இந்த குழுவில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில்
Ippo naan keakkuran paar kelvi sari 45 naal aachu karbam confirm aayiduchunnu vachukkovom appo mudhalla janikkira uyir aana irukkuma illa pennayirukkuma naan yen idha kekkuranna Oru vindhu thuliyum Oru mudhikkanni muttaiyum serthaachu aanum pennum link aayittanga avanga serdhadhukku apparam yepdi piriyum apponna aambala paadhiyum pombala paadhiyum thaane porakkanum adhu yepdi Oru ponnavum illa Oru aanavum porakkudhu idhaiyellam sonna nammala paithiya kaarannu solranga
எல்லா மனிதர்களுக்கும் 46 குரோமோசோம்கள் உள்ளன. இதில் 23 பெண் கரு முட்டையில் இருந்து வருகிறது. மற்ற 23 குரோமோசோம்கள் ஆண் உயிரணுக்களில் இருந்து வருகிறது. மொத்தம் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கிறது. இந்த 23 குரோமோசோம்களில் 22 பரம்பரையாக வரக்கூடியது. 23 வது குரோமோசோம் ‘ஆணா? பெண்ணா?’ என செக்ஸை நிர்ணயிக்கும் குரோமோசோம். பெண் உடலில் 23 வதாக X செக்ஸ் குரோமோசோம் இருக்கும்.
ஆண் உடலில் 23 வது குரோமோசோமில் சில உயிரணுக்களில் X ஆகவும், சில உயிரணுக்களில் Y ஆகவும் இருக்கும். இந்த ஆணுக்கான குரோமோசோம், பெண்ணுக்கான குரோமோசோமுடன் சேர்ந்து XX என அமைந்தால் அது பெண் குழந்தையை உருவாக்கும். XY என அமைந்தால் ஆண் குழந்தையை உருவாக்கும். எந்தக் குழந்தை பிறந்தாலும் அதை நிர்ணயிப்பது ஆணின் குரோமோசோம்தான். எனவே, இதற்குப் பிரதான காரணம் ஆண்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதை புரிந்துகொள்ளாமல்தான் பெண் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அது உங்கள் குழந்தை. அதை பாதுகாப்பது உங்கள் கடமை. அதை விடுத்து அர்த்தமில்லாமல் கருக்கலைப்பு போன்ற காரியங்களில் ஈடுபடுவது கொலைக்கு சமமானது. இன்று குழந்தை பிறந்தாலே போதும் என பல தம்பதிகள் குழந்தைகள் இல்லாமல்
அல்லாடுவதை பார்க்கிறோம்.
குழந்தையின் அருமை உணர்ந்து செயல்படுங்கள். இன்றைய காலகட்டத்தில் எல்லாத் துறைகளிலும் பெண்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். அதனை புரிந்து பெண் குழந்தையை போற்றுங்கள். ஆண் குழந்தையை விட பெண் குழந்தை எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என்பதை உணருங்கள்.எந்தக் குழந்தை பிறந்தாலும் அதை நிர்ணயிப்பது ஆணின் குரோமோசோம்தான்!

0 Comments
YOUR COMMENT THANKYOU