Subscribe Us

header ads

தாய்ப்பால் சுரக்க சில தந்திரோபாயங்களைப் பின்பற்றலாம்.

தாய்ப்பால் சுரக்க சில தந்திரோபாயங்களைப் பின்பற்றலாம். அதன் மூலம் கண்டிப்பாக மடிப்பால் சுரக்கும். தாய்மை என்பதை முழுமையடைவதென்றால், குழந்தைக்கு மார்பு பால் ஊட்டுவதன் மூலமே நிறைவடையும்.

இன்று பல தாய்மார்கள் தனிக்குடித்தனத்தில்தான் வசிக்கின்றனர். நகரங்களில் வசிப்போருக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்த அதிக அக்கறை இல்லை. அல்லது அதைப் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கின்றனர்.

குழந்தைப் பெற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைளுக்கு முலைப்பால் குடிக்க வைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு உறுதிபட தெரிவித்துள்ளது.
கிராம புறங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இயல்பாக நடக்கிறது. கிராம்புற தாய்மார்கள் அங்கு கிடைக்கும் தானிய வகைகள் மற்றும் சத்தான கீரை வகைகளை உட்கொள்வதால் அவர்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் 99.9% பிரச்னை ஏற்படுவத்திலை.

இயந்திர உலகில் வசிக்கும் நகர பெண்டுகளுக்கும், பெருநகர பெண்களுக்கும், நவநாகரீக பெண்மணிகளுக்கும்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. குறிப்பாக ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்தில் ஊறிப்போன பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பில் பிரச்னை ஏற்படும்.

குறிப்பிட்ட தாய்மார்களுக்கு அவர்கள் உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாக இயல்பாகவே தாய்ப்பால் சுரக்காது.

தாய்ப்பாலில் உள்ள கொலஸ்ட்ரம் என்ற சத்து, குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு வெளிப்படும் சீம்பாலைத்தான் இப்படிச் சொல்கிறோம்.

தாய்ப்பால் அருந்தி வளர்ந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிக புத்திசாலிகளாக விளங்குகிறார்கள் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பல மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பிற்காலத்தில் தேவைக்கதிகமான பருமனோடு இருப்பதில்லை.

எவ்வளவு நேரத்திற்கொருமுறை தாய்ப்பால் கொடுப்பது? பசித்து அழும்போது கொடுக்கலாம். மற்றபடி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம். பத்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை பால் கொடுக்கலாம். ஆனாலும் குழந்தைகள் வேகமாகப் பாலை உறிஞ்சிக் கொள்கின்றனவா அல்லது மெதுவாகவா என்பதைப் பொறுத்ததுதானே அது அருந்தும் அளவு? எனவே ஐந்து நிமிடம் பால் கொடுத்தவுடன் குழந்தைக்குத் தூக்கம் வருகிறது என்றால் அதைத் தூங்க அனுமதித்துவிடுங்கள். எழுந்தபிறகு கொடுக்கலாம்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்டர்கள் கொடுக்கும் முதல் அறிவுரை, சத்தான உணவுகளோடு அதிக அளவில் பசும்பால் குடியுங்கள் என்பதுதான். எந்த அளவுக்கு அதிகமாக பசும்பால் குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்கிறார்கள் டாக்ரர்கள்.

தமிழர்களின் சமையலில் அதிகம் இடம் பிடிக்கும் மூலிகையான பூண்டுக்கும் தாய்ப்பாலை பெருக்கும் சக்தி அதிகம் உள்ளது. தினமும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது என்பது அனுபவ உண்மை. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

Post a Comment

0 Comments