Subscribe Us

header ads

ஒரு மார்பகத்தை விட மற்றொன்று பெரிதாக இருப்பது சாதாரணமா...????

ஒரு மார்பகத்தை விட மற்றொன்று பெரிதாக இருப்பது சாதாரணமா...????

👇👇👇👇👇👇👇👇👇👇

பெண்களுக்கு இரண்டு மார்பகங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை அதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளம் பருவத்தில் சமச்சீரற்ற தன்மை காணப்படும். இது பொதுவானது தான். சமச்சீரற்ற மார்பகங்களுக்கும் புற்றுநோய் கட்டிகளுக்கும் சம்பந்தம் கிடையாது என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சுய மார்பக பரிசோதனை செய்வதை நினைத்து சில பெண்கள் பயப்படுகின்றனர். ஆனால் பெண்கள் அதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்திகிறேன். ஏனெனில் உங்க மார்பகங்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்வது முக்கியம். அப்பொழுது தான் மார்பக பகுதியில் ஏதேனும் புதியதாக மாற்றங்களை கண்டால் உங்கள் மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்ல முடியும். ஆரம்பத்திலேயே மார்பக புற்றுநோயை கண்டறிவது உங்களுக்கு நல்லது.🚶🚶🚶

Post a Comment

0 Comments