Subscribe Us

header ads

LGBT (lesbian-Gay-Bisexual-Transgender)

LGBT (lesbian-Gay-Bisexual-Transgender)

மாற்று பாலினம்(திருநங்கைகள்) போல 'தன்'பால் ஈர்ப்பு உள்ளவர்களுக்கு க்ரோமோசோமல் அல்லது ஜெனட்டிக்கல் மாற்றம் எல்லாம் உடலில் இருக்காது. அவர்கள் மற்ற ஆண்/பெண் போல் சாதாரணமானவர்களே... ஆனால் மனதில் மாற்றம் உண்டு.

மனம் என்பது சிந்தனை, சிந்தனையில் 'தன்' பால் மேல் ஈர்ப்பு உள்ள ஒருவனால் /த்தியால் எதிர்பாலுடன் உடலுறவு கொள்ள முடியாது. சாதாரணமா இருக்கும் உங்கள் மனதினால் எப்படி உங்களை போன்ற மற்றொரு ஆண்/பெண்ணுடன் கொள்வதை ஏற்க முடியாதோ அப்படி அவர்கள் மனதும் எதிர் பாலுடன் உறவு கொள்வதை ஏற்காது.

இது நோய் அல்ல, இதற்கு மருந்தும் இல்லை, 50 - 100 ஆண்டுகளுக்கு முன்பு கூட இதை சரி செய்கிறேன் என்று ஆணுக்கு ஆண் தன்மையை அதிகரிக்கும் ஹார்மோனையும் பெண்ணுக்கு பெண் தன்மையை அதிகரிக்கும் ஹார்மோனையும் அதிகமாக செழுத்தி (மீண்டும் ஆணாக மாற்றுகிறார்களாம்) கூத்தடித்தது மருத்துவ/மத உலகம். அதனால் பல பேர் தற்கொலை பண்ணி செத்தார்கள், கம்ப்யூட்டரை கண்டு பிடித்த 'ட்யூரிங்' அதில் ஒருவர்.

ஒரு வழியாக ஆராய்ச்சிகள் செய்து இது இயற்கையான ஒன்றுதான், மனித குலம் தோன்றிய நாளில் இருந்தே இத்தகைய சிந்தனை சிலருக்கு ஏற்படுவது உண்டு அவர்களை அவர்கள் போக்கில் விடுவதால் தவறு இல்லை, தெய்வ குற்றமும் இல்லைன்னு முடிவு செய்து பல நாடுகள் இன்னிக்கு அவங்களை அங்கீகரிக்க ஆரம்பிச்சிருக்கு.

ஒரு ஊரில் கறி சாப்பிடுபவர்கள் அதிகம்ன்னு வச்சுக்கோங்க அவங்க எல்லோரும் சேர்ந்து பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு தீங்குன்னு முடிவு செய்றாங்க, உடனே பழம் சாப்பிடும் எல்லோரையும் கறி தான் சாப்பிடனும்ன்னு வற்புறுத்துறாங்கன்னு வைங்க... அது சரியா?? அவன் பழம் சாப்பிடுவதால் நமக்கு என்ன வந்தது?? நாம அதிகமா இருக்கோம்ங்கறதுக்காக நாம எடுக்கிற முடிவு எல்லாம் சரியாகுமா?? இந்த கோணத்துல சிந்திச்சா இதுக்கு பதில் கிடைக்கும்.

இதுல உணர்ச்சிவசப்பட்டு குதிக்கிற பல பேருக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறேன்...! இது நாள் வரை உங்கள் கண்ணுக்கு எந்த வித குறையும்/ஊனமும் இல்லாமல் நார்மலாக இருக்கும் உங்கள் குழந்தை 18 வயதிற்கு மேல் 'தன்' பால் ஈர்ப்பு கொண்டவராக மாற எப்போதும் வாய்ப்பிருக்கு. இப்போ அதை நீங்க கண்டுபிடிக்கவே முடியாது....

அதனால 14 வயசில யாராவது ஒரு பெண்ணுக்கு அவன் லவ்லெட்டர் குடுத்தா குதிக்காதீங்க...ஆண்மகனாக உருவெடுக்கிறான் என பெருமை கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments