Subscribe Us

header ads

சுய இன்பம் செய்வதில் தவறில்லை & எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்

#சுய_இன்பம்
சுய இன்பம் செய்வதில் தவறில்லை & எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்  - ஆங்கில மருத்துவம். 
சுய இன்பம் செய்வது தவறு, சுத்தமாக செய்யக்கூடாது, செய்தால் எதிர்காலத்தில் மனைவியை திருப்திப்படுத்த முடியாது. உடம்பில் உள்ள சத்து முழுவதும் வீணாகிவுடும்- சில சித்த மருத்துவர்கள்.

நம்ம நண்பர்கள் - என்னடா இவனுக சொல்லுரானுக
இது நல்லதா இல்ல கெட்டதா ( குழப்பத்தில் )

சுய இன்பம் என்பது நாம் தவறான பாதைக்கு செல்லாமல் நம்மை காப்பாற்றும் அருமையான மருந்து.

சரி நண்பர்களே மேட்டருக்கு வருவோம்.
ஆண், பெண் இருவருக்கும் பள்ளி காலகட்டத்தில் பருவ மாற்றம் ஏற்படுகிறது. அதிலிருந்து ஒருவிதமான ஈர்ப்பு நிலையை அவர்கள் அடைகிறார்கள். அவர்கள் பருவ வயது வந்தவுடன் அவர்களுக்கு பாலுறவு ஹார்மோன் உடலில் சுரக்க ஆரம்பமாகும். இந்த ஹார்மோன் சுரப்பதினால் உடலில் உணர்ச்சிகள் உண்டாகும். இதனால் அதிகமான இளம் வயதினர் உணர்ச்சி உந்துதலால் சுய இன்பம் செய்கிறார்கள். இதில் சிலர் மட்டும் குடும்ப சூழ்நிலை, சமூக சூழ்நிலைகளால் உணர்ச்சி தூண்டுதல் ஏற்படுவதில்லை. இதனால் சிலர் சுய இன்பம் செய்வதில்லை என்பதும் உண்மையே. சுய இன்பம் என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் பொருந்தும். இதில் நம் இந்திய சமூக சூழ்நிலைகளின் காரனமாக அதிக அளவிலான இளம் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதில்லை. 

இந்த சுய இன்ப நிலையில் ஆண்கள் விரைவில் உச்சநிலை அடைவார்கள். ஆண்களுக்கு உச்ச இன்பம் என்பது அவர்களுக்கு விந்து வெளியானதும் அவர்களது உணர்ச்சியானது அடங்கிவிடும். ஆனால் மிக சொர்ப்ப அளவில் சில ஆண்களுக்கு விந்து வெளியானதும் உணர்ச்சி அடங்காது. ஆண் உறுப்பு மீண்டும் மற்றொரு முறை விந்து வெளியாகும் வரை உணர்ரச்சியானது நீடிக்கும். அதுபோல் ஆண்கள் ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு முறை கூட உடலுறவு அல்லது சுய இன்பம் செய்து விந்தணுவை வெளியிட முடியும்.
ஆனால் பெண் ஆரம்ப நிலையில் சாதாரணமாக உணர்ச்சி நிலைக்கு வருவதில்லை. பெண் உணர்ச்சி நிலைக்கு வந்தபின் அவள் உணர்ச்சி உச்சகட்ட நிலை அடைய காலதாமதம் ஆகும். பெண்ணால் நீண்டநேர உச்சகட்ட நிலை அடைய முடியும். ஆணைவிட மிக அதிக வலுவான உச்சகட்ட நிலையை பெண்ணால் அடைய முடியும்.

சரி நண்பர்களே அடுத்தகட்டத்திற்கு செல்வோம்.
சுய இன்பம் சரியா தவறா ?
சுய இன்பமானது இயற்கையான அளவில் உணர்ச்சி தூண்டுதலினால் இருக்கும்போது செய்வதில் தவறில்லை. நாம் செயற்கையான உணர்ச்சி தூண்டுதலை உறுவாக்கி அதனால் சுய இன்பம் பெறுவதுதான் தவறானது. அதாவது
நாம் பெண்ணின் அல்லது ஆணின் நிர்வாண படங்களை பார்ப்பதும், உடலுறவு வீடியோவை பார்ப்பதும், உணர்ரச்சியை தூண்டும் காம கதைகளை படிப்பதும் நமது பாலியல் ஹார்மோன் அளவை இயற்கைக்கு அதிகமாக தூண்டும். இதனால் நம் மனதும் காமத்திற்கு அடிமையாக சுற்றித் திரியும். இதனால் நம் மனம் கெடுவது மட்டும் இல்லாமல் உடலும் கெடும். உடல் எப்படி கெடும் என்றால்
நீங்கள் பார்க்கும் காம கிளர்ச்சி படத்தினால் மனம் குரங்குபோல் அழைந்து நீங்கள் சுய இன்பம் செய்தபின் அடங்கும். சில நேரம் பின் மீண்டும் நீங்கள் படம் வீடியோ பார்க்க இதே நிலை தான். அதிக அளவில் நம் உடலில் இருந்து விந்தணு வெளியேறும்.

நம் உடலில் வாரத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ விந்து வெளியேறினால் உடலானது புதிய விந்தணுவை உறுவாக்க சிரமம் ஏற்படுத்தாது. உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
சிலர் தினமும், சிலநேரம் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை சுய இன்பம் மூலம் விந்தணுவை வெளியேற்றினால் உடம்பானது மீண்டும் விந்தணுவை உற்பத்தி செய்ய சிரமம் ஏற்படும் திணரும். இவை தொடர்ந்தால் உடலில் உள்ள சத்துக்கள் குறைந்து நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நரம்பு தளர்ச்சி உருவாகும்.

சிலர் இப்படி கேள்வி கேட்பதுன்டு - நான் இது தெரியாமல் தினமும் சுய இன்பம் மூலம் விந்து வெளியாக்கிவிட்டேன். என்னால் மனைவியை திருப்திபடுத்த முடியுமா என்று ?
நீங்கள் பயப்பட வேண்டியது இல்லை. நீங்கள் முதலில் பயத்தை விடுங்கள். உங்கள் செயல்களை மாற்றினால் அனைத்தும் மாறிவிடும். நீங்கள் மாற்றவேண்டியது
1 நீங்கள் நிர்வாண தவறான படங்கள், வீடியோ, காம கதைகள் பார்ப்பது படிப்பதை நிருத்திவிடுங்கள். உங்கள் செல்போனில் இருந்தால் அழித்துவிடுங்கள்.
2 ஆரோக்கியமான சத்தான உணவை சாப்பிடுங்கள், ஆரோக்கியமற்ற சத்தில்லான உணவை தவிருங்கள்.
3 உங்கள் கவனத்தை ஆரோக்கியமான, தேவையான ஒன்றை கற்றுக்கொள்வதில் மாற்றுங்கள்.
4 முடிந்த அளவு சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
உங்களது மாற்றம் வலுவாக உயர்வதை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் உங்களது துணையை சிறப்பாக திருப்திப்படுத்த முடியும்.

சிலர் இப்படி கேட்பதுண்டு- எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது அல்லது எனக்கு வயது ஆகிவிட்டது. இன்னமும் நான் சுய இன்பம் செய்கிறேன். இது தவறா என்று ?
கல்யாணம் ஆனது பின் சுயஇன்பம் தேவையில்லாத ஒன்று. உங்கள் உணர்வுகளை மனைவிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். சில நேரங்களில் மனைவியை விட உங்களுக்கு அதிக உணர்ச்சிகள் இருக்கும் போது சுயஇன்பம் செய்வது தவறில்லை. உங்களது உணர்ச்சிகள் கட்டுப்படும். மற்ற தவறுகள் செய்ய தூண்டாது. கல்யாணம் ஆனவர்கள் தேவையில்லாத மற்றவர்களின் நிர்வான படம், பாலுறவு வீடியோ காட்சிகள் பார்ப்பதினால் மன ரீதியான மற்ற பாதிப்புகள் தவறுகள் ஏற்படும். முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது

வயதானவர்கள் என எடுத்துக் கொண்டால் சுயஇன்பம் அல்லது உடலுறவானது வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது 10 நாட்களுக்கு முறையோ வைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

பொதுவாக இயற்கையான அளவில் எப்போதாவது மட்டும் உங்களுக்கு உணர்ச்சிகள் எழும். அப்போது நீங்கள் சுய இன்பம் செய்வது தவறில்லை. உங்கள் எண்ணம் கற்பனை மூலமாக உங்களுக்கு பிசத்தவர்களுடன் சுய இன்பம் கொள்ளலாம். இதனால் உங்களது கற்பனை ஆற்றல் அதிகரிக்கும். கற்பனை மூலமாக சுய இன்பம் கொள்வது யாருக்கும் தீங்கு தராது. இந்த சுய இன்பத்தால் தவறுகள் யாருக்கும் நடைபெறாது. உணர்ச்சிகள் கட்டுப்படும். ஆனால் சுய இன்பத்தில் உடனே உச்ச இன்பத்திற்கு செல்ல கூடாது. மெதுவாக அணு அணுவாக சிந்தித்து குறைந்தது அறைமணி நேரமாவது மன அளவில் ரசித்து செய்ய வேண்டும்.

இயற்கையில் செல்வது நன்மை கொடுக்கும்
செயற்கையாக செல்வது துன்பம் கொடுக்கும்
வாழ்க வளமுடன்

Post a Comment

0 Comments