சிறுநீர் பிரியாமை நீங்க மஞ்சள்*
1. கடுகையும் மஞ்சளையும் சம அளவில் எடுத்தரைத்து தொப்பூளில் தடவ சிறுநீர் தாராளமாய் இறங்கும்.
2. நீர்முள்ளி – 50 கிராம்
நெருஞ்சில் – 50 கிராம்
பாதம்பிசின் – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
சதகுப்பை – 50 கிராம்
கல்நார்பற்பம் – 50 கிராம்
1 முதல் 5 வரை உள்ள சரக்குகளை தூளாக்கி அத்துடன் கல்நார் பற்பத்தினையும் கலந்து கொள்ளவும்.
இதில் ஒரு ஸ்பூன் வீதம் காலை – இரவு உணவுக்குப்பின் சாப்பிட சிறுநீர் தாராளமாய் இறங்கும்.
3. சாரணை வேருடன் சிறிது மஞ்சள் சேர்த்துக் கசாயமிட்டு அதிகாலையில் சாப்பிட சிறுநீர் பிரியாமை நீங்கும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU