Subscribe Us

header ads

பாலிசிஸ்டிக் ஓவரீஸ்-சினை முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் PCOD

♥பாலிசிஸ்டிக் ஓவரீஸ்-சினை முட்டைப் பையில் நீர்க்கட்டிகள்
PCOD

♥பாலிசிஸ்டிக் ஓவரீஸ் இந்த  நிலையை “சினை முட்டைப் பையில் நீர்க்கட்டிகள்’ என்று விவரிக்கலாம்.

♥பெண்களுக்கு டீன் ஏஜ் வயதில் ஆரம்பித்து, நாற்பது நாற்பத்தைந்து வயது வரை எப்போது வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வரலாம். இந்தப் பிரச்னை உள்ள பெண்கள் சொல்லும் சில அறிகுறிகள்…

>>உடல் பருமனாகிக் கொண்டுபோவது

>>மாதவிலக்குப் பிரச்னை: மூன்று, நான்கு மாதங்கள் மாதவிலக்கு ஏற்படாமல் தள்ளிப்போவது.

>>ஆறுமாதம், ஒரு வருடம் என்று மாதவிலக்கு வராமலே இருப்பது.

>>அபூர்வமாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வருவது.

>>உதிரப்போக்கு அதிகமாகத் தெரிவது என்று பலவகையாகச் சொல்லலாம்.

>>உதடுகளுக்கு மேல், காது ஓரத்தில் அல்லது முகவாய், வயிற்றின் அடிப்பகுதி போன்ற இடங்களில் ரோமங்கள் முளைப்பது.

>>கல்யாணமானப்பெண்களுக்கு குழந்தைப்பேறு தள்ளிக்கொண்டே போவது…

♥இந்த பாலிசிஸ்டிக் ஓவரீஸ் என்பது, ஏதோ ஒரு காரணத்தினால் சினைமுட்டைப்  பையில் முட்டைகளைச்சுற்றி, நீர் கொப்பளங்கள் உருவாகும் நிலையைக் குறிக்கும். ஒவ்வொரு   சினை முட்டையிலும் கோடிக்  கணக்கான முட்டைகள் இருக்கின்றன. இவற்றில் லட்சக்கணக்கானவை போட்டி போட்டுக் கொண்டு முதிர்ச்சியடைய முயற்சிக்கின்றன.

♥ஆனால் அவற்றில் ஒரு முட்டைதான் முழு வளர்ச்சியடைந்து சினை முட்டைப்பையிலிருந்து தன்னை உடைத்துக்கொண்டு வெளிவருகிறது. அந்த முட்டையே ஆண் விந்து சத்துக்க ளால் தாக்கப்பட்டு, கருவாக உருவாகிறது.
மீதியிருக்கும் முதிர்ச்சி அடைய முயற்சித்த அத்தனை முட்டைகளும் அழிந்து மறைந்து போகின்றன.

♥இது ஒவ்வொருமாதமும் நடைபெறுகிற சாதாரண நிகழ்ச்சியாகும். ஆனால் பாலிசிஸ்டிக் ஓவரீஸ்  இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது எனில், அத்தனை முட்டைகளில் ஒன்றுகூட ஒன்றுகூட முழு முதிர்ச்சி அடைந்து, உடைந்து வெளிவருவதில்லை. அந்தமுட்டைகள் அழிவதுமில்லை. அவற்றைச் சுற்றி நீர்  சேர்ந்து கொண்டு நீர்க் கொப்பளங்களாக சினை முட்டைப் பையைச் சுற்றி ஆக்ரமித்துக் கொள்கின்றன.

♥இந்த மாதிரி பாலிசிஸ்டிக் ஓவரீஸ் சுரக்கும் ஹார்மோன்கள், இயற்கையிலிருந்து வேறுபட்டு வருவதால், அதிக உதிரபோக்கு அல்லது மாதவிலக்கு தள்ளிப்போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆண் தன்மையுள்ள ஹார்மோன்கள் சுரப்பதால் உடலில் வேண்டாத இடங்களில் ரோம வளர்ச்சி, உடல் பருமன் போன்றவை ஏற்படுகின்றன.
உடலில் சுரக்கும் இன்சுலின் சத்து போறாத தன்மை ஏற்படுவதால் பாலிசிஸ்டிக் ஓவரீஸூக்கு இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. எனவே, உடல் பருமன், மாதவிலக்கு வராததன்மை உள்ள பெண்களுக்கும், குழந்தை தேவை என்ற பெண்களுக்கும், நீரழிவு நோய்க்கான மருந்துகளைக் கொடுக்கவேண்டி வரும்.

♥சில மருந்துகள் முட்டைப்பையைத் தாக்கி சினை முட்டை வளர்ச்சியடையவும், வெடித்து வரவும் உதவுவதால் அவற்றை உபயோகப்படுத்திப் பயனடையலாம்.
சில சமயம், குழந்தைப்பேறு வேண்டும் பெண்களுக்கு லேப்ராஜ்கோப்பி மூலம் இந்த முட்டைப் பைகளைத் துளைத்து நீரை வெளியேறச் செய்து அவற்றை இயங்கச் செய்யலாம். இதற்குமேல் மேலே கூறிய மருந்துகளையும் கூடவே உபயோகப்படுத்தலாம்.

♥கல்யாணமாகாத பெண்களுக்கு, அவர்கள் டீன்ஏஜ் கடந்த பின்பும், பாலிசிஸ்டிக் ஓவரிஸ் பிரச்னை இருப்பின் ஆறு அல்லது ஒன்பது மாதம் போன்று குறுகிய காலத்துக்கு மருத்துவரின் ஆலோசனைப் பேரில், தகுந்த ஹார்மோன்கள் அளித்த குணப்படுத்தலாம்.
பாலிசிஸ்டிக் ஓவரீஸ் வேண்டாத ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால், 40-45 வயதில் கருப்பையை பலவீனப்படுத்தி, உதிரப்போக்கு போன்ற உபாதைகளை உண்டாக்கலாம். அரிதாக, கருப்பை புற்றுநோய் வரக்கூட வாய்ப்புண்டு.

♥பாலிசிஸ்டிக் ஓவரீஸால் பாதிக்கப்பட்ட ஒருசிலருக்கு ஒரு சிகிச்சையுமின்றி தானாகவே இந்த சினைப்பை நார்மல் ஓவரீஸ் ஆக மாறிவிடவும் வாய்ப்புண்டு.

♥25-35 வயதுக்குள் கருத்தரிக்க வேண்டும் என்ற கவலையில் மாதவிலக்கு தள்ளிக்கொண்டு போகும் பெண்கள் எங்கள்  மையத்துக்கு வருவதுண்டு. முதலில் மருத்துவச் சிகிச்சை செய்த பிறகு இவர்களுக்கு கீ ஹோல் சிகிச்சையைப் பற்றி விளக்கிச் சொல்வோம்.

♥கீ ஹோல் சிகிச்சையின் நோக்கம் என்னவென்றால் தடிமனாக இருக்கும் சினைப்பை (ஓவரி)யின் தோலில் தூவாரங்களை உருவாக்கி இந்த துவாரங்கள் மூலமாக எளிதில் கருமுட்டையை (ஓவரி) வெளியில் கொண்டு வருவதுதான். இதற்கு பாலிசிஸ்டிக் ஒவேரியன் டிரில்லிங் என்று பெயர். மேலும் இதே

சமயத்தில் கருக்குழாய்  மற்றும் கர்ப்பபை எவ்வாறு உள்ளன  என்பதையும் அறிய முடியும். ஆறு மணி நேரம் மருத்துவமனையில் இருந்தால் போதும். வலி இருக்காது. குழந்தை பெறும் வாய்ப்பையும் அதிகமாக்கிக் கொள்ளலாம்.

– டாக்டர் மானு லக்ஷ்மி – குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்

Post a Comment

0 Comments