உங்கள் உடல் நலம்
இயற்கையில்:
இயற்கையில்:
கசகசா:
நரம்புக்கு தேவையான சக்தியையும், மூளைக்குத்
தேவையயான உற்சாகத்தையும் அளிக்க வல்லது கசகசா.
தேவையயான உற்சாகத்தையும் அளிக்க வல்லது கசகசா.
இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு அதிக உழைப்பும் நேரத்திற்கு சாப்பிட முடியாமையும் உடலைப் பேண முடியாமலும் இருக்கிறது. இப்படி பட்டவர்களுக்கு தினசரி பாலில் ஒரு சிட்டிகை கசகசா பொடி சேர்த்து அருந்தச் செய்தால் முகத்தில் ஒருவித பிரகாசமும், மிளிர்ச்சியும் தென்படும்.
திருமணமானவர்கள் வாரம் 2 நாட்க்கள் சிறிது கசகசா, 2 பாதம் பருப்பு போட்டு அரைத்து பனங்கற்கண்டு சேர்த்த பால் சாப்பிட்டு வந்தால் பிரச்சனை அற்ற இல்லற உறவு அமையும். ஒவர் ஆக்டிவ் (over-active)இல்லற உறவினால் ஏற்படும் தளர்ச்சி மற்றும் இழப்பிலிருந்து மீள இது உதவும்.
ஆண்களுக்கு விந்து வீரியமின்மை, எண்ணிக்கை குறைவு, சிறு நீருடன் விந்து வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளுக்கும் கசகசா நல்லதொரு மருந்து.
சூடான பாலில் சிறிதளவு கசகசா சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
வாரம் இருமுறை என்பதை மாற்றி அதிக அளவில் கசகசா பால் சாப்பிட்டால் உடம்பு பெருத்து விடும். கொலஸ்டிரால் அதிகமாகி பல பின் விளைவுகள் ஏற்ப்படும்.
கசகசாவை அரைத்துப் பாலுடன் கலந்து கலந்து பேஸ்ட் போலாக்கி முகத்தில் தடவி ஊறவைத்து கழுவினால் முகம் பொலிவு பெரும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU