ஆனால், குறியின் நீளத்திற்கும், தடிமனுக்கும், வளைவுடையதாய் இருப்பதற்கும், செச்ஸுக்கும் சம்பந்தம் இல்லை. இப்படிப்பட்ட அமைப்பினால் எந்த விதத்திலும் செக்ஸ் உணர்வு குறைந்து விடுவதில்லை. சின்ன ஆண்குரியை வைத்துக்கொண்டே எப்படிப்பட்ட பெண்ணுக்கும் தாம்பத்ய சுகத்தைத் தரலாம். ஆனால், இந்த விஷயத்தைப் பொருத்தவரையில் ஒட்டுமொத்த ஆண்களின் கணிப்பு தவறாகத்தான் இருக்கிறது.
தன் குறி இவ்வளவு சிறியதாக இருக்கிறதே,தன் நண்பனின் குறியும், பிற ஆண்களின் குறியும் பெரியதாக நீண்ட தடிமனாக இருக்கிறதே, நம்மால் பெண்ணைத் திருப்திபடுத்த இயலுமா என்ற கவலை பலருக்கு உண்டாகிறது. இதன் காரணமாக தன் குறையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, தனக்கு திருமணமானால் தன் மனைவியை எங்கே திருப்திபடுத்த இயலாமல் போய் விடுமோ என்ற தவறான எண்ணத்தில் தனக்குத் திருமணமே வேண்டாம் என முடிவெடுத்த இளைஞர்கள் ஏராளம்.
மற்ற எல்லா ஆண்களைவிட தன் ஆண்குறி இவ்வளவு சிறியதாக அமைந்துவிட்டதே என தன் மனத்திற்குள்ளேயே புழுங்கிச் சாகும் ஆண்கள் மனநோயாளிகளானவர் பலர்.
திருமணமான பல ஆண்களுக்கும் ஆண்குறி விஷயம் பெரிய பிரச்னையாக இருப்பதை அறிய முடிகிறது. தன் குறி சிறியதாக இருப்பதை தன் மனைவி பார்த்துவிடக்கூடாது என நினைக்கும் ஆண்கள் உண்டு. இதன் காரணமாக தன் மனைவி குறியை தொட்டு விடாதபடி மிக கவனமாக இருப்பவர் உண்டு. தன் மனைவிக்கு தன் குறியின் அளவு தெரியக்கூடாது என இரவில் அதிலும் இருட்டில் மட்டும் உறவுகொள்ளும் ஆண்கள் உண்டு.
இதெல்லாம் தேவை இல்லாமல் ஆண்கள் பயப்படக்கூடிய விஷயம். இரண்டு இஞ்ச் நீளமுடைய ஆண்குறியை வைத்துக் கொண்டு நூற்றுக்கணக்கான பெண்களை அனுபவித்தவர்கள் பலர் இருக்கின்றனர். நீண்ட தடிமனான குறியை உடைய ஆண்களால் கொடுக்க முடியாத சுகத்தை இரண்டு இஞ்ச் நீளமே உள்ள ஆண்குறியால் கொடுக்க இயலும்.
தன் குறி இவ்வளவு சின்னதாக இருக்கிறதே இதைக் கொண்டு மனைவியைத் திருப்திபடுத்த இயலுமா என்ற தயக்கத்திலேயே பல ஆண்கள் நடுங்கிவிட, இந்தப் பயத்தின் காரணமாகவே நிஜமாகவே அவன் மனைவியை அவனால் அனுபவிக்க முடியாமல் போகிறது.
அதைப்போன்றே ஆண்களின் உருவத்திற்கும் ஆண் குறிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நம்மில் பலர் குண்டான, தடித்த ஆண்களுக்கு நீண்ட ஆண்குறி இருக்கும் என்றும், ஒல்லியான ஆண்களுக்கு தடிமன் குரைந்த சின்னதான ஆண்குறியே இருக்கும் என்றும் நினைக்கின்றனர். ஆனால், இது தவறான கருத்தாகும். பல குண்டான ஆண்களுக்கு சின்னதாக ஆண்குறியும், பல ஒல்லியான ஆண்களுக்கு தடித்த ஆண்குறியும் இருக்கும். அதனைப் போன்ற உடலின் எடை குறைந்தாலும், கூடினாலும் ஆண்குரியின் தடிமன் மாறாமல் ஓரே மாதிரியாகத்தான் இருக்கும்.
நம் உடலில் சுருங்கி விரியும் தன்மையுடைய உறுப்பான ஆண்குறியைப் பற்றி இன்னொரு தவறான கருத்து நிலவி வருகிறது. ஆண்குறி சிறியதாக இருந்தால் தன் மூலம் குழந்தை பிறக்காது, தன்னால் அப்பாவாக முடியாது என்ற தவறான கருத்துதான் அது. இப்படிப்பட்ட தவறான கருத்தையெல்லாம் முதலில் மூட்டைகட்டி வையுங்கள். ஆண்குறியின் அளவிற்கும் குழந்தை பிறப்பிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.
ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?
பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின்போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர். அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உரவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். அல்லது சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து....🥀🥀

0 Comments
YOUR COMMENT THANKYOU