Subscribe Us

header ads

நெருஞ்சி முள்ளின் வியக்க வைக்கும் மருத்துவ நன்மைகள்*

*நெருஞ்சி முள்ளின் வியக்க வைக்கும் மருத்துவ நன்மைகள்*

நம் பாதங்களை பதம் பார்க்கும். குத்தி ரத்தம் வர வைக்கும் என்றெல்லாம்தான் நமக்கு நெருஞ்சி முள்ளைப் பற்றி தெரிந்திருக்கும். இது சாலையோரம் கொடியாக படர்ந்திருக்கும் தாவரம். மருத்துவ குணங்கள் கொண்டுள்ள மூலிகை.

நெருஞ்சி இலைகளை நீரில் போட்டு சில மணி நேரங்கள் அப்படியே விட்டால் நீர் கெட்டிப்படும் அதிசயம் நடக்கும்.

என்னென நோய்க்கு எப்படி பயன் படுத்தலாம் என பார்க்கலாம்.

●நீர்க்கடுப்பு :

கோடைகாலம் மற்றும் சூட்டினால் வரும் உடல் சூட்டிற்கு நெருஞ்சி முள் கசாயம் அற்புத தீர்வு தருகிறது.
நெருஞ்சி முள்ளை ஒன்றுக்கு இரண்டாய் இடித்து நீரில் போட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த நீரை குடித்து வந்தால் நீர்க் கடுப்பு குறையும்.

●வெள்ளைப் படுதல் :

பெண்களுக்கு வரும் அதிகமான வெள்ளைப்படுதல் மற்றும் சிறு நீர்ப்பாதையில் அரு தொற்றிற்கு இது மருந்தாகும்.

நெருஞ்சி முள்ளை பச்சரியுடன் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி வடித்து அதனை குடித்து வந்தால் வெள்ளைப்படுதலும், கிருமித் தொற்றும் குணமாகும்.

●சிறு நீரக கற்கள் கரைய :

நெருஞ்சி செடியின் வேரை அகற்றி விட்டு, சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். பின்னர் சாதம் வடித்த கஞ்சியில் சுத்தம் செய்யப்பட்ட இலைகளை போட்டால் சில நிமிடங்கள் கஞ்சி கெட்டிப்படும். பின்னர் அந்த இலைகளை எடுத்துவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து அந்த கஞ்சியை குடித்தால் சிறு நீரகக் கற்கள் கரையும்.

தினமும் இவ்வாறு குடிக்கும் போது நீர்கடுப்பு ஏற்படால், சிறு நீரக கற்கள் கரைக்கின்றது என அர்த்தம். நெருஞ்சி முள் கசாயம் குடித்தாலும் சிறு நீரகக் கற்கள் கரைந்துவிடும்.

●ப்ரோஸ்டேட் வீக்கம் :

நெருஞ்சி முள் மற்றும் கொத்தமல்லி விதையை ஒன்றுக்கு இரண்டாய் பொடித்து அதனை நீரில் போட்டு காய்ச்சி ஸ்பூன் அளவு கசாயமாக தினமும் காலை மாலையில் குடித்து வந்தால், ப்ரோஸ்டேட்டினால் வரும் வீக்கம் குறையும்.

●கரு உற்பத்தி :

ஆண் பெண் ஹார்மோன்களை தூண்டுவதற்கு நெருஞ்சி முள் அற்புத மருந்தாகும். 30 நாட்கள் தொடர்ந்து நெருஞ்சி முள் கசாயத்தில் தேன் கலந்து குடித்து வந்தால் ஆண் மலட்டுத் தன்மை குணமாகும்.

●பசி:

நெருஞ்சி கசாயம் கபத்தை கரைக்கும். பசியை நன்றாக தூண்டும். வயிற்றுப் பிரச்சனையை குணப்படுத்தும்..

●வாத நோய்கள்:

நெருஞ்சி கசாயத்தில் சுக்கு பொடி கலந்து தினமும் குடித்து வந்தால் வாத நோய்கள் மற்றும் இடுப்பு வலி குணமாகும்.

Post a Comment

0 Comments