பெண்ணியல் மருத்துவர்கள் கூறும் பெண்ணுறுப்பு குறித்த 5 முக்கியமான விஷயங்கள்!
லபியாபிளாஸ்டி என்பது பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற ஒன்று தான். அதாவது, பெண்ணுறுப்பு வடிவம் மற்றும் தோற்றத்தை மாற்றியமைக்கும் அறுவை சிகிச்சை முறை தான் இந்த லபியாபிளாஸ்டி. இந்த காலத்து உலக பெண்கள் மத்தியில் அழகு என்பது அத்தியாவசியமாக மாறிவிட்டது.
அதன் வெளிபாடு தான் இந்த லபியாபிளாஸ்டி. அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியான பெண்ணுறுப்பு இருக்காது. அளவு, தடிமன், நிறம் என அனைவர் மத்தியிலும் பெண்ணுறுப்பு வேறுப்பட்ட தோற்றத்தில் தான் இருக்கும் என பெண்ணியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே, இது ஏதோ பெண்ணுறுப்பு சார்ந்த பிரச்சனையோ, கோளாறோ அல்ல என்பதை பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்...
ஒவ்வொரு பெண்ணின் பெண்ணுறுப்பும் வெவ்வேறு மாதிரியான தோற்றத்தில் தான் இருக்குமாம். தோற்றம், அளவு, நிறம் போன்றவை கூட மாறுப்பட்டு தான் காணப்படும், ஒரே மாதிரியாக இருக்கும் என யாரும் எண்ண வேண்டாம் என பெண்ணியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பெண்ணின் கருவாய் நீளம், நிறம், தடிமன் என அனைத்தும் ஒவ்வொரு பெண் மத்தியிலும் வேறுப்பட்டு தான் காணப்படுகிறதாம். பிங்க், கரும்பழுப்பு என நிறங்கள் வேறுபடலாம் என பெண்ணியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், சில பெண்களுக்கு சற்று வெளிப்புறம் வரை கூட நீட்டித்து இருக்கலாம், இது இயல்பானது தான் கூறுகின்றனர்.
கிளிடோரியின் தலை பகுதி சிலருக்கு சுருக்கங்கள் உடையதாகவும், சிலருக்கு சாதாரணமாக மென்மையாக, சிறியதாகவும் கூட காணப்படுகிறது. மேலும் பெண்ணுறுப்பு உதடுகளின் (Labia) நிறம் மற்றும் தோற்றமும் கூட ஒவ்வொரு பெண் மத்தியிலும் தோற்றம், நிறத்தில் வேறுபட்டு தான் காணப்படும் என பெண்ணியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
லபியாபிளாஸ்டி என்பது பெண்ணுறுப்பு தோற்றம் மாற்றியமைக்கும் அறுவை சிகிச்சையாகும். அளவு மற்றும் தோற்றத்தில் வேறுபாடு இருக்கிறது என மேற்கத்திய நாட்டு பெண்கள் அதிகமாக இந்த லபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்துக் கொள்கின்றனர்.
மேலும், லபியாபிளாஸ்டி செய்துக் கொள்ளும் பெண்களில் பலரும் தங்களது பெண்ணுறுப்பை அழகுபடுத்திக் கொள்ள தான் செய்துக் கொள்கின்றனர் என பெண்ணியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வயதாக வயதாக உடலியல் மற்றும் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும் போது பெண்ணுறுப்பிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும், பிரசவித்த பிறகு பெண்ணுறுப்பில் மாற்றங்கள் தென்படுவது இயல்பு, இது நான்கைந்து மாதங்களில் அதுவாகவே சரியாகிவிடும்.
பெரும்பாலும் பெண்கள் மத்தியில் பிறப்புறுப்பு சார்ந்த ஒப்பீடுகள் நிலவுவதாகவும், அது தேவையற்றது எனவும் பெண்ணியல் மருத்துவர்கள்கூறுகின்றனர். அதிலும், சீன பெண்கள் ஐரோப்பிய பெண்களோடு அதிகமாக ஒப்பீடு செய்துக் கொள்கின்றனர்.
இது குறித்து நிறைய பேர் சிகிச்சை வேண்டி வருகிறார்கள். மேல்கூறியது போல, இது மிகவும் இயல்பானது இதை பெரிதுபடுத்த வேண்டாம் என பெண்ணியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இதற்காக லபியாபிளாஸ்டி செய்துக் கொள்வது அவசியமல்ல எனவும் கூறுகின்றனர்.
உங்கள் பெண்ணுறுப்பு ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருந்தாலே போதுமானது. அதன் தடிமன், அளவு, நிறம், நீளம் குறித்து கவலைக் கொள்ள வேண்டாம் என பெண்ணியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

0 Comments
YOUR COMMENT THANKYOU