Subscribe Us

header ads

#உடலரசியல் 32

#உடலரசியல் 32

பாலியல் வேட்கை அதிகமாக இருக்கும் பெண்கள் எப்படி எல்லாம் இருப்பார்கள் என்று சமூகம் சொல்லிடும் மூடநம்பிக்கைகள்.

மூ.ந 1:

உடம்புல முடி அதிகமான பெண்களுக்கு செக்ஸ் உணர்ச்சி அதிகமா இருக்குமாண்டா...

மூ. ந 2:

உதட்டுல மச்சம் இருக்க பொண்ணு அந்த விஷயத்துல கில்லாடிடா...

மூ. ந 3:

ஒல்லியான தேகம் கொண்ட பெண்ணுக்கு விரகதாபம் அதிகம்டா...

மூ. ந 4:

கால் பெருவிரலுக்கு பக்கத்து விரல் நீளமா இருந்தா அவளுக்கு எவ்ளோ இருந்தாலும் பத்தாதாம்டா...

மூ.  ந 5:

கால் மேல கால் போட்டு உட்கார்ந்தா அவளுக்கு செக்ஸ் உணர்ச்சியை அடக்க முடியாம உட்கார்ந்திருக்கிறதா அர்த்தம்டா...

இன்னும் சில பல:

6.பியூட்டி பார்லர் போற பொண்ணுங்க,  7.விதவிதமா உடுத்தற பொண்ணுங்க,
8.மேக்கப் போடற பொண்ணுங்க,
9. தன் உடலை சிக்குனு வச்சுக்கற பெண்கள்,
10. ஜிம்முக்கு போற பெண்கள்,
11. டான்ஸ் ஆடும் பெண்கள்,
12. அந்த லிஸ்ட்ல இப்ப டிக் டாக்கும் சேர்ந்துக்குச்சு,
13. நிமிரிந்து நடக்கும் பெண்கள்(பாறேன் எப்படி நெஞ்ச நிமிர்த்தி நடக்குறா...)

கொஞ்சம் பின்னோக்கி சென்றால்

1. இரவில் தனியாக வரும் பெண்கள் ( டெல்லி மாணவி வன்புணர்வில் அவ ஏன் 9 மணிக்கு வெளியே வர்றா என்ற கேள்வியை கேட்டவர்கள் பலர்)
2. சுடிதார், நைட்டி உடுத்தும் பெண்களை கூட அந்த கேட்டகரியில் வைத்திருந்தார்கள் என்றால் மிகையாகாது.
3. வேலைக்கு செல்லும் பெண்கள் (ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் வேலை செய்த இடத்து முதலாளி வேலைக்கு வரும் பெண்களை இழிவாக  சொன்னதாக கேள்விபட்டு இரண்டொரு மாதத்தில் வேலையையே விட்டேன்).
4. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலைனு தனியே வாழும் பெண்ணின் பெண்ணை மணம் செய்ய முன் வரமாட்டார்கள்.
தந்தை குடிகாரராகவோ, பெண் பித்தராகவோ இருக்கும் பட்சத்தில் அவர் பெண்ணை கீழ்தரமாக பார்ப்பதும் நடத்துவதும் என்று

இன்னும் இன்னும் பெண்ணை பணிய வைக்க, கூண்டில் அடைக்க ஆயிரம் ஆயிரம் வியாக்கியானங்கள்,  விமர்சனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோனாலும் புதிது புதிதாக அடக்குமுறைக்கான விதிமுறைகள் உருவாகி கொண்டு தான் இருக்கின்றன.

புது விதிமுறைகளுக்கு எடுத்துகாட்டு

விதவிதமாக செல்பி போடும் பெண்கள்,
இரவில் முகநூல் பயன்படுத்தும் பெண்கள் ,
காதல் மற்றும் கலவி கவிதைகள் எழுதும் பெண்கள்,

Etc.,  etc.,

ஒரு பெண்ணின் ஒழுக்கம் என்பது அவள் உடலமைப்பிலோ நடக்கும் அழகிலோ இல்லை.
அவள் உள்ளத்திலும், நடவடிக்கைகளிலும், கண்களிலும் இருக்கிறது ஒழுக்கம்.

ஆனால் ஒழுக்கம் என்றால் என்ன என்பதே இங்கு குழப்பமாக இருக்கையில் எதை வைத்து பெண்ணை ஒழுக்கம் கெட்டவள் என்று முடிவெடுப்பீர்கள்?
ARUPATHU ONBATHU TAMIL69COM #arupathuonbathu #tamil69com #tamil69postion #tamilcom #tamilcom69 #arupathuonbathu #tamil69com #tamil69postion #tamilcom #tamilcom69 #arupathuonbathu #tamil69com #tamil69postion #tamilcom #tamilcom69

Post a Comment

0 Comments