Subscribe Us

header ads

பிரசவம்

பிரசவம்:

ஃபால்ஸ் பெயின் (False Pain) என்று வரும் பிரசவ வலிக்கு முன்னதாக, சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரைக் குடித்தால் அடங்கி விடும்.  உண்மையான வலியாக இருந்தால் 32 வலிகள் அடுக்கடுக்காக வரும்.

நிறை மாதம் ஆகி இடுப்பு வலி கண்ட உடனேயே மருத்துவமனைக்கு கிளம்பும் முன் செய்ய வேண்டியது ஒரு ஸ்பூன் சோம்பை கடாயில் போட்டு நன்கு கறுகுமாறு வறுத்து, அதில் ஒரு டம்ளர் (200 மில்லி கிராம்) நீர் விட்டு அது கொதித்து அரை டம்ளராகச் 
சுண்டும் வரை வைத்து இளஞ் சுட்டுடன் அதைக் கர்ப்பிணி பருகுவது நல்லது.  இதனால் வலி தங்குதடையின்றி வேகமாக ஏற்ப்பட்டு இயற்க்கையான முறையில்  குழந்தை பிறக்கும். வலி பொய் வலியாக இருப்பின் இக் கஷாயம் வலியை நிறுத்திவிடும்.

பிரசவிக்க கஷ்டப்படும்போது 3 அவுன்ஸ் சுத்தமான தேனை குடிக்க கொடுத்தால் கஷ்டம் குறைந்து குழந்தை பிரசவம் ஆகும்.

பிரவசவத்திற்க்குப் பின்:

குழந்தை பிறந்ததும் கஸ்தூரியை வெற்றிலையில் வைத்து உடனே உள்ளுக்குக் கொடுத்தால், வயிற்றில் எஞ்சியுள்ள நீர், அழுக்கு வெளிவந்துவிடும்.

பல இளம் தாய்மார்களுக்கு தீராத கவலை தரக்கூடிய விஷயம், பிள்ளை பெற்ற பின் வயிற்றில் ஏற்படுகின்ற 'ஸ்ட்ரெட்ச்' மார்க்குகள். உளுத்தம் பருப்பு இதற்க்குத் தீர்வு வைத்திருக்கிறது. உளுந்து மாவு 1 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் 1 டீஸ்பூன் இந்த இரண்டையும் உளுந்து ஊற வைத்த நீருடன் கலந்து கொள்ளுங்கள். இதனை 'பற்று' மாதிரி போட்டு, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். வரிகள் மங்கலாவதுடன் அரிப்பும் ஓடியே போகும்.

குழந்தை பிறந்தவுடன் பத்து நாட்கள் கழித்து பின் அன்றாடம் வெற்றிலை பாக்குடன் 2 முதல் 5 தாள் சேர்த்து மென்று விழுங்கி வர மகப்பேறு காரணமாக வரும் இரத்தப்போக்கு சீர்படும். தாய்க்கும் சேய்க்கும் சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகள் வராது. கண் பார்வை தெளிவு பெரும்.

Happy Delivery🌹🌹🌹🌹🌹

Post a Comment

0 Comments