மார்பகங்களை கவர்ச்சியானதாக மாற்ற!
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது மார்பகங்கள் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை. மார்பகங்கள் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்க வேண்டுமெனில், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்றி வரை வேண்டும். இதனால் மார்பகங்களை அழகான வடிவத்திலும், அளவில் பராமரிக்க முடியும்.
எப்போதும் படுக்கும் போது, குப்புற தூங்குவதையோ அல்லது பக்கவாட்டில் தூங்குவதையோ தவிர்த்து, மல்லாக்க தூங்க வேண்டும். இதனால் மார்பகங்களில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
தினமும் மார்பகங்களை மசாஜ் செய்ய வேண்டும். அழகான மார்பகங்கள் வேண்டுமெனில், தினமும் குளிக்கும் போது, சிறிது நேரம் மார்பகங்களை மசாஜ் செய்யுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் தடவுவது போல, தினமும் மார்பகங்களுக்கும் மாய்ஸ்சுரைசர் தடவி வர வேண்டும். அதிலும் குளித்து முடித்த பின், ஈரப்பசை முற்றிலும் நீங்குவதற்குள் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனால் மார்பகங்கள் மென்மையாக இருக்கும்.
பெரும்பாலான பெண்கள் அதிக பணம் செலவழித்து பிரா வாங்கிவிட்டோம் என்று, பொருந்தாமல் இருக்கும் பிராவையும் அணிந்து வருகிறார்கள். இப்படி பொருந்தாத தவறான பிராவை அணிந்தால், அது மார்பகங்களை இன்னும் மோசமானதாகத் தான் மாற்றும். எனவே பிரா பொருந்தாவிட்டால், அதனை அணிவதைத் தவிர்த்திடுங்கள்.
எப்போது உட்காரும் போதும் சரி, நிற்கும் போதும் சரி, குனிந்தவாறு இருக்காமல், நேராக இருக்கவும். இப்படி இருப்பதாலும் மார்பகங்கள் அழகாக இருக்கும்
பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, மார்பகங்களும் நல்ல அழகான வடிவத்தையும் பெறும். வேண்டுமெனில் முயற்சித்து தான் பாருங்களேன்.

0 Comments
YOUR COMMENT THANKYOU