வாரம் மூன்று முறை உடலுறவில் ஈடுபடுவதால் சிறுநீரக கற்களை கரைக்க முடியும்!!
உங்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனை இருக்கிறதா? இதற்காக வாழைத்தண்டு போன்ற ஜூஸ்களை பருகி வருகிறீர்களா? எந்த தவறும் இல்லை. ஆனால், சமீபத்திய ஆய்வொன்றில் மற்றதை விட வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை உடலுறவில் ஈடுபடுவதால் சிறுநீரக கற்களை விரைவாக கரைத்திட முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
அதிகாலையில் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மை தெரியுமா...?
ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்களுக்கு வெவ்வேறு முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் உடலுறவில் ஈடுபட்ட நபர்களுக்கு தான் அதிகளவில் சிறுநீரக கற்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வுக் கண்டுள்ளதாக ஆய்வின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
18 வயதிற்கு முன்பே தங்களது கற்பை இழந்த பிரபலங்கள் - அம்மாடியோவ்!!!
ஆய்வு மையம்
துருக்கியை சேர்ந்த அங்காரா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மருத்துவமனையில் (Clinic of Ankara Training and Research Hospita) தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் இந்த ஆய்வில் 90-க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கெடுத்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆய்வு
இந்த ஆய்வினை மூன்று குழுக்களாக பிரித்து நடத்தியுள்ளனர். ஒன்று, இரண்டு, மூன்று என ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இவர்களுக்கு வெவ்வேறு முறையில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
வெவ்வேறு முறை
முதல் குழுவிடம் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உடலுறவில் ஈடுபட கூறியுள்ளனர். இரண்டாவது குழுவிடம் 'Tamsulosin' எனப்படும் சிறுநீரை சரி செய்யும் மருந்து உட்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது. மூன்றாவது குழுவிடம் எப்போதும் எடுக்கும் மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ளும் படி கூறப்பட்டது.
இரண்டு வாரங்கள் கழித்து
இரண்டு வாரங்களில், உடலுறவில் ஈடுபடும் படி அறிவுறுத்தப்பட்ட 31 நபர்களில் 26 நபர்களுக்கு சிறுநீரக கற்கள் கரைய தொடங்கியது கண்டறியப்பட்டது.
மற்ற சிகிச்சைகள்
'Tamsulosin' எடுத்து வந்த இரண்டாவது குழுவில் 21நபர்களில் 10 பேருக்கு மட்டுமே மாற்றம் காணப்பட்டது. மற்றும் எப்போதும் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை உட்கொண்டு வந்த 23 பேரில் 8 பேர் மட்டுமே மாற்றத்தை உணர்ந்தனர்.
சிறுநீரக கல் அளவு
ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்களின் சராசரி சிறுநீரக கல்லின் அளவு 4.7 மி.மீ.; சிறிய சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் (6 மி.மீக்கு கீழே சிறுநீரக கற்கள் அளவுக் கொண்டுள்ளவர்கள்) உடலுறவில் ஈடுபடுவதால் சிறுநீரக பாதையை சீராக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
துணைக்கு அறிவுரை
எனவே, உங்கள் துணைக்கு சிறுநீரக கல் இருந்தால் (6 மி.மீக்கு அளவுக்கு கீழே) நீங்கள் அவர்களுடன் வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை உடலுறவில் ஈடுபடுவதால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
உடல் எடை
அரை மணிநேரம் நீங்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால் கரையும் அதே அளவு கலோரிகள் நீங்கள் உடலுறவில் ஈடுபடும் போது கரைகிரதாம்.
மன அழுத்தம்
மன அழுத்தமாக உணர்பவர்கள் உடலுறவில் ஈடுபடுவதால் மனம் இலகுவாக உணர முடிகிறதாம். இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது.

0 Comments
YOUR COMMENT THANKYOU