♥பருவம் அடைந்த ஒரு ஆண் 23 வயதிலும், பெண் 21 வயதிலும் திருமணம் செய்துக் கொள்ளவது மிகவும் சிறந்தது.
ஆனால் காதல் என்பது வயது வித்தியாசம் பார்க்காமல் ஏற்படுவது, அப்படி இருக்கும் போது, சில சமயத்தில் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்வது நல்லதா என்று சிலரின் மனதில் பல எண்ணங்கள் ஏற்படும்.
♥தன்னை விட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துக் கொள்வதில் தவறு ஏதுமில்லை.
ஆனால் பிறகு அதனால் தன் வாழ்வில் ஏற்படும் சில சிக்கல்களை ஏற்றுக் கொள்ள முடியும் என்று உறுதியான முடிவு எடுத்தப் பின்பு திருமணம் செய்து கொள்வது நல்லது.
♥மூத்த பெண்களை திறுமணம் செய்வதால் ஏற்படும் பிரச்சனை என்ன?
பெண்களின் தாம்பத்தியம் என்பது அவர்களின் மாதவிடாய் நிற்கும் வரையில் மட்டும் தான் இருக்கும். அதுவே அவர்களுக்கு மாதவிடாய் நின்று விட்டால், தாம்பத்தியத்தில் போதுமான நாட்டம் இருக்காது.
♥ஆனால், ஆண்களுக்கு அப்படி எதுவும் இல்லை என்பதால், அவர்கள் தங்களின் 80 வயது வரையிலும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் நாட்டம் அதிகமாக இருக்கும்.
அப்படி இருக்கையில், ஆண்கள் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் போது, அந்த பெண்ணுக்கு மாதவிடாய் நிற்கும் காலங்களில் அந்த ஆணுக்கு தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் ஏற்படும்.
அப்போது அந்த பெண்ணிற்கு அதில் நாட்டம் இல்லாததால், அந்த ஆண் தவறான வழியில் செல்ல நேரிடுகிறது. இதனால் வாழ்க்கையில் பிரிவு நிலைகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகிறது.
♥மேலும் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால், கணவனை விட மனைவி சீக்கிரம் மரணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், தள்ளாத வயதில் அவன் தனித்துவிடப்படும் நிலைகள் ஏற்படும்.
♥எனவே ஒருவரின் திருமண வாழ்வின் போது, மூத்த பெண்ணை திருமணம் செய்வதற்கு, சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால், இதை பற்றி நன்றாக ஆலோசித்துக் கொண்டு பின் தெளிவான முடிவு எடுப்பதே மிகவும் சிறந்தது

0 Comments
YOUR COMMENT THANKYOU