Subscribe Us

header ads

மனைவியிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.

♥மனைவியிடம் மனம்விட்டுப் பேசுங்கள். உங்களோடு மனைவி நெருங்கி வரும் சூழ்நிலைகளை உருவாக்குங்கள். திருமணமான புதிதில், பெண்களுக்கு பிறந்த வீட்டின் மீது அதிக நாட்டம் வருவது இயல்பு. அப்போது அவர்களை அவ்வப்போதாவது பிறந்த வீட்டிற்குச் சென்று வர அனுமதியுங்கள். இதனால் அவர்களுக்கு மனதில் உள்ள இறுக்கம் தளர்ந்து விடும்.

♥ மனைவியின் உணர்வுகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால், அவருடைய உள்ளத்தில் நீங்கள் நீங்கா இடம் பிடித்து விடுவீர்கள். அதனால் நாளடைவில் தாய்வீட்டிற்கு அடிக்கடி செல்லும் பழக்கம் குறைந்துவிடும். அங்கு போக வேண்டிய கட்டாயம் இருந்தால் கூட, அதிக நேரம் இருக்க மனமில்லாமல் உங்களைப் பார்க்கும் ஆசையில் ஓடோடி வந்து விடுவார்.

♥இருவரது உறவுக்கும் இடையில் உள்ள அன்பிற்கு பாலமாக இருப்பது உடல்ரீதியான தாம்பத்ய உறவுதான். அதனால் அதற்கு நீங்கள் அவசியம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் மனைவியை திருப்திபடுத்த அந்த உறவு மட்டும் போதாது என்பதை கணவன்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

♥அன்பான பேச்சு, இதமாக வருடுதல், பூப்போன்ற முத்தம், இதமான தழுவல், கை, கால் விரல்களுக்கு பதமாக சொடக்கு போடுதல் போன்ற முன்விளையாட்டுக்களை தொடரும்போது தான் மனைவியை தனக்கு நெருக்கமானவராக மாற்றிக்கொள்ள முடியும்

Post a Comment

0 Comments