♥அவர்களது மலர்வனமான மனதில், பூத்து, குலுங்கி, வாடி மறைந்த எண்ணற்ற இரகசியங்கள் புதைந்திருக்கின்றன.
பெண்கள் ஒரு போதும் தங்களை பற்றிய இரகசியங்களை கசியவிடுவது இல்லை., தாலிக் கட்டிய கணவனாக இருந்தாலும் கூட.
♥தங்களை பற்றிய சில முக்கியமான தகவல்களை சிறிதளவு கூட தெரியாமல் பாதுகாப்பதில் பெண்கள் பலேக் கில்லாடிகள்… இது அவர்களின் பாதுகாப்புக்காகவே. ஆண்களிடம் பெண்கள் மறைக்கும் ரகசியங்கள் பற்றிப் பார்க்கலாம்.
♥1.ஆண்களை போலவே பெண்களுக்கும் உடலுறவுக் குறித்து அனைத்து விஷயங்களும் தெரியும். ஆனால், எங்கு, எப்படி உடலுறுவு வைத்துக் கொண்டால் தங்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் வெளிப்படையாக கூறமாட்டார்கள்
♥2.ஆண்களுக்கு பல முன்னாள் காதல்கள், விருப்பங்கள், ஆசைகள் என்று பல இருக்கும். அதேபோல , பெண்களுக்கு இருக்காதா என்ன. ஒருவேளை தங்களது முன்னாள் காதலனையோ, அல்லது பிடித்தமான நபர்களையோ கண்டால் பெண்கள் அதைப்பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்கள் ..
♥3.ஆண்கள் எப்போதும் கெத்து பார்ட்டிகள். தான் இத்தனை பேரை காதலித்தேன், இதுவெல்லாம் செய்தேன் என்று பட்டியலிட்டுக் கூறிவிடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படி இல்லை, சிரித்து, சிரித்தே மழுப்பும் குணம் உடையவர்கள். இதுப் போன்ற விஷயங்களை எல்லாம் அவர்களிடம் கொக்கிப் போட்டு வாங்குவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
♥4.தங்களது முன்னாள் காதலைப் பற்றி மற்றவர்கள் புகழ்ச்சியாக பேசியிருந்தாலும், அந்த காதலின் போது அவர்கள் ஏதேனும் சிறப்பாக செய்திருந்தாலும் கூட அவற்றை பெண்கள் கூறமாட்டார்கள்.
♥5.தாங்கள் ஒருவரிடம் பழகியதையும், அவனை விட்டு விலகியதையும் பெண்கள் ஆண்களிடம் கூறுவதில்லை.
ஒருவேளை அதைக் கூறினால், தங்களை தவறாக புரிந்துக் கொள்வார்களோ என்று அவர்கள் அஞ்சுவது உண்டு. ஆனால், அதை மறைப்பதும் கூட ஓர் ஏமாற்று வேலை தான் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்.
♥பெண்கள் இப்படி மறைக்க காரணம் ஆண்களே. பெண் மனம் விட்டு கூறும் சில விசயங்களை ஆண்கள் தவறாக புரிந்து சண்டை போடுவதும். சந்தேக படுவதும் .. தான் பெண்களின் பயத்துக்கு காரணம்.
♥தான் பலபேரை காதலித்ததாக பெருமையாக கூறும் ஆண்.. இதையே பெண் தன்னையும் ஒருவன் காதலித்தான்.. என கூறிவிட்டாள் போதும் விவாகரத்து வரை போய்விடுவான்...

0 Comments
YOUR COMMENT THANKYOU