காமசூத்திரம் சொல்லி தரும் கட்லிங் விளையாட்டு
கட்லிங் எனப்படுவது ஏதோ பெரிய ஆய வித்தை கிடையாது. நின்று கொண்டு கட்டிப்பிடித்தல் ஹக் (Hug), படுத்துக் கொண்டு செய்தால் கட்லிங் (Cuddling).
கட்லிங் எனும் கட்டிப்பிடித்து தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ளும் அரவணைப்பு உறவின் ஆரோக்கியத்தை பன்மடங்கு அதிகரிக்க செய்யும். இது உடலளவிலும், மனதளவிலும் ரிலாக்ஸாக உதவும் ஒரு கருவி என்றும் கூறலாம்.
கட்லிங் என்பது செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது மட்டும் செய்ய வேண்டிய செயல் அல்ல, நீங்கள் எப்போது விரும்பினாலும், உங்கள் துணையுடன் கட்லிங் செய்யலாம். ஆனால், இடம் பொருள் ஏவல் பார்த்து செய்யவும்….
மகிழ்ச்சி அலைகள்!
உங்கள் இல்லற வாழ்வில் மகிழ்ச்சி அலைகள் அடிக்க கட்லிங் ஒரு சிறந்த கருவியாக திகழும். கட்லிங் செய்வதால் கணவன் – மனைவி உறவுக்குள் இருக்கும் நெருக்கம், இணக்கம் பெருகி இல்லறம் என்றும் நல்லறமாக தொடரும்.
வலி நிவாரணி!
கட்லிங் என்பது மனரீதியான, உடல் ரீதியான ஸ்ட்ரெஸ் மற்றும் வலிகளை குறைக்க செய்யும் ஒரு வலி நிவாரணமாகவும் இருக்கிறது. முக்கியமாக, கட்லிங் செய்வது உங்களை தாம்பத்திய உறவில் இணைக்க தூண்டும் ஒரு சிறந்த செயலாகும். இதனால், தாம்பத்திய வாழ்வில் இடைவெளி விழாது!
காதல் அருவி!
கணவன் – மனைவிக்கு மத்தியிலான உறவில் காதல் பெருக்கெடுத்து ஓட கட்லிங் ஒரு சிறந்த பாதையாக இருக்கும். இது இருவர் மத்தியல் அன்பும், அக்கறையும், புரிதல் உணர்வு அதிகரிக்கவும் கூட உதவுகிறது. முக்கியமாக, கணவன், மனைவி ஒருவரை ஒருவர் பாதுகாப்பாக உணர்வதில் கட்லிங் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
முறையான கட்லிங்!
கட்லிங் செய்கிறேன் என துணையை நசுக்கிவிடக் கூடாது, முறையான கட்லிங் என்பது எப்படி இருக்க வேண்டும் எனில், உங்களுக்கு காய்ச்சல் அல்லது அதிக குளிர் உணர்வு இருந்தால், துணையின் அரவணைப்பு தேடி போவது போன்றது தான் கட்லிங். கட்லிங்கும் ஒரு கலை தான் பாஸ்.
நேர்மை!
கட்லிங் என்பது உறவில் இருக்கும் போலித்தனத்தை அகற்றவும் உதவும். கணவன், மனைவி ஒருவரிடம் ஒருவர் நேர்மையாக நடந்துக் கொள்ளவும் கட்லிங் உதவும். உறவுக்குள் ஆரோக்கியம் மேலோங்கினால், அன்பும், அக்கறையும் பெருகினால் நேர்மை தன்னால் அதிகரிக்கும்.
அழகானது கட்லிங்!
கணவன் கொஞ்சம் உயரமாகவும், மனைவி கணவனின் தோள் அளவிற்கு உயரமும் இருந்தால் கட்லிங் அழகாகவும் இருக்கும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் பார்த்த முதல் நாளே பாடலில் கமலும், கமலினி முகர்ஜியின் கட்லிங் செய்வது போல என கூறலாம்.
ஒகே! கட்லிங் பற்றி முழுசா தெரிஞ்சுக்கிட்டீங்களா… தெரிஞ்சுக்கிட்டா மட்டும் போதாது, செயற்படுத்தலும் அவசியம்!

0 Comments
YOUR COMMENT THANKYOU