#PME
Premature ejaculation.
#நிஜமாகவே #போதுமான நேரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேண்டும் (நீண்ட நேரம் வேண்டியது இல்லை).
போதுமே, போராடிக்குதே, முடித்துக்கொள்ளலாமே
என்று நினைப்பது #சுயநலமானது என்ற புரிதல் வேண்டும்.
#முடியும் என்ற நம்பிக்கையும் வேண்டும்.
எவ்வளவு நேரம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறும். #ஒவ்வொரு #முறையும் தேவையான நேர அளவு #மாறும். பொதுவாக 4 to 13 நிமிடங்கள் தேவைப்படும். 45 நிமிஷம் கூட முடியும். அவ்வளவு வேணுமா என்பது தனிப்பட்ட தேர்வு.
#சொல்லியும்_தெரியும்.
செக்ஸ் உறுப்புகளில் முதன்மையானது மூளைதான். 99% இதுதான்.
செக்ஸ்ஸில் எல்லா நிலைகளையும் மூளை கவனித்துக்கொண்டே இருக்கிறது. அதிகபட்ச உணர்ச்சி (excited) அடைந்துவிட்டோம் என்ற முடிவுக்கு மூளை வந்துவிட்டால் உடனே சில வேதிப்பொருட்களை சுரந்து முடித்து வைக்கிறது.
(OR)
அதிகபட்ச உடல் உழைப்பு (exhausted) இவ்வளவுதான், இதற்கு மேல் இதயம் தாங்காது என்ற முடிவுக்கு மூளை வந்தாலும் இது நடக்கும்.
மூளைதான் முடித்து வைக்கிறது என்ற தெளிவான புரிதல் வேண்டும்.
இன்னும் உச்சபட்ச excitement வரவில்லை, இன்னும் களைப்பு (exhaust) ஆகவில்லை என்று மூளைக்கு சொல்ல வேண்டும்.
1. மனம்
மனம்தான் 99% மூளைக்கு தகவல் சொல்லுது. ஆ...... நான் ரொம்ப... excite ஆய்ட்டேன் என்று நமது மனதில் எண்ணம் வந்தாலே போச்சி.
**I enjoy but I need more*** என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.
I am not excited/exhausted, i don't want to cum, i won't cum now.
I don't, i won't.
இப்போது வந்துவிடும் என்று நினைப்பதே வர வைத்துவிடும். தன்னம்பிக்கை வேண்டும்.
I wont cum என்று சொல்லிக்கொள்ளலாம்.
2. கவனம்.
சொல்லிக்கொண்டால் நிறுத்த முடியுமா என்று எதிர்வாதம் மனதில் வரும். உண்மைதான். வெறுமனே சொல்லிக்கொள்வது போதாதுதான்.
மூளையானது மனதிடமிருந்து மட்டும் தகவல் பெறவில்லை. உடலில் சில பாகங்களில் ஏற்படும் மாற்றங்களையும் கவனிக்கிறது. அதன் மூலமும் excited / exhausted என்று முடிவு செய்கிறது.
1.கண்களில் உணர்ச்சி
2.உதட்டில்/நாக்கில் வறட்சி
3.மூச்சில் படபப்பு
4.இதயம்
5.வயிற்றுதசை
6.கீழ் முதுகு தசைகள்
கண்ணை மூடி தலை உச்சியில் கவனத்தை கொண்டு வந்து மெல்ல பின்புற நடு மண்டைக்கு கொண்டு வந்து அங்கிருந்து உங்கள் மூளையை கவனிக்க வேண்டும். அப்படியே கண்ணிற்கு கொண்டு வந்து கண்ணை அழுத்தி மூடி திறக்க வேண்டும். அப்படியே மூச்சை கவனித்து அழுத்தமாக மூச்சை வெளியேற்ற வேண்டும். பிறகு நாக்கில் எச்சில் கூட்டி விழுங்க வேண்டும். தேவைபட்டால் அருகில் நீர் வைத்துக்கொண்டு ஒரு மடக்கு குடிக்கலாம். அப்படியே இதயத்தின் மீது கவனம் கொள்ள வேண்டும். பிறகு மார்பு தசை, முதுகு தசை, வயிறு தசை என்று கவனத்தை கொண்டு செல்ல வேண்டும்.பழகிவிட்டால் தலை உச்சியில் இருந்து வயிறு வரை 4 செகண்டில் கவனம் கொள்ள முடியும். விளக்கமாக சொன்னதால் பூதாகரமாக தெரிகிறது.
மூட் ஆனாலே கண்ணு சொக்கணும், மூச்சு சூடாக மெல்ல மெல்ல போகணும் என்று நமக்கு நாமே தப்பா சொல்லிகொடுத்து வச்சி இருக்கிறோம். இதெல்லாம் உச்ச கட்டத்தில் நடக்க வேண்டியது. மூட் ஆனா உடல் முழுக்க வெப்பம், தோலில் கொஞ்சம் உணர்ச்சி அவ்ளோதான் நடக்கணும்.
அதனால கண்ணு மேலயும் மூச்சு மேலயும் கவனம் வச்சி இயல்பா இருந்தா போதும். பெண்களும் இந்த விஷயத்தில் கொஞ்சம் புரிஞ்சிக்க்கணும். போர்ன் மூவிகளில் ஆண்கள் முகத்தில் காட்டும் அந்த உணர்ச்சிகளை முதல் நொடியில் இருந்தே நம்ம ஆளு காட்டனும்னு ஆசை படக்கூடாது. கடைசி 3 நிமிச உணர்ச்சியை முதல் நொடியில் முகத்தில் (கண்கள் மற்றும் மூச்சு) கொண்டு வந்தால் மூளை குழம்பிபோய் switchயை தட்டி விட்டுறும்.
உச்ச கட்டத்தில் மூச்சை நிறுத்தி, அப்புறம் inhale பன்றோம். இதை மூளை வாட்ச் பண்ணும். இதுதான் முக்கியமான சிக்னல். இந்த சிக்னல் மூளைக்கு போகாம வச்சிக்கணும். மூச்சின் மீது கவனம் வேணும்.
Thrust பண்ணும்போது exhale பண்ணணும். வெளியே எடுக்கும்போது inhale பண்ணணும்.
அதிகமாக excite ஆகிவிட்டோம் என்ற உணர்வு வந்தால், வேகத்தை குறைக்கலாம், பயமாக இருந்தால் வெளியே எடுத்து விட்டு விரைவாக exhale பண்ண வேண்டும். லேசாக பிடித்து அமுக்கினால் கொஞ்சம் தளரும்.
Exhale exhale exhale when you thrust inside. வேகமாக thrust பண்ணும்போது inhale 1 second, exhale 1 second , என்று செய்ய வேண்டி வரும்.
#Precum
சிலருக்கு அதிகமாக precum வரும். அவர்கள் அதை துடைத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே (சிலருக்க்கு பேசினால் கூட) precum வரும். அதை உடனடியாக துடைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்டுப்பாடு கிடைக்காது. இடை இடையே எடுத்து லேசாக பிதுக்கி ஒரு சொட்டு வந்தால் கூட துடைத்துக்கொண்டால் கட்டுப்பாடு கிடைக்கும். Precum குழாயில் நின்றால் மூளை தயாராகி விடும்.
#சுயஇன்பம்.
பெரும்பாலும் முதல் முறை விந்து வெளியேற்றுவது porn பார்த்து, பிறர்க்கு தெரியாமல் செக்ஸ் கொள்வது, அல்லது பாத்ரூமில் self pleasing. யாருக்கும் தெரிவதற்கு முன் முடிக்கணும் என்ற பதற்றம், பழக்கமாகி போகிறது. எப்போதும் அப்படி செய்ய கூடாது. எப்போது செய்தாலும் குறைந்தது 10 நிமிசம் என்ற இலக்கு ஒவ்வொரு முறையும் வேண்டும். 10 நிமிசம் வரைக்குமாவது i don't want to cum என்று சொல்லிக்கொள்வது அவசியம். 10 நிமிடம் நேரம் இல்லாவிட்டால் ஒத்திப்போடுவதே சரி.
விருப்பப்பட்டால் 30m, 45m, 1h உங்கள் விருப்பம், பார்ட்னர் விருப்பம்.
சீக்கிரமாக ஆண் உச்சம் அடைவது பெரும்பாலோர் விஷயத்தில் பழகிக்கொண்டதே (acquired).
#Porn
Porn induced premature ejaculation
Porn பார்க்கும்போது குறிப்பிட்ட உடல் பாகத்தை தொடும்போது அல்லது குறிப்பிட்ட உடல் அசைவு நமக்கு ரொம்ப மூட் ஆக்கும் என்று நம்மை நாமே குழப்பி வைத்துக்கொள்கிறோம். நிறைய போர்ன் பார்த்துவிட்டு கடைசியில் உச்சம் பெறுவதற்கு என்றே சில உடல் அமைப்பு கொண்ட பெண்களை அல்லது சில activities பார்த்து முடிக்கும் பழக்கத்தை விடணும். அப்படி எதுவுமே இல்லை, எந்த பாகமும் எந்த இயக்கமும் உச்சத்திற்கு கொண்டு செல்லாது, நாம் நினைத்தால்தான் வரும் என்று மனதை நம்ப வைக்க வேண்டும். அது உண்மையும் கூட.
பார்ட்னரின் எல்லா உறுப்புகளையும் சமமாக நேசிக்கணும். அவங்களோட எல்லா செயல்பாட்டையும் சமமா enjoy பண்ணணும். இதனால் எல்லாம் எனக்கு உச்சபட்ச excitememt வராது என்று மனதை மற்றணும்.
*I need more* என்று shortஆக திரும்ப திரும்ப சொல்லிக்கணும்.
#Exercise
இதுவரை excite ஆகாம இருப்பதை பற்றி சொல்லிட்டேன்.
Exhaust ஆகாம இருப்பதும் சமமாக முக்கியம்.
இதயம் #மட்டுமே exhaust ஆகிவிட்டீர்கள் என்பதை மூளைக்கு சொல்கிறது.
எனவே இதயத்துக்கு பலமூட்டும் உடற்பயிற்சிகள் வேண்டும். Cardio மற்றும் circuit trainings செய்யலாம்.
உடலில் வலு இல்லாமல் போகும்போது இதயத்தால் ஒரு அளவு மேல் stress தாங்க முடியாது. பத்து முறை push பண்ணினாலே இதய துடிப்பு அதிகம் ஆனால் மூளை உடனடியாக விந்தை வெளியேற்றி நமது இதயத்தை காக்க முயலும். எனவே செய்யும்போது இதயம் மீதும் கவனம் வேண்டும். கொஞ்சம் துடிப்பு அதிகம் ஆனாலும் நிறுத்தி வெளியே எடுத்து அழுத்தமாக வெளிமூச்சு விட்டு ஆசுவாசப்படுதத வேண்டும்.
நீங்களும் சூப்பர் பெர்ஃபாமர் ஆகலாம் பாஸ். விடாமுயற்சி விஷ்வரூப வெற்றி..

0 Comments
YOUR COMMENT THANKYOU