இது, மாதவிடாய் போலவே ஆண்களுக்கு வராது. ஏன் வராது?? ஏன்னா அவங்களுக்கு கர்ப்பப்பை இல்லை. சோ இது பெண்களுக்கான பிரச்சனை..! estrogen எனப்படும் பெண்மைதன்மையை உறுதிபடுத்தும் ஒரு ஹார்மோனின் விளையாட்டு தான் இந்த வெள்ளைபடுதல்…!
பிறந்த குழந்தைக்கும், வயதுக்கு வருவதற்கு முன்னும், பின்னும், மாதவிடாய்க்கு முன்னும் பின்னும், கர்ப்ப காலத்திலும் இது சாதாரணமாக இயற்கையாக சுரக்கும்… இது சுரப்பதால் எந்த வித பாதிப்பும் இல்லை…!
யோனியின் சுவர்களுக்கு ஜவ்வுத்தன்மையை அளிக்க… யோனி/கர்ப்பப்பையின் கெமிக்கல் பேலன்சை சரி செய்து நுண்கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க… estrogen யோனியில் இந்த திரவத்தை உற்பத்தி செய்கிறது…!
கண்ணில் கண்ணீர், வாயில் உமிழ் நீர், நுரையீரலில் சளி போல இது கர்பப்பைக்கு நன்மை அளிக்கும் ஒரு திரவமே… நிற்க……, எப்படி சளி, நோய் கிருமிகளால் பாதிக்கபட்டு… நமக்கு தொல்லை அளிக்குமோ அதே போல பல்வேறு வகையான நோய் கிருமிகள் இந்த திரவத்தை தாக்கினால்…. பிரச்சனை ஆரம்பம்.
வைரஸ், பேக்டீரியா, ஃபங்கஸ், போன்ற நோய் கிருமிகள் சுத்தமின்மையாலும், தொற்று நோயாகவும், பாலியல் நோயாகவும் பரவும் வாய்ப்புண்டு. இந்த சமயத்தில் எரிச்சல், அரிப்பு, வலி போன்றவையும் அதிக திரவ வெளிப்பாடும் ஏற்படும். இதற்கு மருத்துவம் தேவை.
estrogen ஒரு செக்ஸ் ஹார்மோன் அதனால் செக்ஸ் வைத்துகொள்ளும் சமயங்களில் யோனியின் எலாஸ்டிக் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இது அதிகமாக வெளிப்படும். இதுவும் மிக இயற்கையான விஷயமே…
சுய இன்பத்தின் மூலம் உடலின் சக்தி வீணாவதாக ஆண்கள் மத்தியில் ஒரு குருட்டு நம்பிக்கை இருப்பது போல் பெண்கள் மத்தியில் வெள்ளை படுதலால் உடலின் சக்தி வீணாவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது..
அது உண்மை இல்லை… மாறாக பலகீனமான உடலுக்கு, ஊட்ட சத்து குறைப்பாட்டினால் இது அதிகமாக ஏற்படும். அதற்கு வெள்ளைபூடு, கருப்பட்டி, எள்ளு, பப்பாளி அருமருந்தாகும்…
ஆரோக்கியமாக சாப்பிட்டும் இது ஏற்பட்டால்… உணவை உறிஞ்சும் சக்தியை அல்சர் போன்ற காரணங்களால் நீங்கள் இழந்திருக்க வாய்ப்புண்டு… அதற்கு ஹோமியோபதி எளிமையான தீர்வை அளிக்கும்...
Dr Sarav Urs

0 Comments
YOUR COMMENT THANKYOU