Subscribe Us

header ads

கருத்தடை மாத்திரைகள் ஏற்படும் பக்கவிளைவுகள்!!

கருத்தடை மாத்திரைகள் ஏற்படும் பக்கவிளைவுகள்!!

கருத்தடை மாத்திரைகள் என்பது தேவையற்ற கருத்தரிப்பை தவிர்க்க பயன்படுத்தப்படுவது. பெரும்பாலும் இந்த மாத்திரைகள் சாதாரணமாகவே மருந்தகங்களில் கிடைக்கின்றன. புதுமண தம்பதிகளுக்கு இது ஒரு வரப்ரசாதமாக திகழ்கிறது.
ஆனால், இந்த வரப்ரசாத்தில் இருக்கும் விஷமம் பற்றி பெரிதாக யாருக்கும் தெரிவதில்லை. கருத்தடை மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்துவதனாலும், முறை தவறி பயன்படுத்துவதனாலும் ஓர் கட்டத்தில் கருத்தரிக்கவே முடியாது என்ற நிலைக்கு பெண்கள் தள்ளப்படும் அபாயம் இருக்கின்றது.

கருத்தடை மாத்திரைகள் 25 – 45 வயதுள்ள பெண்களுக்கு, அவர்களது உடல் நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது என்பது பெரும்பாலுமான மக்களுக்கு தெரிவதில்லை. பதின் வயது பெண்கள் இதை உட்கொண்டால் நிரந்திரமாக அவர்களால் கருத்தரிக்க முடியாத அளவு பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்தடை மாத்திரை என்பது அவசர தேவைக்கானது ஆகும். சிலர் அடிக்கடி இதை உட்கொள்வதனால் மாதவிடாய் சுழற்சியில் இடையூறு ஏற்பட இவை காரணமாகிவிடுகின்றன. அடிக்கடி கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதனால் உடலுறவில் நாட்டம் குறைய வாய்ப்புகள் இருக்கிறதாம். இது, உணர்சிகளை குறைத்துவிடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதிகமாக கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதனால், குமட்டல், தலைவலி, வாந்தி, கீழ் வயிற்று வலி, உடல் எடை அதிகரித்தல், மாதவிடாய் தள்ளிபோவது, மார்பகங்கள் உணர்ச்சி மாற்றம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுமாம்.

Post a Comment

0 Comments