பதில்: தேசிய சுகாதார அறிவியல் அமைப்பின் தகவலின் படி, விறைப்பு நிலையில் ஐந்தில் இருந்து ஏழு அங்குலம் வரையிலும். இயல்பான நிலையில் 3 முதல் 3.5 அங்குலம் வரையிலானது சராசரி அளவு என கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஆண்குறி அளவினால் உடலுறவில் தாக்கத்தில் ஏற்படும் என்று கூற இயலாது. பெண்ணுறுப்பில் சென்சிடிவான பகுதியான பெண்குறியின் நுழைவாயில் இருந்து உள்ளே இரண்டு அங்குலம் வரை தான் இருக்கிறது. எனவே, அந்த இரண்டு அங்குலத்தை தாண்டி ஆண்குறி எத்தனை தூரம் சென்றாலும் எந்த உணர்ச்சியும் அளிக்காது.
ஐம்பதாயிரம் ஆண்கள் பங்கெடுத்துக் கொண்ட ஒரு ஆன்லைன் சர்வேவில், 85% ஆண்கள் தங்கள் ஆண்குறி அளவின் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள் என அறியப்பட்டது. மேலும், 45% பெண்கள் துணையின் ஆண்குறி அளவு குறித்து பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. உண்மையில் பெண்கள் துணையின் பர்சனாலிட்டி மற்றும் அழகியல் பழக்கங்கள் குறித்து தன் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
குறிப்பு: மிக சிறிய ஆண்குறியை (மைக்ரோ பெனிஸ் – விறைப்பின் போதிலும் மூன்று அங்குலத்திற்கு குறைவான அளவில் இருப்பது) என ஒரு வகை இருக்கிறது. இத்தகைய வகையை சார்ந்த ஆண்கள் உகந்த மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

0 Comments
YOUR COMMENT THANKYOU