Subscribe Us

header ads

உடலுறவின் போது...

உடலுறவின் போது...
------------------------------------

மதங்கள் பாலியலை, அதன் புனிதத்தை அழித்துவிட்டன. 

அது ஒரு பாபம் என்ற கருத்தை மனிதன் மனதில் விதைத்து , அவனை குற்ற உணர்வு கொள்ளச் செய்துள்ளனர்.

எனவே, மனிதன் பாலியலில் ஈடுபடும்போதெல்லாம் அவசர அவசரமாக செய்து கூடியமட்டும் விரைவில் முடித்துவிடுகின்றான்.

அது குற்றம் என்பதால் அந்த
குற்றத்தை,பாபத்தை, விரைந்து முடித்துவிடுகின்றனர்.

பாலியல் குற்றமல்ல, பாபமல்ல.

முதலில் இந்த குற்றவுணர்வைக்
கைவிட வேண்டும்.

உண்மையில் பாலியல் இறைவன் அளித்த பரிசு.

எனவே, இந்த பரிசுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

 அப்படி நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு காதலர்களும் உறவுகொள்வதற்க்காக மட்டுமே ஒரு தனி அறையை பயன்படுத்த வேண்டும்.

 அங்கு சண்டையிட கூடாது. 

வேறு விவாதங்கள், தலையணை வீச்சுகள் கூடாது.

அறையில் கண்களைக் கூசச்செய்யும் மின்விளக்குகள் கூடாது.

மெழுகுவர்த்தியின் ஒளி போதும்.

நறுமணம்மிக்க ஊதுபத்தி மணம் வீச வேண்டும்.

பின்னணியில் மென்மையான இசை ஒலிக்க வேண்டும்.

அறையில் நுழையும் முன் குளித்துவிட்டு ஆலயத்தில் பிரவேசிப்பதுபோல் சென்று பதற்றம் இன்றி துவங்க வேண்டும்.

ஆணின் பாலுணர்வு மையம் அவன் ஆணுறுப்பில் மட்டுமே உள்ளது. எனவே அவன் எளிதில் உறவுக்கு தயார் ஆகிவிடுவான்.

ஆனால்,

பெண்ணின் பாலுணர்வு மையம் அவள் உடல் முழுவதும் பரவியுள்ளது. எனவே அவள் உறவுக்கு தயார் படுத்த "போர்பிளே" ( முன் விளையாட்டு ) 
செய்யவேண்டும்.

மிக முக்கியமானது, உறவில் உடலின் செயலை சாட்சியாக இருந்து கவனிக்க வேண்டும்.

உண்மையில் உடல்உறவின்போது இரு உடல்கள் ஈடுபட்டாலும்,

இருவரும் சாட்சியாக இருந்து கவனிக்கும் போது அங்கு நான்கு பேர் ஆகின்றனர்.

உறவுகொள்ளும் இரண்டு நபர்கள் .

அதை கவனிக்க இரண்டு சாட்சிகள்.

அவளது முழு உடலும் உணர்ச்சி கொந்தளித்தது, உடலின் ஒவ்வொரு செல்லும் காற்றில் இலைகள் நடுங்குவதைப் போல தூண்டப்பட வேண்டும்.

இதுதான் சரியான தருணம்.

இப்போது, பாலியல் உறவை தொடங்கலாம். 

பெண் எப்போதும் உறவின்போது மேல் இருக்க வேண்டும். ஆண் கீழே இருக்க வேண்டும்.

இதுதான் சரியான நிலை.

ஏனெனில், ஆண் மேலே இருந்து செயல்பட்டால் விரைவில் விந்து வெளியேறி முடிந்துவிடும். 

பெண் உச்சநிலை பரவசத்தை அடையமுடியாமல் போய்விடும்.

எனவே, பெண் மேலே இருந்து செயல்படும் போது இருவரும் மிகச்சரியாக ஒரே நேரத்தில்
உச்சநிலை அடையும் சாத்தியம் உண்டு.

இந்நிலையிலும் சாட்சியாகவே இருக்க வேண்டும். 

ஆரம்பத்தில் இருந்தே சாட்சியாக இருப்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் சொல்கின்றேன்.

உச்சநிலை பரவசம் எப்படி ஆரம்பிக்கிறது பிறகு அது மெல்ல மெல்ல உயர்ந்து உச்சம் அடைவது,

பிறகு அது மெல்ல கீழே இறங்கி சாதாரண நிலையில் அடங்குகிறது என்பதை சாட்சியாக இருந்து கவனிக்க வேண்டும்.

காதலர்கள் இருவரும் ஒரே நேரத்தில் உச்சநிலை அடையும் போது அங்கு உடல்கள் இரண்டு ஆனால் உயிர் ஒன்றாகிவிட்டது.

உச்சம் முடிந்ததும் உடனே பிரிந்துவிடக் கூடாது.

தொடர்ந்து சாட்சியாக கவனிக்க
இப்போது உச்சநிலை பரவசம்போல அல்லாமல் முற்றிலும் அதிஅற்ப்புதமான புதிய பரவசம் "இரண்டாவது" முறையாக மீண்டும் நிகழும்.பல கோடி மனிதர்கள் இதை அனுபவித்தகதே இல்லை....!

பிறகு, தொடர்ந்து ஆரம்பத்தில் "போர்பிளே"முன்ஏற்ப்பாடுகள் செய்தது போல் பிரியும் முன்பும் ஒருவருக்கொருவர் நன்றி செலுத்தும் வண்ணம் உடலை பிடித்துவிட்டு ஒரு ஆனந்த நடனம் போல மசாஜ் செய்ய வேண்டும்.

தொடர்ந்து இதுபோல் பல நாட்கள் உறவுகொள்ள வேண்டும்.

இந்நிலையிலும் சாட்சியாக இருந்து கவனிக்க வேண்டும். நான் ஏன் சாட்சியாக இருந்து கவனிப்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்கிறேன் என்றால் .

ஒருநாள்.........!

சாட்சியாக மட்டுமே இருந்தால்

 உனது ஆண் அல்லது பெண் துணை இல்லாத போதும்...ஒருநாள்

அதே குளியல்.

அதே அறை.

அதே மனநிலை.

அதே மெழுகுவர்த்தி ஒளி.

அதே ஊதுபத்தி நறுமணம்.

அதே மலர்கள்.

அதே இசை.

அதே சூழலில் உனது பெண் இருப்பதுபோல் அதே நினைவுகளை கற்பனையில்.

அதே அறையில்

 கண்களை மூடி.

உடல் செயல் இன்றி.

அதே சாட்சியாக இருந்து நினைவுகூர்ந்தால்........

நீ வியந்து போவாய்....!

அதே பேரின்பம் நிகழும்.....!

உன் பெண் அல்லது ஆண் துணை இல்லாமலேயே.

அது நிகழும்......!

நீ வியந்து போவாய்.....!

இப்போது நீ காதலை தியானமாகவும்,

தியானத்தை காதலாகவும்,

மாற்றமுடியும்.

இப்போது உனது கோபம், பொறாமை, நீங்கி விழிப்புணர்வுடன் இருப்பதையும் எப்போதும் மகிழ்ச்சியாக உணர்வாய்.

இது நிகழ்ந்தால்,நீ சரியான பாதையில் செல்கின்றாய்

Post a Comment

0 Comments