Subscribe Us

header ads

பெண்களே! உங்க மார்பகம் குட்டியா இருக்கா?

பெண்களே! உங்க மார்பகம் குட்டியா இருக்கா?
பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் மார்பகம் முதன்மையான இடத்தை வகிக்கிறது. ஆனால் அந்த மார்பகம் மிகவும் சிறியதாக இருந்தால், மற்றவர்கள் அவர்களை கிண்டல் செய்வார்கள். ஆகவே குட்டியாக மார்பகங்கள் கொண்ட பெண்கள், தங்கள் மார்பகங்களின் அளவை அதிகரித்து வெளிக்காட்ட நிறைய வழிகளை முயற்சிப்பார்கள். அதில் சில பெண்கள் பேடட் பிரா அணிந்து தங்களின் மார்பகங்களை பெரியதாக காட்டிக் கொள்வார்கள். என்ன தான் பேடட் பிரா பயன்படுத்தி மார்பகங்களை பெரியதாக காட்டிக் கொண்டாலும், இயற்கையாகவே தங்களின் மார்பகம் பெரியதாக இல்லையே என்ற வருத்தம் இருக்கும். ஆனால் மார்பகங்களின் அளவை அதிகரிக்க, உடலில் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, புரோட்டீன், கார்போஹைட்ரேட், வைட்டமின்களும் அவசியம். அதற்கு ஒருசில உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இங்கு மார்பகங்களில் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து, அவற்றை பெண்கள் உட்கொண்டு வந்தால், குட்டியாக இருக்கும் மார்பகங்களை பெரிதாக்கலாம்.

சோயா:

சோயாவில், மார்பகங்களின் அளவை அதிகரிக்க உதவும் ஜெனிஸ்டின் மற்றும் மற்ற ஐசோப்ளேவன்கள் உள்ளன. எனவே சோயா பொருட்களான சோயா பீன்ஸ், சோயா பால் மற்றும் மீல்மேக்கர் போன்றவற்றை அதிகம் உட்கொண்டு வந்தால், மார்பகங்களின் அளவை அதிகரிக்கலாம்.

சோம்பு/சீரகம்:

சோம்பு/சீரகத்தில் பைட்டோ-ஈஸ்ட்ரோஜென் என்னும் மார்பகங்களின் அளவை இயற்கையாகவே அதிகரிக்கும் பொருள் உள்ளது. ஆகவே இதனை குட்டியான மார்பகம் உள்ள பெண்கள் உணவில் சேர்த்து வந்தால், விரைவில் மார்பகத்தின் அளவை அதிகரிக்கலாம்.

பால் பொருட்கள் :

பால் பொருட்களான பால் மற்றும் தயிரை தினமும் அதிகம் உட்கொண்டு வந்தால், அது உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரித்து, மார்பகங்களின் அளவை அதிகரிக்கும்.

மசாலாப் பொருட்கள்:

மசாலாப் பொருட்களான கிராம்பு, சேஜ் மற்றும் கற்பூரவள்ளி போன்றவற்றை சாலட்டுகளில் சேர்த்து வந்தால், மார்பகங்களின் அளவு அதிகமாகும்.

கொண்டைக்கடலை:

வெள்ளை மற்றும் கருப்பு நிற கொண்டைக்கடலைகளில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக உள்ளது. இவை மார்பக திசுக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரியும். ஆகவே மார்பகங்களை பெரிதாக்க விரும்புபவர்கள், இவற்றை அன்றாடம் உட்கொள்வது நல்லது.

மூலிகை தேநீர்:

ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ போன்றவற்றிலும் பைட்டோ-ஈஸ்ட்ரோஜென்கள் உள்ளன. ஆகவே இவற்றை அன்றாடம் சிறிது குடித்து வந்தாலும், மார்பகங்களின் அளவு அதிகரிக்கும்.

Post a Comment

0 Comments