Subscribe Us

header ads

சுயஇன்பம் செய்வதால் உண்டாகும் விளைவுகள் என வரையறுக்கப்பட்ட மாயைகளை உடைக்கும் பதிவு இது".

"சுயஇன்பம் செய்வதால் உண்டாகும் விளைவுகள் என வரையறுக்கப்பட்ட மாயைகளை உடைக்கும் பதிவு இது".

~சுயஇன்பம் செய்வதால் முடி கொட்டுமா ??

ஆண்களுக்கு முடி பக்கவாட்டில் இரு பக்கத்திலும் ஏறி இருக்கும். வழக்குசொல்லில் இதை 'ஏறுநெற்றி' என்று கூறுவர். மருத்துவ ரீதியிலான இதன் பெயர் 'Androgenic Alopecia'. ஆண்களுக்கு இருக்கும் Androgen எனப்படும் ஹார்மோனின் செயல்தான் இந்த ஏறுநெற்றி. இது பெரும்பாலும் அனைத்து ஆண்களுக்கும் இருக்கும். ஆனால், நாள் ஆகஆக சிலருக்கு முடி கொட்டி சொட்டை விழும். சுயஇன்பம் செய்வதால் இப்படி ஆகிறது என பலர் நினைப்பர்.

ஆனால், உண்மை அதுவல்ல. சுயஇன்பம் செய்வதால் Testosterone அதிகரிக்கிறது; அந்த அதிக Testosterone வேதிவினைகள் மூலம் DHT என்னும் முடி உதிர்வை உண்டு செய்யும் Dihydrotestosterone ஹார்மோனை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது; அதனால் சொட்டை விழுகிறது என்று கூறப்படுகிறது.

ஆனால், உண்மை அதுவல்ல. பல ஆய்வுகளின் முடிவில் சுயஇன்பம் செய்வதால் அதிக அளவில் முடி உதிர்வை உண்டுசெய்யும் DHT ஹார்மோன் சுரக்கிறது என்ற கூற்று பொய் என்றே நிறுவப்படுகிறது. மேலும், சுயஇன்பம் செய்வதால் Testosterone அதிகரிக்கிறது என்பதும் நிரூபணம் ஆகவில்லை. சொட்டை விழ ஜீன்கள், வாழ்வியல் முறை, மரபணு கோளாறுகள் முதலிய காரணிகள் உண்டு; ஆனால், சுயஇன்பம் செய்வது ஒரு காரணம் அல்ல.

~சுயஇன்பம் செய்வதால் உடல் மெலியுமா??

சுயஇன்பம் செய்து விந்து வெளியேறுவதால், அதில் உள்ள புரதமும் வெளியேறுகிறது. ஆகவே, உடலுக்கு தேவையான புரதம் வெளியேறி உடல் மெலிகிறது என்ற கருத்து உலவி வருகிறது.

ஒருமுறை சுயஇன்பம் செய்யும் போது சுமார் 2 - 5 ml அளவில் Semen வெளியேறுகிறது. இதில் உள்ள புரதம் எவ்வளவு??

100ml semen- ல் வெறும் 5 கிராம் புரதம் மட்டுமே உள்ளது. நாம் ஒருமுறை சுயஇன்பம் செய்கையில் நமக்கு வெளியேறும் புரதம் 0.25 கிராமிற்கு கீழ் மட்டுமே. நாம் உண்ணும் ஒரே ஒரு கோழி முட்டையில் மட்டுமே சுமார் 6 கிராம் புரதம் உள்ளது. எனவே, சுயஇன்பம் மூலம் அதிக புரதம் வெளியேறுகிறது; அதனால் உடலில் உள்ள புரதம் குறைகிறது; முடி வளர்ச்சிக்கு புரதம் கிடைப்பதில்லை; தேக வளர்ச்சிக்கு புரதம் கிடைக்காமல் உடல் மெலிகிறது என்ற கருத்து பொய் மட்டுமே.

~சுயஇன்பம் செய்வதால் ஆண்குறி சிறிதாகுமா?? அதன் எழுச்சி பாதிக்குமா?? புற்றுநோய் வருமா??

கிடையாது. ஆண்குறி அளவுக்கும், சுயஇன்பத்துக்கும் சம்மந்தம் இல்லை. நீண்ட ஆணுறுப்பு கொண்டிருந்தால், அது சிறந்த கலவியை அளிக்கும் என்பது போன்ற கருத்துகள் மக்களிடையே பரவியிருப்பதால், சுயஇன்பம் செய்வது ஆண்குறியின் அளவை சிரிதாக்கும் என்ற கருத்தை போலி மருத்துவர்கள் பயன்படுத்தி நம்முடைய தாழ்வு மனப்பான்மையை தூண்டி காசு பார்க்கின்றனர். ஆனால், சுயஇன்பம் செய்வதால், ஆண்குறியின் அளவு சிரிதாகி, எழுச்சி குறையும் என முன்வைக்கப்பட்ட கருத்து முழுக்க ஜோடிக்கப்பட்ட ஒன்று மட்டுமே. ஆராய்ச்சி முடிவுகளும் இதை பொய் என்றே நிறுவுகின்றன.

2016- இல் வெளிவந்த ஆராய்ச்சி கட்டுரையில் ஆண்களுக்கு வயதானால் உண்டாகும் Prostate உறுப்பில் தோன்றும் புற்றுநோய் (Prostate Cancer) சுயஇன்பம் செய்வதால் வராமல் குறையும் வாய்ப்புகள் உண்டு என்றே கூறுகின்றன.

சுயஇன்பத்தை மனிதன் மட்டுமல்லாமல் ஏனைய மிருகங்களும் செய்கின்றன. சுயஇன்பம் என்பது நமது பாலுணர்வை வெளியேற்றிட உதவும் ஒரு வடிகால் (sexual outlet) மட்டுமே. அதை செய்வதால் தவறில்லை. உடலுக்கு எந்த தீங்கும் இல்லை.

மேலும் சுயஇன்பம் செய்வதால் மனசோர்வு நீங்கி நல்ல தூக்கமும், நல்ல மனஅமைதியும் உண்டாகிறது.

எனவே, சுயஇன்பம் செய்வது தவறு என்ற மனநிலையை யாரும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்.

ஒருநாளைக்கு எத்தனை தடவை சுயஇன்பம் செய்யலாம் என்பது தனிநபர் பொறுத்தது; உங்களுக்கு ஏதேனும் ஆபாச படங்கள் பார்த்து அதற்கு அடிமையாகி, அதனால் உங்களது குடும்ப மற்றும் தொழில் ரீதியான வாழ்வு பாதிக்கப்பட்டால் நீங்கள் மருத்துவரை நாடலாம்; அவ்வாறு ஏற்படாத வரையில் அவற்றை பார்ப்பதும் தவறில்லை; சுயஇன்பம் செய்வதும் தவறில்லை.

Post a Comment

0 Comments