Subscribe Us

header ads

சர்க்கரைநோய்_உள்ளவர்களுக்கு#ஏன்_செக்ஸ்_குறைபாடு#ஏற்படுகிறது

#சர்க்கரைநோய்_உள்ளவர்களுக்கு
#ஏன்_செக்ஸ்_குறைபாடு
#ஏற்படுகிறது❓❓❓
#அதற்கான_வீட்டு_வைத்தியங்கள்
#என்ன…❓

#அதற்க்கு_முன்னாடி_நீங்கள்…❗❓

 #டயாபடிக்_செக்ஸ்_நியூரோபதி
#Diabetic_Sex_Neuropathy 

#பற்றி_தெரிந்து_கொள்ளுங்கள்…❗❓

⭕சர்க்கரை நோயாளிகளின் கால் நரம்புகளில் ஏற்படும் பாதிப்பே…
டயாபடிக் நியூரோபதி
(Diabetic Neuropathy) 

சர்க்கரைநோய் பாதிப்புள்ளவர்கள், தங்கள் கால்களை, கண்களைப்போல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

சர்க்கரை பாதிப்பு அதிகமாகிவிட்டால் உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழக்க வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக, கால் நரம்புகள் பாதிக்கப்படலாம். 

நரம்புகள் பாதிக்கப்பட்ட கால்களில் புண்கள் ஏற்படும். அந்தப் புண்களைக் கவனிக்காமல்விட்டால், கால்களையே எடுக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம்.

கால்கள் மற்றும் கால் விரல்களை இழந்தவர்களைப் பார்த்து `விபத்தா..❓ என்று கேட்ட காலம்போய், 
‘சர்க்கரையா..❓என்று கேட்குமளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஆனாலும், சர்க்கரை நோயாளிகள் பலர் அலட்சியமாகவே இருக்கிறார்கள். காரணம், போதிய விழிப்பு உணர்வின்மை. 

🔴 சர்க்கரை நோயாளிகளின் கால் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள், அறிகுறிகள்.❓

👉 கால் நரம்புகள் எப்போது பாதிக்கப்படும்❓

“சர்க்கரைநோய் பாதித்து, வருடக்கணக்கில் கட்டுக்குள்
வைத்திருக்காமல் போனால், அது நரம்பு மண்டலங்களை பாதிக்கும். முக்கியமாக, கால் நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும். சர்க்கரைநோயால் நரம்புகள் பாதிக்கப்படுவதை ‘டயாபடிக் நியூரோபதி’ (Diabetic Neuropathy) என்கிறோம். இதை ‘நரம்பு வலுவிழப்பு நோய்’ என்றும் கூறலாம். 

சர்க்கரை கட்டுக்குள் இருந்தாலும், மரபணுக்களின் காரணமாகவும் சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். 

சர்க்கரைநோயுடன் கூடுதலாகக் கீழ்க்கண்ட காரணிகளும் இருந்தால் `டயாபடிக் நியூரோபதி’ பாதிப்பு விரைவிலேயே ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
 
◀ உடலில் கொழுப்பு அதிகமாக இருத்தல்

◀ உடல் பருமன்

◀ புகை மற்றும் மதுப்பழக்கம்

⭐ `டயாபடிக் நியூரோபதி’-யை உறுதிப்படுத்துவது எப்படி❓

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். பாதிப்பு உள்ளவர்களின் காலில் முக்கிய நரம்புகளிருக்கும் இடத்தில் ஒரு மெல்லிய காட்டன் துணியைவைத்து, அந்த இடத்தில் உணர்ச்சி இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள். இந்தச் சோதனைக்கு ‘பயோதெசியோமெட்ரி’ 
(Biothesiometry) என்று பெயர். 

⭕ வராமல் தடுக்க முடியுமா❓

◀சர்க்கரையில்…

👉 `டைப் 1’, 

👉`டைப் 2’ 

என இரண்டு வகை பாதிப்புகள் இருக்கின்றன. 

⃣ `டைப் 1’ சர்க்கரை பாதிப்பு கண்டறியப்பட்டு ஐந்து வருடங்கள் ஆனதும் தொடர்ச்சியாக முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

⃣ `டைப் 2’ சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் அது கண்டறியப்பட்ட நாளிலிருந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

அவ்வப்போது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அதன் மூலம் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், ஆரம்பநிலையிலேயே கண்டறிய முடியும். 

👉கவனம்……❓

சர்க்கரை நோயாளிகளுக்குப் புண்கள் ஏற்பட்டால், சாதாரணப் புண்ணாக, கொப்புளமாகத்தான் வெளியே தெரியும். ஆனால் உள்ளுக்குள் சீழ்ப்பிடித்து, கால் முழுவதும் பரவியிருக்கும். இதனால் அறுவை சிகிச்சை செய்து கால்களை அகற்றவேண்டிய நிலை ஏற்படும். எனவே, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
 
⭕ ஒருவருக்கு `டயாபடிக் நியூரோபதி’ ஏற்பட்டிருப்பதை, கால்களில் ஏற்படும் கீழ்க்கண்ட பாதிப்புகளின் மூலம் அறியலாம்.

🇨🇭கால்களில் எரிச்சல் (Burning)

🇨🇭கூச்சம் (Tingling) 

🇨🇭ஊசியால் குத்துவது போன்ற உணர்வு

🇨🇭 கால்கள் துடித்தல், பிசைவது போன்ற உணர்வு (Throbbing)

🇨🇭 கால்கள் மரத்துப் போதல்
 

⭐ கால்களைப் பராமரிப்பது எப்படி❓

* காலில் செருப்பு இல்லாமல் நடக்கக் கூடாது. வீட்டில் நடக்கும் போதும் கண்டிப்பாகச் செருப்பு அணிய வேண்டும்.

* செருப்பு அணிவதற்கு முன்னர் அதில் முள், ஆணி எதுவும் குத்தியிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

* புதிய செருப்புகள் கால்களைக் கடிக்கும் என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்னர் எண்ணெய் தடவுவது நல்லது. 

* காலில் சிறு புண்கள் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை எடுக்க வேண்டும்.

* கால் நகங்களை வெட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.

* கால்களில் உள்ள சருமத்தை பிளேடால் வெட்டுவது போன்றவற்றைச் செய்யக் கூடாது. 

* கால்களை வறட்சியாக வைத்துக்கொள்ளக் கூடாது. மருத்துவரின் ஆலோசனையுடன் மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும்.

* குளிக்கும்போது, கால்களில் புண்கள், காயங்கள், கொப்பளங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதைத் தினமும் கண்காணிக்க வேண்டும். கால்களில் ஏதேனும் மாற்றங்கள், புண்கள் இருப்பது தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகிச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 

* புண்கள் குணமாகத் தகுந்த மருந்துகளையும் சர்க்கரையைக் கட்டுக்குள்வைத்திருக்கும் ஆலோசனைகளையும் மருத்துவர்கள் வழங்குவார்கள். 

அவற்றைச் சரியாகப் பின்பற்றினாலே போதும். இவற்றில் உடலில் சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டியது மிக மிக அவசியம்.

*சர்க்கரை நோய் தாம்பத்திய செக்ஸ்* *பாதிப்புகள்…*

👉டயாபடிக் செக்ஸ் நியூரோபதி
(Diabetic Sex Neuropathy) 

❤சர்க்கரை நோயு‌ம் ஆ‌ண்மை‌‌க் குறைவு‌ம்❗

நீரிழிவு நோய் ஆண்களை தான் அதிகமாக பாதிக்கிறது. அதிலும் ஆண்களை தாக்கும் போது, அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்தையும் பாதிக்கிறது. மேலும் அவர்களின் ரத்த நாளங்கள் பழுதடைவதால், அது விரைவில் சிதைந்து விடுகிறது.

👉இதனால்……

👉ஆண்களுக்கு விரைப்புத் தன்மையற்று, 

👉விந்தணுக்களில் குறைபாடு, 

👉விந்து முந்துதல், 

பிரச்சனைகள் ஏற்படுவதால், உடலுறவு குறித்த உணர்ச்சிகள் குறைந்து விடுகிறது.

நீரிழிவு நோயானது, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களை தான் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாக்கின்றது. மேலும் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாமல் இருந்தால், ஆண்மைக் குறைவு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன அழுத்தம், வேலைச்சுமை, அதிகமாக ஓய்வெடுத்தல் இது போன்ற பல காரணங்களால் ஆண்களை நீரிழிவு நோய் அதிகமாக பாதிக்கிறது.

இதில் எவ்வாறு பாலியல் பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி பொதுவாக எழுவது இயல்பு. நாட்பட்ட சர்க்கரை நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்குத்தான் அதனுடைய தாக்கம் தெரியும்.

இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளாவிட்டால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படும். ஆணுறுப்புக்கு செல்லும் இரத்த நாளங்கள் சிறியவையாக இருப்பதால் அடைபட்டும், சுருங்கியும், சிதைந்தும் பாதிப்புக்குள்ளாகின்றன. இதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு விரைப்புத்தன்மை குறைகிறது அல்லது முற்றிலும் இல்லாமல் போகிறது.

#இன்னொரு_முக்கிய_விஷயம்…

சர்க்கரை நோயாளிகளுக்கு விரைப்புத் தன்மை வராத நிலை ஏற்பட்டால் சர்க்கரை அதிகரித்துவிட்டது என்று பொருள். 

அவருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் மிக அதிகம். இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 60 விழுக்காட்டினருக்கு பின்னாளில் மாரடைப்பு வந்துள்ளது. 
40 விழுக்காட்டினர் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டுள்ளனர்.

எனவே, ஆண்மைக் குறைவு என்ற பிரச்சனை வந்தாலே இதய நோய்க்கான பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும். இதை அறியாமல் ஆண்மைக் குறைவுக்காக மட்டுமே சிகிச்சை செய்து கொண்டு திடீர் மாரடைப்பினால் உயிரைவிடும் நபர்கள் பலர் இருக்கிறார்கள்.

சர்க்கரை வியாதியைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டாலே பெரும்பாலான பாலியல் பிரச்சனைகளை தவிர்த்துவிடலாம் என்ற விவரம் தெரியாமல் பலர் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கிறார்கள். 

❤ #நீரிழிவினால்_ஏற்படும்_செக்ஸ் #குறைபாடு_குணமாக…

👉தேவையான பொருட்கள்

அஸ்வகந்தா சூரணம் --- 200 கிராம்

பூனைகாலி சூரணம் --- 200 கிராம்

கீழாநெல்லி இலை – 100 கிராம்

மஞ்சள் கரிசாலை – 100 கிராம்

மருதம் பட்டை சூரணம் --- 200 கிராம்

ஜாதிக்காய் – 50 கிராம்

ஜாதிபத்திரி – 50 கிராம்

வால் மிளகு – 50 கிராம்

ஏலக்காய் – 50 கிராம்

கிராம்பு – 50 கிராம்

மாசிக்காய் – 50 கிராம்

தாளிசபத்திரி – 50 கிராம்

கசகசா – 50 கிராம்
 
பாதாம் பருப்பு – 50 கிராம்

பிஸ்தா பருப்பு – 50 கிராம்

அக்ரோட் பருப்பு – 50 கிராம்

சாரப் பருப்பு – 50 கிராம்

பாதாம் பிசின் – 10 கிராம்

வேலம் பிசின் – 10 கிராம்

ஆவாரம் பிசின் – 10 கிராம்

முருங்கைப் பிசின் – 10 கிராம்

     மேற்கண்ட மருந்து,பருப்பு மற்றும் பிசின் வகைகளை பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும்.

தினசரி காலை, இரவு உணவுக்குப்பின் பாலுடன் 5 கிராம் அளவு சாப்பிட உடல் உஷ்ணம் தணிந்து, தேகம் வலுத்து தாது பெருகும். அதி உஷ்ணம் எனப்படும் வெட்டை அதிகரித்த நிலையில், உயிர்துளியில் (விந்து) உள்ள அணுக்கள் அசையும் தன்மையை இழக்கவும், மடிந்து போகவும் விந்து நீர்த்து வீணாக்கிவிடவும் வாய்ப்பிருந்தால் மேற்கண்ட சூரணம் ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய மருந்தாகும்.

#நீரிழிவுநோயில்_இளைத்த_உடலை #தேற்ற_நவதானிய_சத்து_மாவு

திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த சூரணமாகும்.
     
திரிபலா சூரணம் ஒருகிலோ அளவில் பாத்திரத்தில் எடுத்து, அதில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி கஷாயம் செய்யவும். தண்ணீர் பாதியாக சுண்டி வரும் சமயத்தில் கசாயத்தை இறக்கி ஆறவிட வேண்டும்.

👉இத்துடன்……

சுத்தம் செய்த கொள்ளு – 100 கிராம்

கோதுமை – 100 கிராம்

பாதாம் பருப்பு – 100 கிராம்

பிஸ்தா பருப்பு – 100 கிராம்

அக்ரோட் பருப்பு – 100 கிராம்

சாரப் பருப்பு – 100 கிராம்

பச்சைப்பயறு – 100 கிராம்

உளுந்து – 100 கிராம்

கொண்டைக் கடலை – 100 கிராம்

எள் – 100 கிராம்

பச்சரிசி – 100 கிராம்

காராமணி – 100 கிராம்

துவரை – 100 கிராம்

இவைகளை ஒன்றுகலந்து ஆறிய திரிபலா கஷாயத்துடன் சேர்த்து, ஓர் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் வெய்யிலில் நன்கு காயவைத்து, அரைத்து, மாவை சலித்துப் பத்திரப்படுத்தவும்.
     
50 கிராம் மாவை தண்ணீர் கரைத்துக் காய்ச்சி கஞ்சியாகவோ அல்லது களியாகவோ செய்து சாப்பிடலாம். இதனால் நீரிவினால் இளைத்த உடல் செழிக்கும்.

💊 #மருந்து_இரண்டு 💊

👉தேவையானவை

நீர் முள்ளி விதை 30 கிராம், 

பாதாம்பருப்பு 10 கிராம், 

கசகசா 10 கிராம் 

பால் 100 மி கிராம்

செய்முறை :

நீர்முள்ளி,பாதாம் பருப்பு.கசகசா
ஆகியவற்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

👉#மேலும்_சில_குறிப்புகள்

♦ விந்தில் உயிரணுக்கள் குறைவாகக் காணப்பட்டால், அரச விதையைத் தூள் செய்து பாலில் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வந்தால், விந்தில் உயிரணுக்கள் உண்டாகும்.

♦ஜாதிக்காயைத் தேவையான அளவில் தூள் செய்து, அதில் வெற்றிலைச் சாறு, தேன் சேர்த்து இரவு உணவுக்குப்பின் சாப்பிட நீடித்த தாம்பத்திய இன்பம் உண்டாகும்.

♦ நெருஞ்சில் முள்ளை பசும்பாலில் வேகவைத்து, உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு, அதில், 2 கிராம் எடுத்து பாலில் கலந்து, காலை, மாலை இருவேளைகளும் பருகி வந்தால், ஆண்மை பெருகும். 

♦ நெருஞ்சில் இலையை வெள்ளாட்டுப் பாலுடன் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்துக் குடித்து வந்தால், ஆண்மை அதிகரிக்கும். 

♦ நீர்முள்ளி வித்து ஐந்து விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து இரவில் ஒரு செவ்வாழை பழத்தில் வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் வெறு வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். 

🔴 விஷ்ணு கிரந்தி, 
ஒரிதழ் தாமரை, கீழாநெல்லி 

ஆகிய மூலிகைகளை ஒரு பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு உருட்டிக் கொள்ள வேண்டும். இதை காலை, மதியம், இரவு நேரங்களில் சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி கட்டுப்படும். இந்த மருத்துவத்தை நீண்ட காலமாக கடைபிடித்து வந்தால் பலன் கிடைக்கும். நரம்புத்தளர்ச்சி மட்டுமல்லாமல் விந்து ஒழுகுதல், மறதி, வெட்டைச்சூடு போன்றவை தணிந்து உடல் பலம் உண்டாகும்.

#ஆண்மைகுறைவு_நீங்கும்_கீரைகள்…

🍀 பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு பிரச்னை சரியாகும்.

🍀 கொடிப்பசலைக் கீரைச் சாறில் பாதாம் பருப்பை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

🍀 கானாம்வாழைக் கீரை (உலர்த்தியது – 100 கிராம்) மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்னையும் தீரும்.

🍀 துத்திக்கீரையுடன், கற்கண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

🍀 பாலக் கீரையுடன் குடை மிளகாய், பூண்டு கசாகசா ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு குணமாகும்.

🍀 பாலக் கீரையுடன் முளை கட்டிய பச்சைப் பயிரைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

🍀 முள்ளிக் கீரை சாறில் கொள்ளை கொண்டைக் கடலையை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், ஆண்மை பெருகும். நரம்புகள் இறுகும்.

🍀 பாற்சொரிக் கீரையைத் தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால், விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

🍀 சுக்குக் கீரைச் சாறில் முந்திரிப்பருப்பை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

🍀 சுக்குக் கீரையுடன் குடை மிளகாயைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் விந்து விரைந்து வெளியேறுதல் பிரச்னை சரியாகும்.

Post a Comment

0 Comments