Subscribe Us

header ads

திருமண வாழ்க்கையில், உடலுறவு என்பது பிரதானமான மற்றும் தவிர்க்க முடியாத அம்சங்களில் ஒன்று.

திருமண வாழ்க்கையில், உடலுறவு என்பது பிரதானமான மற்றும் தவிர்க்க முடியாத அம்சங்களில் ஒன்று. உங்கள் துணைவருடனான மகிழ்ச்சியான தாம்பத்ய உறவு, உங்கள் இருவருக்கும் இடையே நிலையான நம்பிக்கையையும், பாராட்டுகளையும் உண்டாக்குவதுடன்,  உங்கள் இருவருக்குமிடையே உணர்ச்சிப் பெருக்கை உருவாக்கி ஆழமான நிலையில், உங்களை இணைக்கிறது. எனினும் பல தம்பதிகள் தங்களுக்குள் உடல் உறவு வைத்திருப்பது குறைந்துள்ளதாக கூறுகின்றனர். அதாவது படுக்கை அறையில் “பார்த்ததும் பற்றிக்கொள்ளக் கூடிய நெருக்கம்” இல்லை என்பதாக தெரிவிக்கின்றனர்.குழந்தைகள் பிறந்த பிறகு அல்லது வயதாகும் காரணத்தினால் தாம்பத்ய உறவு கொள்வதற்கான ஆற்றல், தம்பதிகளுக்குள் குறைவது என்பது சாதாரணமான விஷயம் தான். இருப்பினும்  நீங்கள் புதிதாக திருமணமானவர்களாய் இருந்து அல்லது இளமையான காலத்தில் உங்களுக்கு தாம்பத்ய செயல்பாடுகளில் ஆர்வம் இன்மை என்பது வருத்தத்துக்குரிய  ஒன்று.பெரும்பாலான தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை நன்றாக ஆரம்பிப்பார்கள்.  ஆனால் நாட்கள் செல்லச்செல்ல தாம்பத்ய உறவு இல்லாமல் வாழ போராடுகிறார்கள்,  தங்கள் தாம்பத்ய ஆசைகளை மொத்தமாக அழித்து விடுகின்றனர். தம்பதிகளுக்கு இடையே காணப்படும் தாம்பத்ய இடைவெளிக்கு  காரணங்கள் என்னவாக இருக்கும்?  நாட்கள் செல்லச்செல்ல துணைவியின் மீது ஈர்ப்பு குறைந்தது போன்று எண்ணுகிறார்களா? அல்லது ஈர்ப்பையும் தாண்டி வேறு ஏதும் விஷயங்கள் இருக்கின்றனவா?தாம்பத்ய நடத்தையில் காணப்படும் ஒழுங்கற்ற மாற்றங்களும், தாம்பத்ய உறவில் ஏற்படும் மனநிறைவுமே ஒருவரை, தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபடும் ஆசையையும் மற்றும் தீவிரமாக பங்கேற்பதையும் தடுக்கிறது. அவர்கள் உறவை ஆழமாகவும்,  அருகில் இருந்தும் ஆய்வு செய்தால் இந்த மாற்றங்களுக்கு என்ன காரணம் என்பது தெரிய வரும்.ஏராளமான குடும்பங்களில் அதிலும் குறிப்பாக பெண்களுக்கு  உணர்ச்சிகளே தாம்பத்ய உறவை இயக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே உணர்ச்சி இடைவெளி இருக்குமானால், உங்கள் மனைவியின் மனதில் உள்ள உணர்ச்சி கொந்தளிப்பை சரி செய்யும் வரை, அவர்களால் உங்களைப்போல தாம்பத்ய உறவில் உற்சாகமாக ஈடுபட முடியாது. உங்கள் மனைவியை தற்செயலாக ஏதாவது தருணங்களில் காயப்படுத்தி இருந்தால், அது என்னவென்று உங்கள் மூளையை கசக்கி பிழிந்து யோசித்து, உங்கள் ஆழ்மனதில் இருந்து வெளியே கொண்டு வந்து வெளிப்படையாக பேசுங்கள். உடலுறவு கொள்ளவில்லை என்று நீங்கள் உணரும்போது,  உடலளவில்  நெருக்கம் இருந்ததா? என சில நேரங்களில் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது முக்கியம். அப்படி ஏதும் இல்லாவிட்டால், தற்போதைய சூழ்நிலையை பெரிதாக்குவதில் அர்த்தமில்லை. முதலில் பிரச்சனைகளை பற்றி பேசுவதன் மூலம், நீங்கள் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் வழிகளை கண்டறிய வேண்டும். உங்கள் இருவரில் யாரேனும் ஒருவர் தாம்பத்ய உறவை தொடங்க மிகவும் கூச்ச சுபாவம் உடையவராக இருப்பதும்,  உங்கள் உடல் உறவுக்கு தடையாக இருக்கலாம். இதற்கு பயனுள்ள அணுகுமுறை என்னவெனில், இருவரும் முதலில் ஒருவருக்கொருவர் சௌகரியமாக பேசி, சிரித்து  சில விஷயங்களை இணைந்து செய்யுங்கள். உணர்ச்சிகளில் ஏற்படும் நெருக்கம் எப்போதுமே உடலளவில் நெருக்கத்தையும் ஏற்படுத்திவிடும்.உடல் சார்ந்த பிரச்சினைகளும் மற்றும் உணர்ச்சி சார்ந்த பிரச்சனைகளும் கூட இதற்கு காரணமாக அமையலாம். உடலமைப்பு, தான் பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கிறோம் என்பதில் ஏற்படும் அச்சம் மற்றும்  சுகாதாரம் கூட ஒரு தம்பதிகள் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. நாட்கள் செல்லச்செல்ல தம்பதிகள் தங்களுக்குள் நல்ல புரிதல் காரணமாக மிகவும் வசதியாக உணர்வதினால், ஒருவருக்கொருவர் தங்கள் உடலை நன்றாக கவனித்து தாம்பத்ய செயலுக்கு தேவையான காரியங்களிலும் அக்கறை கொள்வார்கள். உடலுறவு கொள்வதற்கு முன், சவரம் செய்தல் மற்றும் குளித்தல் போன்ற செயல்கள் இரண்டாம் நிலையில் இருக்கும். ஆனால் சில செயல்கள் முக்கியமானவையாக உள்ளது. மன சுழற்சி நோயால்(OCD) பாதிக்கப்பட்டவர்களுக்கும்  அல்லது உடல் ஆரோக்கியத்தைக் குறித்து அக்கறைப்படும் மக்களுக்கும் சுகாதாரம் மற்றும் சுய பராமரிப்பு ஆகிய இரண்டும் முதன்மை விஷயங்களாக இருக்கும். ஏனெனில் அவர்கள் தங்கள் துணையுடன், தாங்கள் உடலளவில் மிக நெருங்கியவர்களாக இருப்பதை பார்க்கின்றனர். உடல் நறுமணம் மற்றும் சுவாசம் போன்றவை கூட உடல் உறவுக்கு முன்பாக கவனிக்க வேண்டியவை. தன் மனைவி தன்னுடன் மகிழ்ச்சியாக இல்லை என அறிந்தும் ,ஒருவர் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வதில் செய்யும் அலட்சியம்,  உங்களையும் அறியாமலே உங்கள் தாம்பத்ய வாழ்க்கைக்கு தொந்தரவாக அமைந்துவிடும்.குழந்தையின்மையால் போராடும் தம்பதிகள் தாம்பத்ய வாழ்வை  பலன் கொடுக்காத வேலையாக மாத்திரம் கருதுவார்கள்.

Post a Comment

0 Comments