Subscribe Us

header ads

பெண்களுக்கான நீர்க்கட்டி/குழந்தையின்மை/மலட்டுத்தன்மை/வெள்ளைப்படுதல்/மாதவிடாய் கோளாறு நீங்க இயற்கை மூலிகை கர்ப்பப்பை நலனி செய்முறை விளக்கம் பகுதி - 1*

*பெண்களுக்கான நீர்க்கட்டி/குழந்தையின்மை/மலட்டுத்தன்மை/வெள்ளைப்படுதல்/மாதவிடாய் கோளாறு நீங்க இயற்கை மூலிகை கர்ப்பப்பை நலனி செய்முறை விளக்கம் பகுதி - 1*
*கர்ப்பப்பை நலனி தயாரிக்கும் முறை*

*தேவையான மூல பொருட்கள்:*

1.களர்ச்சி காய் பருப்பு - 250g
2.மிளகு - 125g
3.சாரனவேர் - 25g
4.ஆளிவிதை - 25g
5.கருஞ்சீரகம் - 25g
6.அஸ்வகந்தா - 10g
7.நாகப்பூ - 10g or 5 பூ
8.அதிமதுரம் - 10g
9.ஓமம் - 10g
10.பட்டை- 25g
11.நார்த்தங்காய் விதைகள் - 25g
12.காய்ந்த இஞ்சி - 25g
13.வெந்தயம் - 25g
14.சீரகம் - 25g
15.வாய்விளங்கம் - 25g
16.குருந்தொட்டி வேர் - 10g
17.மாவிலங்கபட்டை - 25g

*செய்முறை:*

மேலே குறிப்பிட்டுள்ள மூல பொருட்களை நாட்டு மருந்து கடைகள் அல்லது மூலிகை பண்ணைகளில் கிடைக்கும் அனைத்தையும் மூல பொருட்களாக சேகரித்து வைத்து கொள்ளுங்கள்

அனைத்து மூலிகைகளும் காய்ந்த பதப்படுத்த பட்ட நிலையில் வைத்து கொள்ளுங்கள்...

மிளகு,வெந்தயம்,ஆளிவிதை, ஓமம்,அதிமதுரம்,சீரகம்,இஞ்சி, ஆகியவை ஒன்றாக அரைத்து தனியாக எடுத்து கொள்ளுங்கள்

மீதி உள்ள மற்ற மூலிகைகளை நன்கு காய வைத்து சுத்தம் செய்து கழிவுகளை நீக்கி வாணலியில் வறுத்து சூடு செய்து பிறகு அரைக்க வேண்டும்

பிறகு அரைத்த இரண்டையும் சேர்த்து நன்றாக சலித்து கொள்ளவும் கசடுகளை நீக்கிய பிறகு மீண்டும் ஒரு முறை நன்றாக அரைக்கவும்

தற்சமயம் கர்ப்பப்பை நலனி சூரணம் தயார், இதனை கண்ணாடி குடுவையில் காற்று புகாத வாறு வைத்து கொள்ளுங்கள்

*எடுத்துக்கொள்ளுங்கள் முறை:*

1 சிறிய ஸ்பூன் 5g அளவு எடுத்து சுடுநீரில் அல்லது மோரில் (அதிக பாதிப்பு இருந்தால்) கலந்து காலை ,இரவு என உணவுக்கு பிறகு தொடர்ந்து 1 முதல் 3 மாதம் எடுக்க வேண்டும்

*கர்ப்பப்பை நலனி பயன்கள்:*

1.சினைபை கட்டி கரையும்
2.சினை முட்டை வளர்ச்சி தூண்டும்
3.மாதவிடாய் சரியாகும்
4.தைராய்டு அகலும்
5.உஷ்ணம் குறைந்து வெள்ளைப்படுதல் சரியாகும்
6.சிறுநீர் முட்டுதல் சரியாகும்.
7.இன உறுப்பு எரிச்சல் குறையும்
8.மலட்டு தன்மை நீக்கி இல்லற வாழ்க்கைக்கு உதவும்
9.நீர் கட்டி அகலும்
10.குழந்தையின்மை பிரச்சனை முற்றிலும் குறைந்து நல்ல செய்தி விரைவில் கிடைக்கும்

*பத்திய முறைகள்:*

1.ஒரு நாளைக்கு குறைந்தது 5லி வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும்

2.அசைவம் எண்ணையில் பொரித்து எடுத்து கொள்ள கூடாது

3.உடல் சூடு தரும் பண்ணை கோழி,நண்டு,இறால் போன்ற எந்த அசைவமும் கூடாது

4.அதிக சுமை தூக்கவோ,குனிந்து வேலை செய்யவோ கூடாது

5.அடிக்கடி பயணம் கூடாது

6.தினசரி 8 மணி நேரம் நன்றாக தூங்கவும்

7.பால்,தயிர்,கருப்பு பேரிச்சை,உலர் கருப்பு திராட்சை,மாதுளை,அத்திப்பழம்,செவ்வாழை ஆகியவை தினமும் கிடைப்பதை எடுத்து கொள்ளுங்கள்

இது ஒரு மிக சிறந்த மூலிகை அதிக அளவு வெற்றி பெற்ற ஒரு வரப்பிரசாதம், பல லட்சத்தை செலவு செய்து பலன் கிடைக்கவில்லை என்றால் கூட ஒரு 3 மாதம் வரை இதை முறைப்படி முயற்சி செய்யுங்கள் நல்ல செய்தி நிச்சயம்

Post a Comment

0 Comments