Subscribe Us

header ads

வயதும்_ஆசையும்

♥#வயதும்_ஆசையும்..

♥ பெண்களின் 30 வயதில்: இந்த பருவத்தில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் தேவைப்படுகிறது. அதிக ஆர்வம் காட்டுவார்கள். தனிமையில் இருந்தால் இந்த வயதில் திருமண ஆசை உச்சத்துக்குச் செல்லும். இணக்கமான நபரை தேட வைக்கும். 

♥திருமணமாகி குழந்தைகள் இருந்தால் குழந்தைகளைக் கவனிப்பது, பராமரிப்பது, குடும்ப நிர்வாகம் போன்ற அன்றாட பிரச்சினைகள் அவர்களது பாலியல் ஆர்வத்திற்கு தடைபோட முயற்சிக்கும்.

♥♥முப்பது வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. குடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. 

♥உடல் எடை அதிகரித்தல், புகை, போதை, மது போன்ற பழக்கங்களின் பின்விளைவுகளாக வியாதிகள் தொற்றுவது போன்ற தொல்லைகளும் தொடங்கிவிடுகிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது. அதற்கு அவர்கள் அதற்குரிய மருத்துவர்களை நாடுவது நல்லது.

♥40 வயதில்: இந்த பருவத்தில் பெண்களின் பெண்மைக் ஹார்மோன்களின் சுரப்பது குறையத் தொடங்குகிறது. அதேநேரத்தில் பாலியல் உணர்வுகள் அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை மங்கச்செய்துவிடுகிறது.

♥இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் ‘செட்’டில் ஆகிவிடுகிறார்கள். இருந்தாலும் குறையும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்காக அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிடுவதால், பாலியல் உணர்வுகளில் ஆர்வம் குறைந்தவர்களாகிவிடுகிறார்கள்.

♥50 வயதில்: இந்த காலகட்டத்தில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் பாலியல் ஆர்வம் கவனிப்பற்ற நிலைக்கு தள்ளப்படுகிறது. 

♥ஆண்களில் பெரும்பாலானவர் களுக்கு இந்த 50 வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கும் பாலியல் ஆர்வம் குறைகிறது.

♥பாலியல் செயல்பாடு தம்பதிகளுக்குள் நேசத்தையும், பாசத்தையும் அதிகரிக்கச்செய்யும். அதனால் அதற்கென்று நேரத்தை ஒதுக்குங்கள். பாலியல் திருப்தியை பெறுவது இருவரின் கடமை என்பதை உணருங்கள்.

Post a Comment

0 Comments