சைஸ் பெரிசா? சிறிசா? பெண்கள் விரும்புவது என்ன? கருதுவது என்ன?
பொதுவாகவே ஆண்கள் தங்களை எண்ணி நொந்துக் கொள்ளும், பெருமைப்பட்டு கொள்ளும் விஷயம் என்று ஒன்று இருக்கிறது. அது அவர்களது ஆண்மை மற்றும் ஆண்'குறி'யின் அளவு. சில ஆண்கள் தங்கள் கௌரவமாக கருதுவது இதை தான். ஆனால், இது குறித்து பெண்கள் என்ன கருதுகிறார்கள். பெண்கள் தாம்பத்திய உறவில் எதிர்பார்ப்பது என்ன? என்று ஆண்கள் பலருக்கு தெரியாது.
பெண்களுக்கு என தனி விருப்ப, வெறுப்பு இருக்கிறது. இது போக உடலியல் ரீதியாக இதுதான் சாத்தியம், இதை தான் தாங்கிக் கொள்ள முடியும் என்று சில உண்மைகள் இருக்கின்றன. இந்த உண்மைகளில் எத்தனை சதவிதம் ஆண்களுக்கு தெரியும் என்று பெண்களுக்கே தெரியவில்லை.
சரி! இத்துடன் ஆண்கள் பெருமையாக கருதும் அவர்கள் பிறப்புறுப்பு குறித்தும், அதன் அளவு மற்றும் உறவின் போது ஆண்களின் டெக்னிக் குறித்தும் நம் நாட்டு பெண்கள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்...
மிகவும் சிறியதாக இருக்காதல்லாவா.. மிக பெரியாதாக இருக்காதவரை சைஸ் குறித்து பெரிய கவலை ஏதும் இல்லை. ஏனெனில், அது பெண்கள் மத்தியில் கொஞ்சம் அச்சத்தை அதிகரிக்கும். அந்நபர் துணையை சௌகரியமாக உணர வைத்துவிட்டால் அதுவும் பெரிய பிரச்சனையாக இருக்காது.
சைஸ் முக்கியம் தான்... கருவியே இல்லாமல் என்ன டெக்னிக் பயன்படுத்த போகிறார்கள். ஒருவர் டெக்னிக்காக நடந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு கருவி முக்கியம் தானே! ஆன்லைன் கட்டுரைகளில் படித்தவரை பார்க்கையில் ஐந்து அங்குலம் வரை இருந்தாலே போதுமானது என்று கூறப்பட்டுள்ளன. அதற்கும் குறைவாக இருந்தால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கும்.
இது அந்தந்த பெண்ணையும், அவரது துணையையும் பொறுத்தது. நான் கொஞ்சம் உயரம் குறைவான பெண். என்னை பொறுத்த வரை பெரியதாக இருக்கும் பட்சத்தில் கடினமாக உணர்வேன். இது என்னை கடுமையான வலியை எதிர்கொள்ள வைக்குமோ என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது. எனவே, சைஸ் என்பது அந்தந்த பெண்கள் மற்றும் அவர்களது உடல்வாகை பொறுத்துள்ளது.
நீளம் மட்டுமே போதுமானதா? நீளத்தின் அளவை மட்டுமே குறிப்பிட வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை. நீளத்தை போலவே, சுற்றளவும் கருத்தில் கொள்ள வேண்டியது. சுற்றளவு தான் ஒரு பெண்ணை உச்சமடைய உதவும் என்று நான் கருதுகிறேன்.
சைஸா? அல்லது டெக்னிக்கா? என்று கேட்டால்.. இரண்டுமே முக்கியம் என்று தான் நான் கூறுவேன். இந்த இரண்டுக்கும் மத்தியில் அந்த பெண்ணை சௌகரியமாகவும், அவளது பெண்மையையும் உணர்ந்து உறவில் ஈடுபட தெரிந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஆண்குறி மட்டும் பெரிதாக இருந்தால் பெண்ணை இன்பமடைய வைத்திட முடியாது. அவள் எதை விரும்புகிறாள், எதை வெறுக்கிறாள் என்பதையும்... ஆணை போலவே அவளும் அனுபவிக்கிறாளா என்பதை முதலில் அறிந்துக் கொள்ளும் அளவிற்கான அறிவு வேண்டும்.
பெரிய சைஸ் என்பது ஆண்களுக்கு வேண்டுமானாலும் கௌரவமாக இருக்கலாம். ஆனால், பெண்களை பொறுத்தவரை அது வலிமிகுந்த ஒன்று. சில சமயம் அவர்களுக்கு தெரிந்தும், சில சமயம் அவர்களுக்கு தெரியாமலே கூட பெண்களை அவர்கள் வலி உணர செய்வதுண்டு. எனவே, டெக்னிக் தான் முதலில் அவசியம், சைஸ் என்பது இரண்டாம் பட்சம் தான்.
மிக சிறியதாக இருந்தால்... கொஞ்சம் மோசமாக தான் இருக்கும். மிக பெரியதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனைத்திற்கும் மேல் எப்படி பெண்களை உறவு கொள்ளும் போது எதிர்கொள்கிறார்கள் என்பது தான் முக்கியமே தவிர இந்த சைஸ், இவ்வளவு அங்குலம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. செக்ஸ் என்பது உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் இருக்க வேண்டும்.
பெரிய சைஸ் வைத்திருக்கும் ஆண்களிடம் ஒரு கெட்டப் பழக்கம் இருக்கிறது. என்னுடையது பெரியது என்பதை வெளியாட்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்று கொஞ்சம் எண்ணுவார்கள். மறைத்துக்கொள்ள கூச்சப்பட்டுக் கொண்டு, கொஞ்சம் கர்வமாக வெளிக்காட்டுவார்கள். ஆனால், அவர்களுக்கு தெரியாது சைஸ் முக்கியமில்லை என்று. ஆண்குறி அளவு பெரிதாக இருக்கிறதா என்பதை காட்டலும், கட்டிலில் வித்தை தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
என்னை பொறுத்தவரை டெக்னிக் தான் முக்கியம். சைஸ் என்பது உடலுறவில் இன்பமடைய உதுவாது என்பதே என் கருத்து. ஒரு ஆண், பெண்ணை பற்றியும் கொஞ்சம் அறிந்திருதால், சைஸ் முக்கியமல்ல என்பதை அவன் எளிதாக புரிந்துக் கொள்ள முடியும். டெக்னிக் என்பதை காட்டிலும், ஃபோர்ப்ளேவில் ஒரு ஆண் எப்படி ஈடுபடுகிறான் என்பதில் தான் தாம்பத்தியத்தில் எட்டும் இன்பம் அமைந்திருக்கிறது.

0 Comments
YOUR COMMENT THANKYOU