Subscribe Us

header ads

காதல், காமம், மது, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் :

#மிக_சுவாரசியமான_பதிவு 
காதல், காமம், மது, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் :

ஒரு மனிதன் எதற்கு யாருக்கு அடிமையைக இருக்கின்றானோ அதைத் தேடியே ஓடிக்கொண்டே இருப்பான் - இதுவே இயற்கை
அவன் மதுவிற்கோ மாதுவிற்கோ அடிமையானால் அவன் அவனை அறியாமலே அதன் பின்னால் ஓடிக்கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்.
ஆனால்
நீங்கள் எதற்கும் அடிமையாகமல், சூழ்நிலை உங்களை எதாவது ஒன்றிற்கு அடிமையாக்கினாலும் நீங்கள் சுதாரித்துக்கொண்டு உங்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் நீங்கள் எதற்கும் அடிமையாக மாட்டீர்கள்.

உங்களை நீங்கள் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற்றம் அடையவும், வெற்றி பெறவும் முடியாது.
என்னென்றால் உங்கள் சிந்தனை செயல் முழுவதும் நீங்கள் அடிமைப்பட ஒன்றை மட்டும் தேடியே ஓடிக்கொண்டு இருக்கும்.

சிறு சோதனை செய்து பாருங்கள்
நீங்கள் ஏதோ தேவையில்லாத ஒன்றிற்கு அடிமையாக இருக்கிறீர்கள். உதாரணமாக காமம் என்று வைத்துக்கொள்வோம்.
உங்கள் மனம் நிர்வாண படங்கள், வீடியோக்கள் பார்ப்பதில் அலைபாயும், இல்லை சமூக வலைதளங்களில் பெண்களிடம் பேச பழக அளைந்து திரியும். எப்போதும் அதே ஞாபகமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் நீங்கள் உங்கள் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றி உங்களால் சிந்திக்க முடியுமா ? நிச்சயமாக முடியாது.

இது போன்றவைஎதனால் ஏற்படுகிறது?
ஒரு மனிதனாக இருந்தால் ஆசை என்பது இருக்கும். இது சமூக வலைதளங்களால் பேராசையாக உருவாக்கப்படுகிறது. அறைகுறை ஆடையுடனும், நிர்வாண படங்கள், உடலுறவு வீடியோக்கள், காம கதைகள் என உங்கள் மனதை பேராசையுள்ள உலகத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இந்த போதை நிகழ்வு உங்களுக்கு கொடுக்கப்பட்டு போதை ஊட்டப்படுகிறது.  உங்களது கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டு நீங்கள் காம போதைக்கு அடிமையாகி உங்கள் முன்னேற்றத்திலும், உண்மையான மகிழ்ச்சியான வாழ்கைக்கும் செல்லாத அளவிற்கு தடுக்கப்படுகிறது.
இதுபோல் தான் காதல், காமம், மது, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் அனைத்தும்.

நீங்கள் ஒரு நிமிடம் நன்றாக உணர்ந்து பாருங்கள். அப்போது நீங்கள் உணர்வீர்கள்.
ஒரு மாதம் உங்கள் அடிமை வாழ்க்கையிலிருந்து மீண்டு பாருங்கள். அப்போது உங்களின் இனிமையான மாற்றம் உணர்வீர்கள்.
உதாரணமாக நீங்கள் காமத்திற்கு அடிமை என்றால் நீங்கள் செய்யவேண்டியது 
உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் உள்ள அத்தனை தவறான போட்டோ வீடியோக்களையும் அழித்துவிடுங்கள். தவறான காம உணர்வுகளை உண்டாக்கும் முகனூல் குருப், பக்கம், வாட்சப், யூடியுப் போன்றவற்றிலிருந்து வெளியே வாருங்கள். முகனூலுல், வாட்சப் மற்றும் யூடூப்பில் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான வியாபாரம், விவசாயம், ஆரோக்கியம், கல்வி என உங்களுக்கு பிடித்த மற்றவைகளில் இணையுங்கள்.
உங்கள் மெமரி பதிவுகள், CD மற்றும் எந்த காம உணர்வுகளை தூண்டும் அனைத்தையும் அழித்துவிடுங்கள்.
காம உணர்வுகளை பேசும் நண்பர்களை தவிருங்கள்.
பாலுறவு கல்வி வேறு காம உணர்வுகளை தூண்டும் பதிவுகள் வேறு. இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு.
தவறான இவை அனைத்தையும அழித்துவிட்டாலே போதும் நீங்கள் 75% மாற்றம் உணர்வீர்கள். மேலும் நீங்கள் ஆக்கப்பூர்வ செயல்களில் செல்லும்போது 100% உங்களது வாழ்க்கை மேன்மை அடைவதை உணர்வீர்கள். 1 மாதம் போட்டியாக செய்யுங்கள். அதற்கு பிறது உங்களது மாற்றம் உங்களுக்கு மிகப்பெரிய மாறுதலையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும்.

இதுபோலவே காதல், காமம், மது, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் இவை அனைத்திற்கும் பொருந்தும்.
இதை பின்பற்றினால் ஒரு மாதம் பின் நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் வீரமாக செல்வீர்கள்.அடிமையாக கோழையாக இருக்கமாட்டீர்கள்.
வாழ்க வளமுடன்

Post a Comment

0 Comments