#NoBraDay
#NoBraEver
பிரா போடுவது மிகவும் எளிமையானது கிடையாது. பர்தா போடுவது எவ்வளவு கடினமோ அதைவிட கடினமானது பிரா அணிவது.பிராவையும் போட்டுக்கொண்டு அதற்கு மேல் ஒன்று அல்லது இரண்டு அடுக்கு உடை அணிந்து அதற்கு மேல் பர்தா போடும் பெண்களின் நிலையை விவரிப்பது கடினம்.
பிரா அணிந்திருக்கும் போது மூச்சடைக்கும், நிம்மதியாக மூச்சு விடமுடியாது , நிறைய பெண்கள் இழுத்து மூச்சு விடுவதை பார்த்திருக்கலாம். இது மிகவும் கொடுமையானது. உலகத்தில் உயிர்வாழ மிகவும் முக்கியமானது மூச்சிக் காற்று என்பதை யாரும் மறந்திறுக்க வாய்ப்பில்லை.
பிராவை தன் கவசம் போல் 12 -18 மணி நேரமும் போடுபவர்கள் ஏராளம், அவர்களை நினைத்தால் வருத்தமாகத் தான் இருக்கிறது. அவர்களுக்கு பிரா அழுத்தி அழுத்து கருப்புத்திட்டான கோடு ஏற்பட்டிருக்கும். மூக்கு கண்ணாடி அணிபவர்களுக்கு மேல்மூக்கு பகுதியில் இத்தகைய திட்டை பார்க்கலாம். 24 மணி நேரமும் பிரா அணிபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன, இவர்கள் இத்தகைய பழக்கத்தை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.
#NoBraDay என்பது வருடத்திற்கு ஒருநாள் நிகழ்வு கிடையாது. தினந்தோறும் பெண்கள் பிரா அணிவதை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி ,விளையாட்டு, ஆடல் போன்ற உடலை ஆட்டி, அசைத்துச் செய்யும் பயிற்சிகளின் போது மட்டும் பிரா அணியலாம். தற்போதைய சூழலில், பெண்கள் தன் உடலை அசைத்து,ஆட்டி எந்த வேலையும் செய்வதில்லை அதற்கான தேவையும் இல்லை. அதனால், தினமும் பிரா அணிவதை தவிர்க்கலாம்.
மார்பகங்கள் தொங்குவதை பிரா போட்டு சரிசெய்யக் கூடாது , தனது ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய தருணம் அது.

0 Comments
YOUR COMMENT THANKYOU