குழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது எப்படி?
கருத்தடை என்பது கருத்தரிப்பு நிகழ்வதை தடுக்கும் முறையாகும். கரு அணு, கரு முட்டை இணைந்து, வளரும்போது கருத்தரிப்பு நிகழ்கிறது. இதை மையாமாகக்கொண்டு கருத்தரிப்பு நிகழ்வதைத் தடுப்பதற்கு ஐந்து வழிமுறைகள் உள்ளன.
முதலாவது உடலுறவை தவிர்ப்பது. முக்கியமாக கருமுட்டை வளரும் காலத்தில் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.
இரண்டாவது எளிமையான முறை
கருமுட்டை, கரு அணுவுடன் சேராமல் தவிர்ப்பது. ஆண் அல்லது பெண் கருத்தடை சாதனம் உபயோகிப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். அல்லது நிரந்தரமான கருத்தடை முறை ஆண் அல்லது பெண் செய்துகொள்ளலாம்.
வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் மூலமும் கரு முட்டையும், கரு அணுவும் இணைந்து கருத்தரிப்பதை தவிர்க்கலாம்.

பெண்ணின் கருப்பையில் ஐயுடி பொருந்துவதன் மூலம் கரு வளர்வதைக் தடுக்கலாம்.
கருத்தரித்த பின் கூட குறிப்பிட்ட நாட்களுக்குள் கருச்சிதைவு செய்துகொள்ள இயலும், மாத்திரைகள் மூலம் கூட கருவை கலைக்கலாம்.

மேற்குறிப்பிட்ட கருத்தடை முறைகளை அவரவர்களின் சூழ்நிலைகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றார்ப் போல் கைக்கொள்ளலாம்.
கருத்தடை முறைகளை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
கருத்தடை முறை பாதுகாப்பானதா அல்லது ஏதேனும் மோசமான பக்க விளைவுகள் உள்ளதா என்பதை அறிதல்.

நீண்ட நாள் உபயோகம் செய்யும்போது பக்க விளைவுகள் உள்ளதா என்பதைக் அறிதல்
அது தாய்ப்பால் அளிப்பதில் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதையும் தாயப்பாலில் கருத்தடை மருந்தின் குணங்கள் கலந்துவிட வாயப்புள்ளதா என்றும் அறிய வேண்டும்.
பிறக்க இருக்கும் குழந்தையின் உடல்நலத்தைப் பாதிக்குமா என்பதை அறிதல்.

கருத்தடை சாதனம் உடலுக்கு ஏதேனும் ஒவ்வாமையை ஏற்படுத்துமா? ஒழுங்கான மாதவிடாய் இல்லாமை அல்லது கருவழி பாதையில் உள்ள பிரச்சனைகள், கருத்தடை சாதனத்தை தானாகவே உபயோகித்துக் கொள்ளலாமா அல்லது மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையா? ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
கருத்தடை- இயற்கை முறை
ரிதம் (காலண்டர்) முறை (Rhythm calendar method)

இந்த முறைப்படி மாதவிடாய் முடிந்த 10 நாட்களுக்கு பின் கருமுட்டை வளர்ச்சி அடைவதால், அவ்வளர்ச்சிப் பருவத்தில் உடலுறவைத் தவிர்த்தால் கருத்தரிப்பையும் தவிர்க்க இயலும். ஆகவே பாதுகாப்பான காலம் மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பும் பின்பும் ஆகும் இந்த முறையில் பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்ற முறையில் கணக்கிடப்பட்டுகிறது. ஆனால் இதிலிருந்து மாறுபடும் சுழற்சி உள்ளவர்களுக்கு இந்த முறையில் தோல்விகள் ஏற்பட்டு கருத்தரிக்க வாய்ப்புள்ளது.
பில்லிங்ஸ் முறை (Billings or Ovulation Method)
பெரும்பாலான பெண்களுக்கு பெண் உறுப்பிலிருந்து திரவம் சுரப்பது காணப்படும். இது அளவிலும் நிறத்திலும் அடர்த்தியிலும் ஒருவருக்கொருவர் மாறுபடும். இது மாதவிடாய் காலச் சுழற்சியைப் பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் வெள்ளை நிறத்தில் ஒட்டுகின்ற தன்மையுடன் காணப்படும். மாதவிடாய் முடிந்தவுடன் இது சற்று குறைந்த அளவில் வறண்டு கெட்டியாகவும் வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் வழுவழுப்புத் தன்மை கரு முட்டை வளர்ச்சி அடைந்த நிலையில் அதிகமாக இருக்கும். இது கருத்தரிப்பதற்கான நாட்களின் அறிகுறியாகும் இந்த மாறுபாடுகளைக் கவனிக்கும்போது பெண்கள் கருத்தரிக்கும் நாட்களையும் கருத்தரிக்காத நாட்களையும் அறிந்துகொள்ள இயலும்.
உடலில் வெப்ப மாறுபாடு
பெண்களில் உடலில் வெப்பம் கூடுவதையும் குறைவதையும் காலையில் படுக்கையிலிருந்து எழும்பும் நேரத்தில் கண்காணிக்க வேண்டும். முக்கியமாக மாதத்தின் நடுப்பகுதியில் கண்காணித்தல் வேண்டும்.
அக்காலகட்டத்தில் கருமுட்டை வளர்ச்சி அடையும்போது உடலில் வெப்பநிலை 1-2 டிகிரி பாரன்ஹிட் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் (1-16 நாட்கள்) உடலுறவைத் தவிர்ப்பதன் மூலம் கருத்தரிப்பைத் தவிர்க்கலாம். ஆனால் வெப்பநிலையைத் தெரிந்துக்கொள்ள தினமும் நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
செயற்கையான முறையில் தடுக்கும் முறை
கரு முட்டை கரு அணு இணைவதைத் தடுக்கும் முறை) (Condom)
ஆண்கள் அணியும் ஆணுறையை உடலுறவிற்கு முன்பு அணிந்து கொள்வதன் மூலம், கரு அணு கர்ப்பப்பையில் கருமுட்டையுடன் இணைவதைத் தடுத்து கருத்தரிப்பைத் தவிர்க்க இயலும். ஒரு முறை உபயோகித்த அணுறையை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. அது மிகச்சிறந்த கருத்தடை சாதனமாக செயல்படுவதுடன் எய்டஸ் மற்றும் உடலுறவு சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்க இயலும்.
பெண்களுக்கான கருத்தடை சாதனம் டயாபர்ம்
பெண்களுக்கான கருத்தரைட சாதனம் 2-4 இன்ச் வட்டவடிவில் ஒரு ரிங் இணைக்கப்பட்ட பொருளாகும். இதை ஆரம்பக்கட்டத்தில் ஒரு மருத்துவரின் அல்லது மருத்துவ ஊழியரின் உதவியுடன் பொருந்திக் கொள்ளப் பழகிவிட்டால் பின் சுயமாகவே பெண் உடலுறப்பில் பொறுத்திக் கொள்ள இயலும்.

இதை அணிவதன் மூலம் கரு அணு கரு முட்டை இணைவதைத் தடுத்து, கருதரிப்பை தவிர்க்க இயலும் ஒரு முறை உபயோகித்தபின் அதை சோப்புப் போட்டு சுத்தப்படுத்தி மீண்டும் அடுத்த முறை உபயோகம் செய்யலாம். இதன் விலை சற்றே அதிகமானாலும் பெண்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பெண்களுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது.
சர்விகல் கேப் (cervical cap)
இது டயாபர்ம் போன்றே சர்விக்ஸ்-ல் பொருத்திக் கொள்ளக்கூடிய ஒரு ரப்பர் கேப். இதை அணிந்து கொள்வதன் மூலம் சர்விக்ஸின் திறப்பு மூடப்படுவதால் கருத்தரிப்பு நிகழ்வு தடைப்படுகிறது.
பெண்களுக்கான கருத்தடைப் பொருள்
பெண்களுக்கான இந்தக் கருத்தடைப் பொருள் பாலியுரித்தனால் செய்யப்பட்ட மெதுவான பெண்களின் உடலுறுப்பில் பொருந்திக்கொள்ளக்கூடிய வசதியுடன் உள்ள ஒன்றாகும். உடலுறவிற்கு முன்பே இதைப் பொருத்திக் கொள்வதன் மூலம் கரு அணு கரு முட்டையுடன் இணைவதை தவிர்க்கலாம். இது கருத்தரிப்பைத் தவிர்ப்பதுடன் எய்ட்ஸ் மற்றும் உடலுறவின் மூலம் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் இயலும். ஆனால் சற்றே விலை அதிகமானது.
ஸ்பெர்மிசைடு
ஸ்பெர்மிசைடு என்பது உறுப்பில் தடவிக்கொள்ளும் ஒரு ரசாயனப் பொருளாகும் இது கரு அணுவை செயலிழக்கச் செய்வதால் கருத்தரிப்பை தடை செய்ய இயலும். இது மெதுவான நுரை வடிவத்திலும், மாத்திரைகள், கீரீம் வடிவத்தில் உள்ளது. இதன் பக்கவிளைவுகள் கூட மிகக் குறைவே. ஒரு சிலருக்கு இது ஒவ்வாமை விளைவுகளைக் கொடுக்கலாம்.

0 Comments
YOUR COMMENT THANKYOU