Subscribe Us

header ads

ஆரோக்கியமான விந்தணுக்களை பெற நாம் அன்றாடம் உண்ண வேண்டிய உணவுகள்:

ஆரோக்கியமான விந்தணுக்களை பெற நாம் அன்றாடம் உண்ண வேண்டிய உணவுகள்:
1) முட்டை:
முட்டை ப்ரோடீன் மற்றும் விட்டமின் E நிறைந்த உணவு. இது விரைப்பைகளில் தரமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் free radicals எனப்படும் விந்தணுக்களை கொல்லும் எதிர் உயிரிகளிடம் இருந்து விந்தணுக்களை பாதுகாக்கும் என நம்ப படுகிறது.
2) வாழைப்பழம்
இதில் உள்ள Bromelain என்ற enzyme ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டுவதாக இருக்கும். வாழை பழத்தில் விட்டமின் பி இருப்பதால் அது உடல் உறவின் போது stamina வை அதிக படுத்த உதவும் .
3)பசலை கீரை:
இதில் போலிக் அமிலம் உள்ளது. அது விந்தணுகள் சரியான உரு பெற்று இருக்க முக்கியமானதாகும். போலிக் அமிலம் சரியான அளவில் உடலில் இல்லாத போது, விந்தணுக்கள் உரு சிதைவோடு காணப்படும்.
4) asparagus
இதில் உள்ள விட்டமின் சி, எதிர் உயிரிகளிடம் இருந்து விந்தணுக்களை பாதுகாக்கிறது மேலும் விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.
5) பூண்டு
இது விந்தணுக்கள் உற்பத்தி ஆகும் அளவை அதிகரிக்கும். இதில் உள்ள allicin எனும் பொருள் ஆண் பாலுறுப்புகளுக்கு ரத்தம் பாய்வதை அதிகப்படுத்தும்.
6) கேரட்
நகர்வு தன்மை மிகுந்த அணுக்களை உற்பத்தி செய்ய இது மிக முக்கியமான ஒன்று. விட்டமின் ஏ குறைவால் விந்தணுக்கள் நகரும் திறன் பாதிக்கப்படும்.
7)walnuts
இது விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும் ஆண் உறுப்புக்கு ரத்தம் பாய்வதை அதிகரிக்கும்.
8) பூசணி விதைகள்
இவை விந்தணுக்கள் எண்ணிக்கை மற்றும் அளவை அதிகப்படுத்தும். மேலும் ஆண் உறுப்பில் ரத்தம் பாய்வதை அதிகரிக்கும்.
9) மாதுளை மற்றும் தர்பூசணி,பீட்ரூட்:
இவை ஆணுறுப்புக்கு ரத்தம் பாய்வதை அதிகரிக்கும்.
10) பேரீச்சை, நிலக்கடலை, பருப்பு வகைகள்:
ப்ரோடீன் நிறைந்த பருப்பு வகைகள், பேரிச்சை போன்றவை பாலுறுப்பு ஆரோக்யத்துக்கு ஏற்றவை ஆகும்.

Post a Comment

0 Comments