பால் கொடுக்கும்போது வயிற்று வலி வருவது போன்ற உணர்வு இருக்கிறதே. அது ஏன்?
குழந்தைக்கு பால் கொடுக்கும்போது இயல்பாகவே உங்கள் கருப்பை சுருங்கி சுருங்கி விரியும். குழந்தை பால் குடிக்கும்போது மார்பக காம்பு தூண்டப்பட்டு, மார்பகக்காம்பின் வழியாக உங்கள் பிட்யூடரி சுரப்பி தூண்டப்பட்டு ஆக்சிடோசின் எனப்படுகிற ஹார்மோனை அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும்.
இந்த ஹார்மோன் தன உங்கள் கருப்பையை சுருங்கி விரிய வைக்கிறது. இதனால் குறைவாக வயிறு வலிப்பது போன்ற உணர்வு பால் கொடுக்கும்போது இருக்கும். இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். இது பால் குடித்து முடித்த பிறகு தானாகவே நின்றுவிடும்.
அதேசமயம் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் உற்பத்தியாவது தொடரும். இதனால் கருப்பை இயல்பான அளவுக்கு சுருங்க ஆரம்பிக்கும். அதன்பிறகு உங்களுக்கு வயிற்று வலியோ வேறு ஏதும் தெரியாது. குழந்தைக்கு பாலூட்டுவது பிடித்தமான ஒன்றாகும்.
பால் கொடுப்பதால் அழகு குறைந்து விடும் என்கிறார்களே அது உண்மையா? நான் இயல்பு நிலைக்கு திரும்ப முடியுமா?
பல பெண்கள் பால் கொடுப்பதால் அழகு குறைந்து விடுமென நினைக்கிறார்கள் அது தவறான கருத்தாகும். தாய்ப்பால் கொடுப்பதினால் அழகு கூடுமே தவிர அழகு குறைவது கிடையாது. தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு பின்னாளில் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் மறந்து விடக்கூடாது.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

0 Comments
YOUR COMMENT THANKYOU