Subscribe Us

header ads

சுய இன்பம் ஒரு பார்வை.

சுய இன்பம் ஒரு பார்வை.
பொதுவாகவே சுய இன்பத்தின் போது நம் சக்தி விரயம் ஆகிறது என்று அனைவராலும் பேசப்படுகிறது. முக்கியமாக போலி வைத்தியர்கள் இதை மிகைப்படுத்தி கூறித்தான் வியாபாரம் செய்கிறார்கள். இது பற்றி இங்கு விரிவாக விளக்கம் தர விரும்புகிறேன்.
சக்தி விரயம்:
சக்தி விரயம் என்பது சுய இன்பத்தின் முடிவில் ஒரு ஆண் சிந்தும் விந்து என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை இல்லை. சுய இன்பத்தின் போது அல்லது உடலுறவின் போது நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அதற்காக அதிகப்படியான சக்தி (கலோரிகள்) செலவிடப்படும். அதாவது ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யும் போது நம் உடல் எவ்வளவு சக்தியை செலவு செய்கிறதோ அதை விட அதிகமான சக்தியை 15 நிமிட சுய இன்பம் அல்லது உடலுறவின் போது நம் உடல் செலவு செய்கிறது.
அதனால்தான் முதலிரவு அறையில் பால், பழம், இனிப்புகள் எல்லாம் வைக்கிறார்கள். ஏனென்றால் அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் அது முதல் முறையாக உறவு கொள்ளும் இரவு. அவர்களுக்கு படபடப்பு அதிகம் இருக்கும். உடல் அதிக ரத்த ஓட்டத்தின் காரணமாக அதிக சூடாக இருக்கும். இரவு முழுவதும் உறவு கொள்வதால் அதிக சக்தி செலவாகி முடிவில் களைப்படைந்து விடுவார்கள். அந்த களைப்பு தீரவே அந்த பாலும் பழமும். அறைக்குள் சென்றதும் உண்பதற்கு அல்ல. உறவுக்குப்பின் உண்பதற்கு தான்.
அது போலத்தான் சுய இன்பம் பெரும் போதும் அதிகப்படியான கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது. ஆக ஆணோ பெண்ணோ சுய இன்பம் பெற்ற பின் உடற்பயிற்சி செய்ததை போல் களைப்பை உணர்வார்கள். உடற்பயிற்சி செய்பவர்கள் பயிற்சிக்கு பின் நல்ல உணவுகளை அதாவது முட்டை, வாழை பழம் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்வார்கள். அதனால் அவர்கள் உடல் மேலும் வலுவாகும். ஆனால் சுயஇன்பம் செய்பவர்கள் செய்து முடித்ததும் அவ்வாறு சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதில்லை. மாறாக தவறு செய்துவிட்டோமோ சக்தியை இழந்துவிட்டோமோ என்று கவலை கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். அவர்கள் உடல் ஏற்கெனவே களைப்பாக இருக்கும். இப்படி கவலை கொள்வது மேலும் களைப்பை தரும். உடல் வாடும். தேகம் மெலியும்.
தேகம் மெலிய காரணம் சுயஇன்பம் அல்ல. நன்றாக கவனியுங்கள். அவர்கள் செலவழித்த சக்தியை ஈடு செய்ய தேவையான உணவு எடுத்துக்கொள்ளாததே முக்கிய காரணம். செவ்வாழை, பேரிச்சம்பழம், பாதாம், முந்திரி, அத்திப்பழம் போன்றவைதான் செலவு செய்யப்பட்ட சக்தியை ஈடு செய்யும் உணவுகள். இவற்றை கண்டிப்பாக சுயஇன்பம் அல்லது உடலுறவு செய்த பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே சுயஇன்பம் செய்வது தவறல்ல. செய்த பின் நம் உடலுக்கு என்ன வேண்டும் என்பதை கவனிக்காமல் கடந்து செல்வதே தவறு.
சுய இனபம் செய்யும் போது கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஆணுறுப்போ அல்லது பெண்ணுறுப்போ மிக மிக மென்மையாக கையாளுங்கள். அவசர அவசரமாக செய்து முடிக்காமல் மெதுவாக ரசித்து அழகாக செய்து பழகுங்கள். உடலுறவு என்பது எப்படி ஒரு கலையோ அது போலத்தான் சுய இன்பமும் ஒரு கலை. அதை முழு மனதுடன், பொறுமையாக குற்ற மனப்பான்மை எதுவும் இன்றி செய்யுங்கள். மறக்காமல் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த குறையும் வராது.
மீண்டும் கூறுகிறேன் சக்தி விரயம் என்பது விந்து வெளியே செல்வது அல்ல. நீங்கள் வெளியேற்ற மறந்தாலும் குறிப்பிட்ட நாளில் உங்கள் உடலே தேவைக்கு அதிகமாக இருக்கும் விந்தை தூக்கத்தில் வெளியேற்றி விடும். அதனால் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் இருங்கள்.

Post a Comment

0 Comments