Subscribe Us

header ads

மார்பக வலி - Breast Pain

மார்பக வலி - Breast Pain
   

பெண்களைப் பாதிக்கும் மிகவும் வழக்கமான மார்பகப் பிரச்சினை, மஸ்டால்ஜியா எனவும் அறியப்படும் மார்பக வலி ஆகும். 70% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் இதனால் பாதிக்கப்படுகின்றனர். உங்கள் மார்பகத்தில் ஏற்படும் வலியானது, மாதவிடாய் சுழற்சி, நோய்த்தொற்றுக்கள், அழற்சி (வீக்கம்), தாய்ப்பால் ஊட்டுதல், இன்ன பிற காரணங்களால் ஏற்படக் கூடும். நீங்கள் ஒன்று அல்லது இரண்டு மார்பகத்திலும் வலியை உணரக் கூடும்.

வழக்கமாக, மார்பக வலி என்பது ஒரு தீவிரமான பிரச்சினை அல்ல. பெண்கள் அடிக்கடி இது மார்பகப் புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம் எனக் கவலைப்படுவர், ஆனால் அவ்வாறு இருப்பது அரிதானது ஆகும்.

இருந்தாலும், உடனடியான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பெறுதல் அறிவுறுத்தத்தக்கது ஆகும். மருத்துவர்கள் தேவையான பரிசோதனைகளுக்கு உட்படுமாறு உங்களைக் கேட்டுக் கொள்வர். சிகிச்சையானது, பின்னால் மறைந்து இருக்கும் காரணத்தைப் பொறுத்தது மற்றும் மிதமான வலியாக இருக்கும் பட்சத்தில் ஆலோசனை கூறுதலையும், மற்றும் வலி மிகவும் கடுமையாக இருக்கும் பட்சத்தில், மருந்துகள் அல்லது ஸ்டெராய்டு ஊசிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. மிகவும் அரிதாக எப்போதாவது அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. 

மார்பக வலியின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை ஆகியவை பற்றி விரிவாக அறிந்து கொள்ள, தொடர்ந்து படிக்கவும்.

மார்பக வலியின் வகைகள் - Breast pain types in Tamil
மார்பக வலி அறிகுறிகள் - Breast pain symptoms in Tamil
மார்பக வலிக்கான காரணங்கள் - Causes of breast pain in Tamil
மார்பக வலி ஏற்படாமல் தடுத்தல் - Breast pain prevention in Tamil
மார்பக வலி நோய் கண்டறிதல் - Breast pain diagnosis in Tamil
மார்பக வலி சிகிச்சை - Breast pain treatment in Tamil

மார்பக வலியின் வகைகள் - Breast pain types in Tamil
இரண்டு வகையான மார்பக வலிகள் இருக்கின்றன - சுழற்சி மற்றும் சுழற்சி -அற்றது. முதலாவது உங்கள் மாதவிடாய் சுழற்சியுடன் இணைந்ததாக இருக்கின்ற வேளையில், அடுத்தது வேறு ஏதேனும் காரணத்தினால் ஏற்படும் மார்பக வலியைக் குறிக்கிறது.

சுழற்சி மார்பக வலி
சுழற்சி மார்பக வலி, பெண்களால் உணரப்படும் மிகவும் வழக்கமான வகை மார்பக வலி ஆகும். அது, மாதவிடாய் சுழற்சிகளின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக ஏற்படுகிறது. உங்கள் மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு, இந்த வலியை நீங்கள் உணரலாம் 
 
சுழற்சி-அற்ற மார்பக வலி
சுழற்சி-அற்ற மார்பக வலி, உங்கள் மாதவிடாய் சுழற்சியோடு தொடர்புடையது அல்ல. இந்த வகை வலி, மாதவிடாய் தேதிக்குத் தொடர்பில்லாமல், எந்த நேரம் வேண்டுமானாலும் உணரப்படக் கூடியதாகும். இது. மிகவும் வழக்கமாக மாதவிடாய் நிற்றலை அடைந்த முதுமையான பெண்களுக்கு ஏற்படுகிறது.
மார்பக வலி அறிகுறிகள் - Breast pain symptoms in Tamil
மார்பக வலியின் அறிகுறிகள், உங்கள் மார்பக வலியின் வகையைப் பொறுத்தது ஆகும். சுழற்சி மற்றும் சுழற்சியற்ற மார்பக வலிகள், மாறுபட்ட குறிகள் மற்றும் அறிகுறிகளுடன் ஏற்படுகின்றன.

சுழற்சி மார்பக வலி

பின்வரும் அறிகுறிகள், வழக்கமாக சுழற்சி மார்பக வலியுடன் இணைந்து இருக்கின்றன:

இரண்டு மார்பகங்களிலும் வலி உணரப்படுதல்.
இது வழக்கமாக மந்தமாக மற்றும் வலிமிக்கதாக இருக்கிறது.
சிலநேரங்களில் மார்பகங்களில் புடைப்புத்தன்மையும் கூட உணரப்படலாம்.
இது உங்கள் மாதவிடாய் காலத்துக்கு சில நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கிறது மற்றும் குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு நீடிக்கிறது.
உங்கள் மாதவிடாய் முடிந்த உடனே இது நீடிக்காது.
வழக்கமாக இந்த வலி, மார்பகத்தின் மேல் வெளிப்புற பகுதியில் உணரப்படுகிறது. ஆனால் அது தீவிரமாகும் பொழுது மற்ற பகுதிகளுக்கும் கூட பரவக் கூடும்.
சுழற்சி மார்பக வலி, மிகவும் பொதுவாக இளம்பெண்களுக்கே ஏற்படுகிறது.
சுழற்சி-அற்ற மார்பக வலி

சுழற்ச -அற்ற மார்பக வலி, பின்வரும் அறிகுறிகளின் அடிப்படையில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படக் கூடும்:

வழக்கமாக இது, வயதான பெண்களிடையே, குறிப்பாக மாதவிடாய் நிற்றலுக்குப் பிறகு காணப்படுகிறது.
இந்த வகை மார்பக வலி, மாதவிடாய் சுழற்சிகளோடு தொடர்புடைது அல்ல மற்றும் உங்கள் மாதவிடாய் தேதிகளுக்குத் தொடர்பில்லாமல் இதனை நீங்கள் உணரக் கூடும்.
வழக்கமாக இது, மார்பகங்களில் ஒன்றில் உணரப்படுகிறது மற்றும் வலி உணரப்படும் குறிப்பிட்ட பகுதிகளைக் கொண்டிருக்கிறது.
இந்த வலி,  உடற்பயிற்சிக்குப் பிறகு அல்லது பாதிக்கப்பட்ட பகுதியில் அழுத்தம் கொடுத்த பிறகு அதிகரிக்கக் கூடும்.
இது தொடர்ச்சியான மற்றும் துயரமிக்க ஒன்று ஆகும்.
உங்கள் அக்குள்களில் புடைப்புகள் அல்லது கட்டிகள் மற்றும் தோள்பட்டை, கைகள், முதுகு, இன்ன பிற பகுதிகளில் வலி ஆகியவற்றையும் நீங்கள் உணரலாம்.
மார்பக வலிக்கான காரணங்கள் - Causes of breast pain in Tamil
மார்பக வலிக்கு பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கக் கூடும். மிகவும் பொதுவாக அது, மாதவிடாய் சுழற்சி ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்கள் முன்னர் அல்லது ஹார்மோன்கள் சமநிலையின்மை காரணமாக ஏற்படுகிறது. இருந்தாலும், கீழே விளக்கப்பட்டுள்ளவாறு வேறு காரணங்களும் கூட இருக்கக் கூடும்.

ஹார்மோன்கள் சமநிலையின்மை

ஹார்மோன்கள் சமநிலையின்மை ஏற்படும் மூன்று முக்கிய கட்டங்களானவை, பூப்பு காலம் (ஒரு பெண் தனது முதல் முறை மாதவிடாய் அடைகிற பொழுது), கர்ப்ப காலம் மற்றும் மாதவிடாய் நிற்றல் (மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாக நிற்றல்) காலம் ஆகியவை ஆகும். இந்தக் கால கட்டங்களில், உங்கள் மார்பகங்களில், வலி, கனமான உணர்வு போன்றவற்றை ஏற்படுத்துகிற மாற்றங்களையும், மற்றும் உங்கள் மார்பகங்களில் புடைப்புகளையும் நீங்கள் உணரக் கூடும். 
 
சுழற்சி மார்பக வலிக்கான முக்கியமான காரணம், உங்களுடைய மாதவிடாய் சுழற்சி ஆகும். இருப்பினும், நிறைய ஆய்வுகள் முரண்பாடான முடிவுகளைக் கொண்டிருக்கின்றன. சுழற்சி மார்பக வலியை உடைய பெண்கள், அவர்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்ரோன், மற்றும் ப்ரோலாக்டின் ஹார்மோன்கள் அளவுகளில் மாற்றங்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த வலி, முட்டை விடுபடுதலுக்குப் பிறகு (கருப்பையில் இருந்து ஒரு முட்டை விடுபடுதல்) ஆரம்பிக்கிற சுழற்சியின் லுடீன் கட்டத்தின் போது தோன்றுகிறது.
 
மார்பக வலிகள் மீதான மருத்துவ இலக்கியத்தின் அமைப்புரீதியான ஒரு ஆய்வு, யார் மாதவிடாய் நிற்றலுக்குப் பிறகு ஹார்மோன் மாற்றீடு சிகிச்சை செய்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அதிகபட்ச அபாயம் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. அதனால் அவர்கள், மார்பக வலியில் ஒரு கணிசமான அளவு அதிகரிப்பை உணரவும் கூடும்.
மார்பக நீர்க்கட்டிகள்

மார்பகங்களில் அசாதாரணமான வகையில் திரவம் - நிரம்பிய கட்டிகள் தோன்றுவதும் கூட, உங்கள் மார்பகங்களில் ஏற்படும் வலி, அசௌகரியம், மற்றும் கனமான தன்மை ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கலாம். உங்கள் மார்பகங்களில் நீர்க்கட்டிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.

தாய்ப்பால் ஊட்டுதல்

மார்பக வலியுடைய பாலூட்டும் தாய்மார்களிடைய நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, அவர்களுக்கு ஏற்படும் மார்பக வலிக்கான மிகவும் பொதுவான காரணமாக, பால் நாளங்களில் ஏற்படும் அடைப்பினைக் கூறுகிறது. இந்த அடைப்புகள், மார்பக வலிக்கான காரணமாக இருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

அதனால், சிகிச்சை அளிக்காமல் விடப்பட்டால் அது, பாதிக்கப்பட்ட மார்பகத்தில் வீக்கம் மற்றும் நோய்த்தொற்று ஏற்படக் காரணமாகலாம்.

மார்பு தசையில் வலி

சிலநேரங்களில் மார்பக வலி, அடியில் உள்ள மார்பக தசையில் ஏற்படும் ஒரு காயம், அழற்சி அல்லது நோய்த்தொற்றின் காரணமாகக் கூட உணரப்படலாம். இந்த வலி, மார்பகத் தசையில் இருந்து உங்கள் மார்புக்குப் பரவக் கூடும். முழுமையான சிகிச்சை பெற உங்கள் மருத்துவரை சந்திக்கவும்.

அடிபடுதல்

உங்கள் மார்பகத்தில் ஏற்படும் ஏதேனும் திடீரென்ற அடி அல்லது காயம், நிலையான மார்பக வலி ஏற்படக் காரணமாகக் கூடும். அந்த பாதிக்கப்பட்ட பகுதி, தொடுதல் அல்லது அழுத்தம் கொடுக்கும் பொழுது, வலியை ஏற்படுத்துகின்ற தூண்டுதல் முனையாக செயல்படுகிறது.

ஃபைப்ரோசிஸ்டிக் நோய்

ஏராளமான பெண்கள், மார்பக திசுக்கள், மார்பகங்களில் புடைப்பு மற்றும் வலியை ஏற்படுத்துகிற திரவம் நிரம்பிய சிறிய நீர்க்கட்டிகளை உருவாக்குகின்ற, ஃபைப்ரோசிஸ்டிக் நோயைக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்சினை புற்று நோய் சார்ந்தது கிடையாது மற்றும் மிகவும் வழக்கமாக ஏற்படுவது ஆகும். சொல்லப் போனால் பெரும்பாலான மருத்துவர்கள், "ஃபைப்ரோசிஸ்டிக் நோய்" என்ற பதத்தைப் பயன்படுத்துவதைத் நிறுத்தி விட்டு, அதற்குப் பதிலாக அதை "ஃபைப்ரோசிஸ்டிக் மார்பகங்கள்" என்று அழைப்பதையே விரும்புகிறார்கள்.

மார்பக வலிக்கான மற்ற காரணங்கள்

பக்கவாட்டு மார்பு சுவர் வலி
மார்பக வலி, உங்கள் அக்குளுக்கு கீழே உங்கள் மார்பின் பக்கவாட்டில் இருக்கின்ற தசைகளில் ஏற்படும் ஒரு வீக்கம், காயம் அல்லது நோய்த்தொற்றின் காரணமாகக் கூட உணரப்படக் கூடும். இந்த வலி, மார்புகளுக்கும் கூட பரவலாம்.
 
கோஸ்டோசோன்ரிட்டிஸ்
அதீத அழுத்தத்தின் காரணமாக விலா எலும்புகளின் குருத்தெலும்பில் ஏற்படும் அழற்சியானது, கோஸ்டோசோன்ரிட்டிஸ் என அறியப்படுகிறது. இது, டியேட்டி-யின் நோய்க்குறியை ஒத்தது ஆகும். இந்தவலி நெஞ்சுப் பகுதியில் துவங்குகிறது, மார்பகங்களிலும் கூட அது உணரப்படுகிறது.
 
வாழ்க்கைமுறை காரணிகள்
மார்பக வலியைப் பாதிக்கின்ற காரணிகளைப் பற்றி ஆராய, 2016 ஆம் ஆண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறை, மனப்பதற்றம், காஃபி அருந்துதல், இன்ன பிற காரணிகள், மார்பக வலியோடு தொடர்புடையவையாக இருப்பது கண்டறியப்பட்டது.
  
பொருந்தாத பிராக்கள் அணிதல்
அதிக அளவிலான பெண்கள், மார்பக வலியோடு தொடர்புடையதாக இருக்கின்ற, பொருத்தமில்லாத பிராக்களை அணிகின்றனர். அதனால் நீங்கள், சரியான அளவுகளைக் கொண்ட, சௌகரியமான ஒரு பிராவை அணிய வேண்டும். சரியான அளவீடைப் பெற, ஒரு அளக்கும் நாடாவைப் பயன்படுத்தவும். அளவீடு செய்ய நீங்கள், ஒரு தோழி அல்லது ஒரு தொழில் முறை வல்லுனரின் உதவியைக் கூட நாடலாம்.
 
பட்டையின் அளவு: மார்பகத்தின் அடியில் அளக்கும் நாடாவை வைத்து கீழ் மார்பளவை அளக்கவும்
மார்பு / கப் அளவு (ஏ, பி, சி அல்லது டி): மார்பகத்தை அதன் முழுமையான பகுதியில், வழக்கமாக காம்புகள் இருக்கும் நிலை அளவில், அளக்கவும்.
 
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
புகையிலை, மது, போதை மருந்துகள், இன்ன பிற போதைப் பழக்கங்களும் கூட மார்பக வலிக்கு காரணமாகலாம். அவை, உங்கள் உடலில் உள்ள பாலுறவு ஹார்மோன்களின் அளவில் சமநிலையின்மையினை ஏற்படுத்தி, மார்பக புற்றுநோய் உட்பட பல்வேறு மார்பக பிரச்சினைகள் ஏற்படும் அதிக பட்ச அபாயத்துக்கு, உங்களை உள்ளாக்குகின்றன. 
 
புற்றுநோய்
அரிதாக, மார்பக வலி, மார்பக புற்றுநோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம். யு.கே -வின் என்.எச்.எஸ் -படி, வழக்கமாக மார்பக வலியானது, மார்பக புற்றுநோயின் ஒரு அறிகுறி இல்லை. மேலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்ற காரணங்களே, மிகவும் அநேகமாக மார்பகங்களில் ஏற்படும் வலிக்குப் பின்னால் இருக்கின்ற உண்மையான காரணமாக இருக்கின்றன. இருந்தாலும், உங்கள் மார்பகத்தில் வலியுடன் கூடிய ஒரு புடைப்பை நீங்கள் கவனித்தால், உடனடியாக நீங்கள் ஒரு மருத்துவரிடம் சென்று, அதைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
 
மற்ற மருத்துவரீதியிலான பிரச்சினைகள்
ஆஞ்சினா ( இதயம் தொடர்பான நெஞ்சு வலி), விலா எலும்பு முறிவு, இதயத் தமனி நோய், இரத்த சோகை, வயிற்றுப் புண்கள் உட்பட  வேறு சில பிரச்சினைகளில், வலி உங்கள் மார்பகங்களுக்குப் பரவக் கூடும்.
எப்பொழுது ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டும்?

ஒருவேளை உங்கள் மார்பக வலி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளுடன் இணைந்து காணப்பட்டால், நீங்கள் உடனடியாக உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது மிகவும் முக்கியமானது ஆகும்:

சுய - பரிசோதனையின் போது, மார்பகத்தில் கட்டி அல்லது உங்கள் அக்குளில் ஒரு கட்டி இருப்பதாகத் தோன்றினால்.
உங்கள் காம்புகளில் இருந்து திரவம் (வெண்மை - மஞ்சள் அல்லது இரத்தம் போன்ற நீர்) வெளியேறுதல்.
உங்கள் மார்பகத்தில் குழிவு (கண்ணுக்குத் தெரிகின்ற ஒரு பள்ளம்) இருந்தால்.
உங்கள் மார்பகத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படுதல்.
உங்கள் மார்பகக் காம்புகளின் நிலைகளில் ஒரு விலகல்.
உங்கள் மார்பக சருமத்தின் மீது ஒரு புண் ஏற்படுதல்.
ஒன்று அல்லது இரண்டு மார்பகங்களும் திடீரெனப் பெரிதாகுதல்.
மார்பக வலி ஏற்படாமல் தடுத்தல் - Breast pain prevention in Tamil
மார்பக வலி ஏற்படாமல் தடுப்பது அதன் வகையைப் பொறுத்தது. நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ளவாறு, மார்பக வலியானது மாதவிடாய் சுழற்சிகளின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் ஏற்படுகிறது, அதனால், அதைத் தடுப்பதற்கு உங்களால் அதிகமாக எதுவும் செய்து விட முடியாது. இருந்தாலும், உங்கள் வாழ்க்கைமுறையை மாற்றி அமைப்பது மற்றும் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வது ஆகியவை உங்களுக்கு மார்பக வலி ஏற்படும் வாய்ப்புக்களைக் குறைக்கக் கூடும். மார்பக வலியைத் தடுக்க, நீங்கள் செய்யக் கூடிய ஒரு சில விஷயங்கள் பின்வருமாறு:

ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரியுங்கள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ணுங்கள். முறையான உடற்பயிற்சி மற்றும் ஒரு ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், நோய்த்தொற்றுக்கள், அழற்சிகள், மற்றும் நச்சுத்தன்மை சேர்தல் ஆகியவற்றைக் குறைக்க உதவும்.
உங்கள் மார்பகத் திசுக்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள, மாதம்தோறும் உங்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்து கொண்டு வருவதன் மூலம், உங்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கண்டறிய இயலும்.
நீங்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறையும், 30 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் ஒவ்வொரு வருடமும், ஒரு வழக்கமான பரிசோதனை செய்து கொள்ளும் நடைமுறையைப் பின்பற்றுங்கள்.
மார்பக வலி நோய் கண்டறிதல் - Breast pain diagnosis in Tamil
உங்கள் மருத்துவர், இந்த வலியை நீங்கள் எப்படி, எப்பொழுது மற்றும் எவ்வளவு காலமாக நீங்கள் உணர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்ற விவரங்களைப் பெற, ஒரு சில கேள்விகளைக் கேட்பதன் மூலமாக ஆரம்பிக்கலாம். மேலும் அவர்/அவள், எத்தனை முறை கருவுற்று உள்ளீர்கள், கருக்கலைப்புகளின் எண்ணிக்கை (ஏதேனும் இருந்தால்), நீங்கள் தாய்ப்பால் ஊட்டிக்கொண்டு இருக்கிறீர்களா அல்லது கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா என்பதைப் பற்றியும் கேட்கலாம். அதற்குப் பிறகு, ஏதேனும் வீக்கம், வலி, மார்பக கட்டிகள், புண்கள் இருக்கின்றனவா என்பதை சோதிக்க, உங்கள் மருத்துவர் உங்கள் மார்பகங்களைப் பரிசோதனை செய்யக் கூடும்.

சிலநேரங்களில், மருத்துவமனையில் செய்யப்படும் மதிப்பீடு தீர்மானிக்கத்தக்கதாக இல்லாமல் இருக்கலாம். எனவே, பின்வருவன போன்ற சில பரிசோதனைகளுக்கு உட்படுமாறு, நீங்கள் அறிவுறுத்தப்படலாம்:   

அல்ட்ராசவுண்ட்
இது, 35 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கு செய்யத்தக்கதான, ஒரு நோய் கண்டறிதல் பரிசோதனை ஆகும். இந்தப் பரிசோதனை, உங்கள் மார்பகத் திசுக்களின் ஊடாக செல்லக்கூடிய அல்ட்ராசவுண்ட் கதிர்களின் உதவியால் செய்யப்படுகிறது. இது நடைபெறுவதால், உங்கள் மார்பகத்தின் உட்புற அமைப்பு, உங்கள் மருத்துவரின் கணிணித் திரையில் தெரிகிறது. இந்த ஆய்வின் மூலம், சிறிய நீர்க்கட்டிகள் (ஏதேனும் இருந்தால்) மற்றும் உங்கள் மார்பகத் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய இயலும்.
 
மேமோகிராஃபி                                                                                    மோகிராஃபியும், வழக்கமாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு செய்யத்தக்க ஒரு நோய் கண்டறிதல் பரிசோதனை ஆகும். இந்தப் பரிசோதனையில் எக்ஸ்-கதிர்களை உங்கள் மார்பகத் திசுக்களின் ஊடாகச் செல்லுமாறு செய்து, தோன்றும் தோற்றப்படங்களில் ஏதேனும் அசாதாரணமான மாற்றங்கள் இருக்கின்றனவா எனக் கண்டறிய இயலும். மார்பகப் புற்றுநோய் மற்றும் நீர்க்கட்டிகளைக் கொண்டிருக்கும் குடும்ப வரலாறு உள்ள பெண்கள், மார்பக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க, தங்கள் மருத்துவர்கள் மூலமாக வருடத்திற்கு ஒரு முறை இந்தப் பரிசோதனையை செய்து கொள்ளலாம்
 
எம்.ஆர்.ஐ
எம்.ஆர்.ஐ அல்லது காந்த ஒத்திசைவு வரைவு என்பது, மிகவும் சிறந்த ஒரு நோய் கண்டறிதல் பரிசோதனை முறை ஆகும். அது மார்பகத் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிவது மட்டும் அல்லாமல், கூடவே அது, சுற்றியிருக்கும் உடல் பாகங்களில் அவை பரவியிருக்கும் பரப்பையும் சொல்கிறது.
 
மார்பு எக்ஸ்ரே
மார்பு எக்ஸ்ரே, மார்பக வலிக்கு காரணமாக இருக்கக் கூடிய, உங்கள் மார்பகத்தை சுற்றி இருக்கின்ற மற்ற அமைப்புகள் தொடர்பான அசாதாரணங்களைக் கண்டுபிடிப்பதில் உதவுகிறது.
மார்பக வலி சிகிச்சை - Breast pain treatment in Tamil
உங்கள் மார்பக வலிக்கான சிகிச்சை, அதன் பின்னால் மறைந்து இருக்கும் காரணத்தினைப் பொறுத்து இருக்கிறது.

ஆலோசனை வழங்கல்
மிதமான மார்பக வலிக்கு, பொதுவாக எந்த ஒரு சிகிச்சையும் தேவைப்படாது. உங்கள் மார்பக வலியைப் பற்றிய ஒரு நம்பிக்கையூட்டல் மற்றும் ஆலோசனை வழங்கல், உண்மையிலேயே உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் மருத்துவர், அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படத் தேவை இல்லாத, இயல்பாக ஏற்படுகின்ற மார்பக வலி பற்றிய விவரங்களை உங்களுக்கு வழங்குவார். உங்கள் வலியில் இருந்து விடுபடுவது குறித்த ஏதேனும் உணர்வுப்பூர்வ அல்லது உளவியல் பிரச்சினைக்காக, நீங்கள் ஒரு நிபுணரையும் கூட சந்திக்கலாம்.
 
மாலை நேர ப்ரிம்ரோஸ் எண்ணெய் மற்றும் வைட்டமின் இ
2010 ஆம் ஆண்டு, "சுழற்சி மார்பக வலியைப் போக்குவதற்காக வைட்டமின் இ மற்றும் மாலை நேர ப்ரிம்ரோஸ் எண்ணெய்" என்ற ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், 800 மி.கி வைட்டமின் இ, 3000 மி.கி மாலை நேர ப்ரிம்ரோஸ் எண்ணெய் எடுத்துக் கொள்வது அல்லது இந்த இரண்டின் கலவையை எடுத்துக் கொள்வது, உங்கள் மார்பக வலியைக் குறைக்க உதவக் கூடியது எனக் கண்டறியப்பட்டது. குறைந்தபட்சம் ஆறு மாத கால அளவுக்கு இவற்றை எடுத்துக் கொள்வது, நீங்கள் மார்பக வலியில் இருந்து விடுபட உதவுகின்றது. இருப்பினும், இன்னமும் இந்த பிற்சேர்க்கை பொருட்களின் செயல்திறனைப் பற்றிய ஆதாரங்கள், போதுமான அளவுக்கு உள்ளன எனக்   கருதப்படவில்லை. அதனால், இந்த பிற்சேர்க்கை பொருட்களை எடுத்துக் கொள்வதற்கு முன்னர், நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசிக்க வேண்டும். உங்கள் மருத்துவர் உங்கள் உடல் அமைப்பு, வயது, மற்றும் மருத்துவப் பிரச்சினைகளின் அடிப்படையில், நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சரியான அளவை உங்களுக்குத் தெரிவிப்பார்.
 
மருந்துகள்
உங்கள் மார்பக வலி கடுமையாக இருந்தால் உங்கள் மருத்துவர், ஒரு சில மருந்துகளை பரிந்துரைக்கலாம்.  டானசோல், டமோக்ஸ்சிஃபென், டார்மிஃபென், மற்றும் டிக்லோஃபெனாக் சோடியம், ஐபுபுரொஃபென் போன்ற வாய்வழி கொடுக்கப்படும் என்.எஸ்.ஏ.ஐ.டி. -க்கள் (ஸ்டெராய்டு இல்லாத அழற்சி-எதிர்ப்பு மருந்துகள்) ஆகியவை அவற்றுள் அடங்கும். இந்த மருந்துகள், உங்கள் மார்பக வலியைக் குறைக்கும், ஆனால் அவை பக்க விளைவுகளையும் கொண்டவை. அதனால், உங்கள் மருத்துவரை ஆலோசிக்காமல் எந்த மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 
குறிப்பிட்ட இடத்தில் செலுத்தப்படும் ஸ்டெராய்டு அல்லது மரப்புத்தன்மை ஊசிகள்
கோஸ்டோசோன்ரிட்டிஸ், மார்பு சுவர் வலி, காயம் போன்ற பிரச்சினைகளில், உங்கள் மருத்துவர், உங்களுக்கு வலி இருக்கும் இடத்தில் ஒரு ஸ்டெராய்டு அல்லது மரப்புத்தன்மை (வலி மரப்பு மருந்து) ஊசியை செலுத்தலாம். இந்த ஊசிகள், வலியை உடனடியாகக் குறைக்கின்றன.
 
நன்கு பொருந்துகின்ற ப்ரா
எதிர்காலத்தில் மார்பக வலி ஏற்படுவதைத் தடுப்பதற்கு, நன்கு பொருந்துகின்ற ப்ரா அணியவும். மேலே விளக்கப்பட்டுள்ள படி, உங்களுடைய சரியான அளவை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
 
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை மிக அரிதாகவே பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் அது, பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக இருக்கிறது.

Post a Comment

0 Comments