மனைவி குழந்தைகளை கொலைசெய்து விட்டு கள்ள காதலனுடன் ஓடடம் இப்படி தினசரி பத்திரிகைகளில் பார்க்கிறோம் எல்லாம் எல்லாமே பாலியல் சார்ந்த விடயம் தான்
பல இல்லங்களில் மனதிற்குள்ளேயே ஆண், பெண் இருவராலும் புதைத்து வைக்கப்படும் ஒரு சோக நிகழ்வு இது. சில விளக்கங்களை பதிலாகத் தருகிறேன்.
ஒரு ஆணுக்கு உறவில் உச்சகட்டம் என்பது விந்து வெளியேறும் தருணம். ஆனால் ஒரு பெண்ணின் உச்சநிலையை அந்தப் பெண்ணால் மட்டுமே உணர முடியும். உடனிருக்கும் ஆணாலும் அதைக் காண முடியாது. அந்தப் பெண்ணாலும் அதை எளிதாக விளக்க இயலாது. இருபாலருக்குமே விவரிக்க இயலாத இன்பத்தை சில நொடிகள் அள்ளித்தரும் தருணம் அது. அடி வயிற்றிலிருந்து பிறப்பு உறுப்பு வரை உள்ள தசைகள் சுருங்கி விரிந்து இன்பம் பரப்பும்.
பொதுவாக ஆண்கள் விரைவாக உச்சம் அடைவார்கள். காரணம் அவர்களது மனம், உடல் இரண்டும் காதல் மற்றும் காமத்தில் வெளிப்படையாக ஆர்வமுடன் ஈடுபடுவதால் விரைவில் உச்சகட்ட இன்பம் கிடைத்துவிடும். பெண்கள் (பொதுவாக) தங்கள் மனதிலுள்ள ஆர்வத்தை அதிகமாக வெளிக்காட்டுவதில்லை. கூச்ச உணர்வுடன் தங்களை கட்டுப்படித்திக் கொள்வார்கள். அதிகமாக பேசவேண்டும், தழுவவேண்டும், கொஞ்சவேண்டும் என்று ஆர்வம் காட்டுவார்கள். படிப்படியாக காமத்தில் தங்களை ஈடுபடித்திக் கொண்டு உச்ச நிலைக்குச் செல்வார்கள். இருவரும் இணைந்திருக்கும் பொழுது ஆண் விரைவில் உச்சமடைந்து சோர்ந்து விட்டால் அந்தப் பெண் விரக்தி அடைவார். இதை ஆங்கிலத்தில் Premature Ejaculation (PME), தமிழில் விந்து முந்துதல் என்று சொல்வார்கள். உறவில் அதிக ஆர்வம், அதிக பதட்டம் அல்லது பயத்துடன் உறவில் ஈடுபடுதல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு உறவு கொள்ளுதல், உறவுக்கு முந்தைய இன்பங்களில் ஈடுபடாமல் நேரடியாக புணர்ச்சியில் இறங்குதல் இவை தவிர சில ஆண்களுக்கு காரணம் இல்லாமலும் இந்த நிலை ஏற்படும்.
இதற்குத் தீர்வு என்ன?
ஆண்களுக்கு எனது அறிவுரை:
அவசரமாக, பதட்டமாக உறவு கொள்ளாதீர்கள். ஆரவம் இருக்கட்டும், வெறி வேண்டாம். சௌகரியமான பாதுகாப்பான இடங்களில் உங்கள் இன்ப விளையாட்டுகள் நடக்கட்டும். உங்கள் மனைவியுடன் நிறைய காதல் வார்த்தைகள் பேசுங்கள். முத்தங்களை அள்ளிக் கொடுங்கள். அவரை வர்ணியுங்கள். கண்களால் அவர் அழகைக் கண்டு களியுங்கள். உங்கள் கைகளும் பேசட்டும். உதடுகளால் அவள் உடலை அளவிடுங்கள். கை பட்ட இடங்களையெல்லாம் உதட்டாலும் நாவாலும் வருடுங்கள். உங்களுக்கு முன் உங்கள் மனைவி உச்சமடைவார். பிறகு சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும் தொடங்குங்கள். இப்படி இரண்டு மூன்று முறை செய்து மனைவியை மகிழ்வித்து விட்டு செயலில் இறங்குங்கள். நீங்கள் உச்சமடையும் போது உங்கள் மனைவியும் இன்பத்தில் மிதந்து கொண்டிருப்பார்.
பெண்களுக்கு:
உங்கள் கணவருக்கு விரைவாக இன்பம் ஏற்பட்டு சோர்வடைந்து விடுகிறாரா? அவர் மேல் கோபப்படாதீர்கள். அவரைத் திட்டாதீர்கள். மாறாக அவரைத் தேற்றுங்கள். காதலுடன் உங்களை அவர் தழுவும்பொழுது அவருடைய ஆண்உறுப்பில் உங்கள் கையோ அல்லது உடல் உறுப்புகளோ உராயாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆண் உறுப்பை நீங்கள் தொட்டாலோ அசைத்தாலோ விரைவில் விந்து வெளியேற வாய்ப்புகள் அதிகம். இருவரும் நன்கு காதலில் ஈடுபட்ட பிறகே உங்கள் கவனம் அவருடைய ஆண் உறுப்பின் மேல் செல்லவேண்டும். அது வரை அவர் உங்களை சந்தோஷப்படுத்தட்டும்.
ஆண் உறை உபயோகப்படுத்தினால் விந்து வெளியேறுவது சிறிது தாமதப்படும்.
நீங்கள் மேலாகவும் உங்கள் கணவர் கீழாகவும் படுத்துக்கொண்டு உறவு கொள்ளுங்கள். உச்சம் தாமதமடையும்.
ஒரு முறை விந்து வெளியேறினாலும் சில நிமிட இடைவெளிக்குப் பிறகு பெரும்பாலான ஆண்களுக்கு விறைப்பு ஏற்பட்டு மீண்டும் உறவு கொள்ள முடியும். அவரை இரண்டாவது முறை புணர்வதற்குத் தயார்படுத்துவது உங்கள் கையில் தான் இருக்கிறது. காதலுடன் பேசியும் கைகளாலும் உதடுகளாலும் இன்பம் ஏற்படுத்தியும் அவரை வழிக்குக் கொண்டு வாருங்கள். இரண்டாவது முறை உறவில் ஈடுபடும்பொழுது பெரும்பாலான ஆண்கள் நீண்ட நேரம் உறவு கொள்வார்கள். இரண்டாவது முறையும் அவர்கள் தோற்றாலும் மூன்றாவது முறை நிச்சயம் வெற்றிக் கொடி நாட்டுவார்கள்.
அடிக்கடி அல்லது தினமும் உறவு கொள்ளுங்கள். நீண்ட நேரம் இன்பம் நீடிக்கும். வேறு வேறு இடங்களில் அல்லது வேறு வேறு நிலைகளில் உறவு கொள்ளுங்கள். நாட்டமும் ஆற்றலும் அதிகரிக்கும். ஆண் பெண் இருவரும் உடல் புணர்ச்சிக்கு தயாராவதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள், அதிக நேரம் இன்பம் கழித்து மகிழலாம். உடலால் புணராமலேயே ஒரு ஆணால் பெண்ணையும் ஒரு பெண்ணால் ஆணையும் உச்சம் அடையச் செய்து திருப்திப்படுத்த முடியும்.
வெற்றி உங்கள் கையில். வாழ்க்கை வாழ்வதற்கே, மகிழ்வதற்கே.
முடிந்த வரை இந்த பதிலைப் படிப்பவர்கள் கூச்சம் அடையாதவாறும் இகழாதவாறும் வார்த்தைகளை அமைத்துள்ளேன். சில வார்த்தைகளை பதிலின் கருத்துச் செறிவிற்காக தவிர்க்க முடியவில்லை.

0 Comments
YOUR COMMENT THANKYOU