Subscribe Us

header ads

சுயஇன்பம் சரியா ? தவறா ?

#சுயஇன்பம் சரியா ? தவறா ?

உணர்ச்சிகளை நீண்ட நாட்களாக அடக்கி வைப்பதன் விளைவை சுய இன்பம் எனலாம். இதை ஆண்கள் மற்றும் பெண்கள் இரு தரப்பினரும் அனுபவிப்பார்கள். 

சுய இன்பம் குறித்து மக்களிடையே சில தவறான கருத்துக்கள் உள்ளது. இதனால் சுய இன்பத்தை அனுபவிப்பவர்கள் அஞ்சுகிறார்கள்.

சுய இன்பம் கண்டால் முகப்பரு வரும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் அது தவறு. உண்மையில் முகப்பருவானது எண்ணெய் பசை சருமமாக இருந்தாலே வரும்.

பாலியல் உணர்ச்சியால் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கக்கூடியது சுய இன்பம். வயதான காலத்திலும் சிலர் அனுபவிக்கின்றனர். அது ஒவ்வொருவரின் உடல் சக்தியைப் பொறுத்ததே தவிர, இளம் வயதில் மட்டும் தான் அனுபவிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.

சுய இன்பத்தை அளவாக மேற்கொண்டால் அது ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுவே அளவுக்கு அதிகமாக மேற்கொண்டால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

சுய இன்பம் ஒருவரின் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு பாலியல் உணர்ச்சி அதிகமாக இருந்து, அதை வெளிப்படுத்தும் ஓர் விதம் தான் சுய இன்பம். எனவே சுய இன்பத்திற்கும், குணத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

Post a Comment

0 Comments