மாதவிடாயைத் தாமதப்படுத்துவது எப்படி? (How to Delay your menses)
மாதவிடாயைத் தாமதப்படுத்த வேண்டிய அவசியம் (The need)
பெண்கள் சில சமயம், தங்கள் மாதவிடாயை தாமதப்படுத்த விரும்புவார்கள். குறிப்பாக விடுமுறைகள், திருமணம், தேர்வுகள், பூஜை அல்லது கோவிலுக்குச் செல்லுதல் போன்ற தருணங்களில் அவர்கள் தாமதப்படுத்த வேண்டியிருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளில் மாதவிடாயைத் தாமதப்படுத்துவது உதவிகரமாக இருக்கலாம்.
மாதவிடாயைத் தாமதப்படுத்துவதன் நன்மைகள் (The benefits of delaying a period)
மாதவிடாயைத் தாமதப்படுத்துவதால், மாதவிடாய் தொடர்பான பின்வரும் அறிகுறிகளிலிருந்து ஓய்வு பெறலாம்:
வயிற்று உப்புசம்
தலைவலி
குமட்டல், வாந்தி
நடத்தை மாற்றங்கள்
ஒற்றைத் தலைவலி அல்லது வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு அந்தப் பிரச்சனைகள் அவ்வப்போது திடீரென்று அதிகமாதல்
பின்வரும் சூழ்நிலைகளில் மாதவிடாயைத் தாமதப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்:
மாதவிடாய்க்கு முந்தைய துன்பக் கோளாறு
வலிமிகுந்த மாதவிடாயுடன், கருப்பை உட்படலம் இடமாறுதல்
ஹார்மோன் மாற்றத்தால் உண்டாகும் அறிகுறிகள்
வழக்கத்திற்கு மாறான கருப்பை இரத்தக்கசிவு
இரத்தப்போக்கு உணர்வு (ஹேமோராஜிக் டயத்தெசிஸ்)
மாதவிடாய் சுழற்சிக் காலத்தை நீட்டிப்பதால் தலைவலி, சோர்வு, வயிற்று உப்புசம், பிறப்புறுப்பு எரிச்சல் மற்றும் மாதவிடாய் வலி ஆகியவை குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், பெண்கள் நோய்களை எதிர்கொள்ளும் நிகழ்வுகளைக் குறைப்பதுமே மாதவிடாயைக் கட்டுப்படுத்துவதன் நோக்கம்.
மாதவிடாயைத் தாமதப்படுத்துவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிகள் 100% திருப்திகரமாக இருக்கும் என்று கூற முடியாது. எனினும், உங்கள் மாதவிடாயைத் தாமதப்படுத்த இவை உதவலாம்.
மாதவிடாயைத் தாமதப்படுத்துவதற்கான வழிகள் (Ways to delay your period)
ஒருங்கிணைந்த கருத்தடை மாத்திரைகள் (COCP)
நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட டோஸில் COCP-ஐப் பயன்படுத்துகிறீர்கள் எனில், இடைவெளியின்றி அதை அப்படியே தொடர்ந்து பயன்படுத்துங்கள். இருப்பினும், இரண்டு பேக்குகளை முடித்தபிறகு ஏழு நாட்கள் இடைவெளி தேவைப்படலாம்.
வெவ்வேறு வகையான மாத்திரைகளை வெவ்வேறு முறையில் பயன்படுத்த வேண்டியிருக்கும்:
குறிப்பிட்ட நாட்கள் மட்டும் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் - வழக்கமாக கருத்தடைக்காக இந்த மாத்திரைகள் 21 நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும், பிறகு 7 நாட்களுக்கு மாத்திரை கிடையாது. அந்த சமயம் இரத்தப்போக்கு ஏற்படும். இதே மாத்திரைகளைக் கொண்டு மாதவிடயைத் தாமதப்படுத்த, கடைசி மாத்திரையை முடித்த பிறகு ஏழு நாள் இடைவெளி விடாமல், புதிய பேக்கைத் தொடங்கி, மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் - வழக்கமாக, கருத்தடைக்காக இந்த மாத்திரைகள் ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ளப்படும். முதலில் எடுத்துக்கொள்ளும் 21 மாத்திரைகள் செயல்பாடு மிக்கவை, பிறகு இரத்தப்போக்கு ஏற்படும்போது எடுத்துக்கொள்ளும் அடுத்த 7 மாத்திரைகள் செயலற்றவை. செயலற்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல் அதற்குப் பதில், புதிய பேக்கில் இருந்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உங்கள் மாதவிடாய் தாமதமாகும்.
காலகட்டம் சார்ந்த மாத்திரைகள் - இந்த வகை மாத்திரைகள் ஒருவரின் மாதவிடாய் காலகட்டத்தைப் பொறுத்து வேறுபாடும். இந்த மாத்திரைகள் நல்ல விதமாக கருத்தரிப்பைத் தடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டுமானால், அவற்றை சரியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மாதவிடாயைத் தாமதப்படுத்துவதற்கு, எந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
புரோஜெஸ்ட்ரோன் மட்டும் கொண்ட மாத்திரைகள் - இந்த மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால், உங்கள் மாதவிடாய் தள்ளிப்போகாது. மாதவிடாயைத் தாமதிக்க வேறு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாதவிடாயைத் தாமதப்படுத்த எந்த வகை மருந்தை எடுத்துக்கொள்வது என்று தெளிவாகத் தெரியாவிட்டால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
நீங்கள் கருத்தடைக்காக மாத்திரைகள் எதுவும் எடுத்துக்கொள்ளாவிட்டால்? (What if I am not on any pills?)
நீங்கள் கருத்தடைக்காக மாத்திரைகள் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை எனில், மாதவிடாயை எப்படித் தாமதப்படுத்துவது என்பது பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். புரோஜெஸ்ட்ரோன் உள்ள ஹார்மோன் மாத்திரைகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.
மாதவிடாயைத் தாமதப்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் (Disadvantages of delaying your periods)
மாதவிடாயைத் தாமதப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து உங்களுக்கேற்ற சிறந்த முறையைப் பரிந்துரைக்கக் கேளுங்கள். இதனால் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகள: மாதவிடாய் ஏற்படும் இடைப்பட்ட நாட்களில் கரைபடுதல் இரத்தப்போக்கு.
மாதவிடாய் நின்றுவிட்டால் கர்ப்பமாக இருக்கிறோமா இல்லையா என்பதைக் கண்டறிவது கடினமாகும். கர்ப்பமாக இருப்பதாக சந்தேகித்தால், அதனை உறுதிப்படுத்த கர்ப்பப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் அல்லது மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
ARUPATHU ONBATHU
TAMIL69COM
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69
#arupathuonbathu
#tamil69com
#tamil69postion
#tamilcom
#tamilcom69

0 Comments
YOUR COMMENT THANKYOU