிக்க செய்ய வேண்டிய குறிப்புகள் பற்றி காண்போம்.
#கற்றாழையில்_மிளகு :
♥கற்றாழையின் ஜெல்லை நன்றாக கழுவி 1 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிட்டிகை மிளகுப்பொடியை கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டால் மாதவிடாயின் போது வரும் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
#கொழுப்பை_குறைத்தல் :
♥மாதவிலக்கு வரும் 15 நாட்களுக்கு முன்பிலிருந்தே கொழுப்பு உணவுகளை குறைக்க வேண்டும். இவை கல்லீரல் செயலை குறைக்கச் செய்யும். ஆகவே கொழுப்பு குறைந்த உணவுகளை உண்ணவும்.
#சோடியம்_கொண்ட_உணவுகள் :
♥உடலுக்கு சாதரணமாகவே சோடியம் நல்லது இல்லை. அதிலும் மாதவிடாய் வரும் சமயத்தில் சோடியம் அதிகம் எடுத்துக் கொண்டால் அதிக கோபம், மன அழுத்தம் உண்டாகும். ஆகவே உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல் நல்லது.
#வாழைப்பழம் :
♥வாழைப்பழம் அதிக பொட்டாசியம் கொண்டவை. இதயத்திற்கும் நல்லது. நரம்பு மண்டலத்திற்கு உற்சாகம் அளிக்கும். ஆகவே தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவதை கடைபிடிப்பது நன்மை பயக்கும்.
#க்ளேமாஸ்க் :
♥மாதவிலக்கு வருமுன் உங்கள் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் வடியும். இதனை தவிர்க்க சிறந்த வழி முல்தானி மட்டி போன்ற க்ளே மாஸ்க். இவை அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை உடையது. மேலும் இது மனதிற்கும் புத்துணர்வு தரும்.
#முகப்பரு_க்ரீம்கள்_வேண்டாம் :
♥மாதவிடாய் வருவதற்கு முன் உங்கள் சருமம் மிக மிருதுவாகவும், சென்ஸிடிவாகவும் இருக்கும். அப்போது நீங்கள் தடவும் முகப்பரு க்ரீம்களின் ரசாயனங்கள் சருமத்தில் எதிர்விளைவை தரும். ஆகவே அவற்றை தவிர்ப்பது நல்லது.
#இளம்வயதில்_மாதவிடாய்_பிரச்சனை :
♥மாதவிடாய் சுழற்சியானது இளம் வயதிலயே சரியாகவும், சீராகவும் நடைபெறாவிட்டால், பிற்காலத்தில் கருத்தரிக்கும் போது பிரச்சனையை உண்டாக்கும். எனவே இத்தகைய பிரச்சனையை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட வேண்டும். இதற்காக மருந்து மாத்திரைகள் போன்றவற்றை மேற்கொள்வதை விட, இயற்கை முறைகளைப் பின்பற்றி சரிசெய்து விடலாம்.
♥பொதுவாக இந்த பிரச்சனை இளம் வயதில் ஏற்படுவதற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டால், மாதவிடாய் சுழற்சியை சீராக்கலாம். அதுமட்டுமின்றி வேறு சில போதிய சத்துக்கள் உடலில் இல்லாததும் மற்றொரு காரணம்.
#மாதவிடாய்_நிறுத்தம் / #மெனோபாஸ் :
♥பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உடல் உள், வெளி உறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற ஒரு பருவ உடல் மாற்றம் தான் மாதவிடாய் நிறுத்தம். ஒரு பெண்ணுக்குத் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கும் அதன்பின்னரும் மாதவிடாய் வராமல் முற்றிலும் நிற்பது மாதவிடாய் நிறுத்தம் ஆகும். பொதுவாக 45-55 வயதுகளுக்கு இடையே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகின்றது. சில நேரங்களில் மிகச் சிறிய வயதிலேயே மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகின்றது. சினைப் பையில் நீர்க்கட்டிகளும் இதர புற்று நோயற்ற கட்டிகளும் வளரலாம். இதனாலும் சினைப்பை செயலிழந்து விடுவதாலும் மாதவிடாய் நின்றுவிடலாம்.
#இறுதிமாதவிடாய்_அறிகுறிகள் #மனநிலை ♥மாற்றம்.சோர்வு.கவலை/ தவிப்பு.இரவில் அதிக வியர்வை.மார்பகத்தில் வலியுணர்வு.தலைவலி.எடை அதிகரிப்பு.அதிகமாக முடி கொட்டுதல்.தூக்கமின்மை.மூட்டு வலி.விரைவான இதய துடிப்பு.ஞாபகசக்தி குறைதல்.xz

0 Comments
YOUR COMMENT THANKYOU