Subscribe Us

header ads

இன்றைய சூழ்நிலையில பெண்களுக்கு அதிகமா வர கூடிய கேன்சரில் ஒன்று தான் மார்பக கேன்சர்

இன்றைய சூழ்நிலையில பெண்களுக்கு அதிகமா வர கூடிய கேன்சரில் ஒன்று தான் மார்பக கேன்சர் அதாவது மார்பக புற்றுநோய்ன்னு சொல்லுவாங்க
இந்த புற்றுநோய் ஆண்களையும் தாக்கும் ஆனா ரொம்ப குறைந்த சதவிகிதத்தில தான் ஆண்களை தாக்கும்
பெரும்பாலும் நிறைய பெண்கள் இதனால பாதிக்கப்படுறாங்க
இப்போ இருக்க காலங்கள்ல நிறைய பெண்களுக்கு வர்றதுனால யாரும் கவனிக்காம விட்டுறாதீங்க
இதற்கான சிகிச்சைமுறை இப்போ சுலபம் ஆகிடுச்சு..முன்ன இருக்க காலங்களில் தான் மார்பக புற்றுநோய்க்கு பலி எண்ணிக்கை அதிகமா இருந்துச்சு இப்போ இதற்கான நவீன சிகிச்சை முறை வந்து இருக்கு
இந்த மார்பக புற்றுநோயோட அறிகுறி என்னன்னா பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி ஏற்படும்,
மார்பகத்தில் மாற்றம் ஏற்படும் அதாவது அதோட இயல்பு நிலைல இருந்து அளவு மாறும்,
முலைக்காம்பில் ஒரு வகையான திரவியம் வடியும்
மார்பக தோலில் குழி ஏற்படும்,தோல் சிவப்பா மாறும் கிட்டத்தட்ட ஒரு தொழுநோய் மாதிரி வெளிப்படும்,
முலைகாம்புகள்ல மாற்றம் ஏற்படும் அதாவது காம்புகளின் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும்
இதெல்லாம் தான் இந்த மார்பக புற்றுநோயோட அறிகுறிகள்
இந்த மார்பக புற்றுநோய் ஏற்பட காரணம் என்னன்னா உடல் பருமன் ஒரு முக்கியமான காரணமா இருக்கு,முறையான ஒரு உடற்பயிற்சி இல்லாடியும் வரும்
மது குடிக்கும் பெண்களுக்கும் இந்த மார்பக புற்றுநோய் வருவதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கு
முதல் மாதவிலக்கின் போதும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் இருக்கு,
மாதவிலக்கு நிறுத்தத்தின் (menopause)போது பெண்மை இயக்கு நீர்(oestrogen) மாற்று சிகிச்சையும் ஒரு காரணமா இருக்கு
காலம் தாழ்த்தி குழந்தை பெறுதல்,குழந்தையின்மை இதுவும் ஒரு காரணமா இருக்கு
கிலைன்பெல்டர் என்னும் ஒரு வகையான சின்றோம் குறைபாடு காரணமாகவும் இந்த மார்பக புற்றுநோய் ஏற்படுது
வழக்கம் போல எல்லா கேன்ஸர் நோய்களுக்கு கொடுக்குற மாதிரி தான் இதுக்கும் சிகிச்சை
பெரும்பாலும் பாதிக்கப்பட்டா மார்பகங்களை எடுத்துருவாங்க,
மார்பகங்களை எடுக்காமல் சிகிச்சை மிகவும் குறைவாகவே செய்றாங்க
இதற்கான சிகிச்சை முறை எல்லா கேன்சர் சென்டர்லயும் இருக்கு. .பொதுவா இந்த வகையான கேன்சரால் பெண்கள் பாதிக்கப்படும்ப
ோது சீக்கிரம் யாருக்கிட்டாயவத
ு சொல்லி சிகிச்சை எடுக்குறது நல்லது
ஒரு சில பெண்கள் வேற ஏதோ பிரச்சனைன்னு சரியா கவனிக்காம விட்டுறாங்க இதனால கேன்சரின் ஸ்டேஜ் அதிகமா ஆகி காப்பாத்தமுடியாத ஒரு சூழல் உருவாகிறது
மேற்சொல்லப்பட்டுள்ள அறிகுறி ஏதாவது இருந்தா மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. .இதில் வெட்கப்படவோ அவமானப்படவோ ஒன்னும் இல்லை
நம்ம உடம்பை நம்மதான் பாத்துக்கணும். . ,அடுத்தவன் நம்மல சீக்காழி,உடம்பு முடியாதவ ன்னு சொல்லத்தான் செய்வாங்க
அதுக்காக நம்ம உடம்புல நோய் இருக்குன்னு தெரிஞ்சும் சிகிச்சை எடுக்காம இருக்கது அவ்வளவு நல்லது இல்ல
இன்னைக்கு பெற்றுவன் பேசிட்டு நாளைக்கு மறந்துருவான். .நம்ம உடல் ஆர்கோயத்த்துல நமக்கு தான் முதல் அக்கறை வேன்டும்
இது ஒன்னும் குணப்படுத்த முடியாத நோய் கிடையாது...சீக்கிரம் குணப்படுத்திடலாம். . .!! எனவே இந்த நோய் இருப்பது தெரிந்தால் விரைவில் சிகிச்சை எடுப்பது நல்லது ♥️

Post a Comment

0 Comments