ஆண் குழந்தைகள் வயதுக்கு வருவதை அறிந்து கொள்ள எளிதான வழி..
அவர்கள் குரல் உடைதலை கவனிப்பது தான். மழலை குரல் மறைந்து கரகரன்னு பேச ஆரம்பிப்பான். இப்போ தான் அவன் உடலளவில் பருவ மாற்றத்தை சந்திக்கிறான்னு புரிந்து கொள்ளலாம். ஆனால் மெண்டல் மெச்சூரிட்டி வேற விசயம். பெரும்பாலான பசங்க மெண்டல் மெச்சூரிட்டி அடைய 20 வயது ஆகும்.
உடல் மாற்றம் அடைய ஆரம்பித்த உடன்.. அவன் கவனிக்க ஆரம்பிப்பது அவன் நண்பர்களை போல தனக்கு அக்குளில், நெஞ்சில், உதட்டுக்கு மேல், ஆண்குறியை சுற்றி முடி முளைக்கிறதா என்பதையும், தன்னோட உறுப்பு விரைப்படைவதையும் தான். சுய இன்பத்தை ப்
பெரும்பாலும் நண்பர்கள் சொல்லி கொடுப்பார்கள். இல்லை என்றாலும் தானே கத்துக்குவான். அதுவரைக்கும் சில நேரம் இரவில் வெளியேறும் விந்தினை பார்த்து குழம்பி, பின் நண்பர்கள் மூலமா தெளிவாவான்.
தான் பெரிய பையன் ஆகிட்டதா நினைக்க ஆரம்பிச்சு அப்படியே நடக்க ஆரம்பிப்பான். அவனை யாராவது திட்டினாலோ அடித்தாலோ அதற்கு ரொம்ப விசனப்படுவான். பெரிய மனிதன் போல அறிவுரை சொல்வது, தம்பி, தங்கைகளிடம் அதிகாரம் செய்வதுன்னு அப்பா, மாமாக்களை இமிடேட் செய்வான். தலையில் தட்டினால் ஆத்திரம் வரும். கொஞ்சி பேசினா நான் என்ன சின்ன பையனான்னு கேப்பானுங்க... ரொம்ப கோவம் வரும். அம்மா கட்டி பிடிக்க வந்தாலும் விலகி டிஸ்டன்ஸ்ல நிக்க ஆரம்பிப்பான்..
பெண்களை பிடிக்காதுன்னு சொல்ல ஆரம்பிப்பான். பக்கத்துல வந்தால் விலகி போவான்.. அப்புறமா ஒரு 3,4 வருஷத்துல பெண்களை தேடி.. பின்னாடியே போக ஆரம்பிச்சுருவான்.

0 Comments
YOUR COMMENT THANKYOU