மாறிவரும் வாழ்க்கை முறையால் இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பது குறைந்து
கொண்டு வருகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதனை தவிர்க்க பாலூட்டும் அன்னையர் உண்ண வேண்டிய இயற்கை உணவு வகைகள்:
வெந்தயம்: வெந்தயத்தை நீரில் ஊறவைத்து, கொதிக்கவைத்து, குடிக்க பால் சுரப்பு அதிகரிக்கும். கருப்பையின் அழுக்குகளையும் நீக்கும்.
சோம்பு: உணவோடு தொடர்ச்சியாக உட்கொண்டால் ஈஸ்டிரோஜன் இயக்குநீர் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.
பப்பாளிக்காய்: பப்பாளிக்காயின் தோலை நீக்கிவிட்டு 4 சிறு துண்டுகளை வேக வைத்து சாப்பிடும் போது ஆக்ஸிடோசின் (oxytocin) இயக்குநீர் அதிகரித்து பால் சுரப்பை ஊக்குவிக்கும்.
பூண்டு: அதிக அளவில் பால் சுரக்க உதவுகிறது.
வெங்காயம், கரும்பு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
பால் சுறா மற்றும் சின்ன மீன் வகைகளிலுள்ள DHS & Omega-3 போன்ற மூலக்கூறுகளால் சத்தான தாய்பால் கிடைக்கும், தாய்பாலையும் அதிகரிக்கும்.
கோதுமை, பார்லி, கேழ்வரகு போன்றவற்றை பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டும்.
சீரகம் பால் சுரப்பையும் நோய் எதிர்ப்பையும் அதிகரிக்கும்.

0 Comments
YOUR COMMENT THANKYOU