கேர் குழந்தைபேறு உரிய நேரத்தில் பெற முடியாமல் பலரும் பிரச்சனைகளை சந்தித்துவருகிறார்கள். ஒரு சிலர் தவிர அனைவருக்குமே சிகிச்சை முறையில் குழந்தைபேறு சாத்தியமாகிறது. எனினும் இயல்பான கருத்தரிப்பு நிகழவிடாமல் தடுக்கும் பிரச்சனைகள் குறித்து தெரிந்துகொள்வோம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். பரிசோதனையில் உரிய காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளித்தாலே குழந்தைபேறு சாத்தியமாகிவிடும். இதன் மூலம் 90 % அவர்கள் கருவுறும் வாய்ப்பை பெற்றுவிடலாம். அப்படி கருவுறுவாதலை தடுக்கும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
அதிக வயதுக்கு பிறகு குழந்தைப்பேறு சிக்கல் தான்
பெண் பூப்படைந்த பிறகு கருமுட்டை வளர்ச்சி 15 வருடங்கள் வரை சிறப்பாக ஆரோக்கியமாக இருக்கும். முட்டை ஆரோக்கியமாக இருக்கும் போதே விந்தணுக்கள் இணைந்தால் குழந்தைப்பேறு தடையில்லாமல் கிடைப்பதோடு ஆரோக்கியமான குழந்தையும் சாத்தியம்.
Cervical Cancer : எச்சரிக்கை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மாதவிடாய் சுகாதாரமின்மையாலும் வரலாம்!
ஆனால் பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் திருமணத்தை தள்ளி போடுவதும், திருமணத்துக்குப் பிறகும் 35 வயதுக்கு மேல் குழந்தை பேறை தள்ளிபோடுவதும் கருமுட்டையின் ஆரோக்கியத்தை குறைக்க செய்யும். கருமுட்டை ஆரோக்கியமாக இருக்கும் போதே குழந்தை பேறு தள்ளி போடாமல் குழந்தை பெற்றுகொள்வதன் மூலம் கருவுறாமை பிரச்சனைக்கு உள்ளாகமால் இருக்கலாம்.
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையும் குழந்தைபேறு சிக்கல் தான்
மாதவிடாய் கால சுழற்சி என்பது சீராக இருக்க வேண்டும். இன்று இளம்பெண்கள் பலரும் பிசிஓடி பிரச்சனைக்கு உள்ளாவது அதிகரித்துள்ளது. ஆரம்ப காலத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் இந்த குறைபாடு குழந்தைபேறு உருவாவதை பாதிக்காமல் தடுத்துவிடலாம்.
மாதவிடாய் காலத்தில் உதிரபோக்கு அதிகம் என்பவர்களை காட்டிலும் உதிரபோக்கு உண்டாகாமல் இருப்பவர்களும், அதிக இடைவெளியில் சுழற்சிக்குள்ளாபவர்களும் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துகொள்வது அவசியம்.
முறையான சிகிச்சை இல்லாமல் திருமணத்துக்கு பிறகு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும் என்று அலட்சியப்படுத்த வேண்டாம். இவை கர்ப்பப்பை எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பாகவும் இருக்கலாம் என்பதால் மாதவிடாய் குறித்து எப்போதுமே விழிப்புணர்வு தேவை. திருமணத்துக்கு முன்பும் திருமணத்துக்கு பின்பும் கூட.#OneDayOneQuote #babyfood #arokyam. thagaval #Pregnancy tips #women's world #StaySafeStayHome

0 Comments
YOUR COMMENT THANKYOU